Saturday, December 29, 2012





பெண்ணின் கற்பில் ஆதாயம் தேடும் காங்கிரஸும் , இந்திய அதிகாரவர்க்கமும்

//டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச பலனின்றி பரிதாபமாக இறந்தார்.//


என் குடும்பத்தில் யார் இறந்தாலும் நான் இது வரை மனம் கலங்கியது இல்லை. ஆனால் இந்த பெண்ணிற்கு நேர்ந்த நிலைமையை எண்ணி கடந்த வாரம் முழுவதும் வருத்தப்பட்டு கொண்டிருந்தேன், அவளை சிங்கப்பூருக்கு அனுப்பிய போதே சந்தேகப்பட்டேன் இந்திய அரசாங்கம் ஏதோ நாடகம் ஆடுகிறது என்று. இன்று வந்த செய்தியை அறிந்த பின் மனம் கலங்கியது மட்டுமல்லாமல் கண்ணீரும் வந்தது என் கண்ணில்..


இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சிறு பெண் குழந்தையில் இருந்து பெரிய பெண்கள் வரை தினசரி பலாத்காரம் செய்யப்பட்டும் சில நேரங்களில் அவரகளும்  கொலை செய்யப்பட்ட செய்தியை பல தடவை படித்து இருந்தும் அது மிகச் சிறிய வருத்தத்தை மட்டும் தந்தது என்பதுதான் உண்மை. ஆனால் இந்த பெண்ணின் கற்பழிப்பு மட்டும்தான் என்னை மிகவும் அதிகம் பாதித்தது. உண்மையில் சொல்லப் போனால் ஏதோ என் கூடப் பிறந்த சகோதரிக்கு நேர்ந்தது போல ஒரு உணர்வு தோன்றி என் இதயத்தை ஏதோ ஒன்று கசக்கி பிழிவது போல இருக்கிறது.

இதற்கு காரணம் என்னவென்று நினைத்து பார்த்தால் அந்த பெண் கற்பழிக்கப்பட்ட முறையை பற்றி இந்த மீடியாக்கள் மிக அதிக அளவு எழுதியது மிக முக்கிய காரணம் எனலாம். தினசரி எந்த செய்திதாளை பார்த்தாலும் அல்லது சோஷியல் வெப்சைட்டுகளை பார்த்தாலும் அந்த பெண்ணை பற்றிய செய்திதான். ஒவ்வொரு தடவையும் அதை வாசிக்கும் போது மனதில் மிக அழுத்தம் ஏற்பட்டு ஏதோ எனது குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த சம்பவம் போலவே தோன்றியது.

ஏன் டில்லியில் நடந்த இந்த கற்பழிப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து மீடியாக்களால் பெரிது படுத்தப்பட்டது என்பதை கூர்ந்து கவனித்தால் அதில் ஆளும் அதிகாரவர்க்த்தின் சுயநலம் அதன் பின் புலத்தில் இருப்பதை படித்தவர்கள் எவரும் புரிந்து கொள்வார்கள். ஆளும் அதிகாரவர்க்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் போதுதெல்லாம் அந்த ஆளும் வர்க்கம் மக்கள் உண்ர்ச்சியை தூண்டும் விஷயத்தை ஊதி பெரிதாக்கி மற்ற விஷயங்களை மழுங்கடிக்கச் செய்வார்கள் அதுதான் இந்த தடவையும் நடந்து இருக்கிறது. அதன் ஒருபகுதியாகவே பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் இந்த விஷ்யத்தில் பெரிதும் அக்கறை காட்டுவது போல நாடகமாடினார்கள். பிரச்சனையை பெரிதுபடுத்திய அரசியல் தலைவர்களே மக்களின் பாதுகாப்பிற்கு துணை நிற்பதுபோல வேஷம் போடுகிறார்கள்

இப்படி நாடகம் ஆடுவதன் மூலம் சிறுவாணிகத்தில் அந்நிய முதலிடு மற்றும் பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியில் பேச வேண்டிய பிரச்சனைகளும் இப்போது இந்த செய்தியால் மறக்கடிக்கப்பட்டுள்ளன என்பது மட்டும் உண்மை. இந்த கற்பழிப்பு செய்தி அடங்கும் போது எங்காவது குண்டு வெடிக்கலாம் அல்லது போபால் விபத்து போல ஏதாவது நடக்கலாம் அல்லது வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் அதைபற்றி மக்கள் பேச ஆரம்பிக்கும் போது பழைய செய்திகள் மக்களிடம் வலுவிழ்ந்து போகும் அதன் பிறகு நடக்கும் தேர்தலில் வால்மார்ட் போன்ற கம்பெனி கொடுத்த கைகூலியை பெற்ற தலைவர்கள் அதில் ஒரு பகுதியை இலவசமாக கொடுத்து வெற்றிப் பெற்று ஆட்சி அமைப்பார்கள்

இதுதான் நடக்கும் மாற்றம் ஏற்படாது கற்பழிப்புக்கள் ஸ்பெக்ர்ரம் போன்ற ஊழல்கள் தொடர்ந்து நடை பெறும் மக்களும் நம் இந்திய வல்லரசாகிவிடும் என்று அப்துல்காலம் சொன்னது போல கணா மட்டும் கண்டு கொண்டிருப்பார்கள். ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டும் இதயம் நொருங்கி ரத்தக் கண்ணிர் வடித்து கொண்டிருக்கும். இந்திய மக்களும் மாறப்போவதில்லை அரசியல் வாதிகளும் மாறப்போவதில்ல்லை இந்தியாவும் வல்லரசாகப் போவதில்லை


ஒன்று மட்டும் நிச்சயம்.. தன் எதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்காத சமுதாயம் நாசமாய்ப் போவதை யாராலும் தடுக்க முடியாது.


வேதனையுடன்
உங்கள் மதுரைதமிழன் எழுதியது

3 comments:

  1. வேதனை தான் மிஞ்சுகிறது ....! ஆனால் இதை பற்றி யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை மாறாக அதை பற்றி தான் சிந்தித்து கொண்டிருகிறார்கள்
    மீடியாக்கள் பற்றி நீங்கள் சொன்னது மறுக்க முடியாத உண்மை தோழா .... மக்களுக்கு எதை புரிய வைக்க வேண்டுமோ அதை விட்டு அந்த கொடுமை நிகழ்வை நன்றாக வெளிபடுதினார்கள் ....... ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நினைக்கும் போது தான் வேதனை அதிகமாக எழுகிறது ......

    ReplyDelete
  2. கண்டிப்பா முக்கிய விசயஙகள் இந்த விசயத்தின் மூலம் திசை திருப்பி விடப்பட்டது

    ReplyDelete
  3. டும் டும்..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக http://vitrustu.blogspot.in/2013/01/blog-post.html#more.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.