Sunday, December 16, 2012




 
Just Sample..That's it !
சொர்க்கமே  என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா?  பாடுவது அமெரிக்கனா அல்லது இந்தியனா?

 அல்லது

வாழ்வுக்கு பாதுகாப்பு அமெரிக்காவிலா அல்லது இந்தியாவிலா ?

அமெரிக்காவின் கனெடிக்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுக் அப்பறம் நமது இந்திய மக்களிடையே அமெரிக்கா என்றால் எல்லோரிடமும் துப்பாக்கி இருப்பதுமாதிரியும் அதை வைத்து தமிழ்படத்தில் வருவது போல ட்ஷ்யும்..ட்ஷ்யும்.. என்று சுட்டு தள்ளுவது மாதிரியும் கற்பனை பண்ணிக் கொண்டு என்னமோ அமெரிக்காவில் இருப்பது பாதுகாப்பு இல்லை.. சொர்க்கமே  என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்று பேசியும் எழுதியும் வருகிறாரகள்.

ஆனால் உண்மையிலேயே இங்கு உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறதா அல்லது இந்தியாவில் உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று பார்த்தால் அமெரிக்காவில் அதிக பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லாம். சில பேர் இதை மறுத்து பாருங்க துப்பாக்கி வைத்திருப்பதால்தானே இந்த கனெடிக்கெட் நிகழ்ச்சி நடந்தது ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு நிகழ்ச்சி படத்தில் மட்டுமே நடக்க கூடிய நிகழ்ச்சி என்று வாதிக்கலாம்.

ஆனால் இந்த மாதிரி நிகழ்வுகள் தினசரி நடப்பதில்லை. ஆனால் இந்தியாவில் சிறு சிறு நிகழ்வுகள் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமே  .அக்கறை இல்லாமலும் சரியான பயிற்சி இல்லாமலும் கார் லாரி பஸ் ரயில் மூலம் நடக்கும் விபத்து மூலம் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது...இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் மிக குறைவாகவே இருக்கிறது.( குடித்துவிட்டு, காரை ஒட்டும் போது டெக்ஸ்ட் பண்ணிக் கொண்டே ஒட்டுவதன் மூலம் விபத்து ஏற்படுவது இங்கும் நடக்கிறது, நான் இங்கு சொல்ல வருவது முறையான பயிற்சி இல்லாதவர்களுக்கு  லைசென்ஸ் கொடுத்து ஒட்ட அனுமதிப்பதன் மூலமும் தேவையான அளவு ரெஸ்ட் எடுக்காமல் ஒட்டுவது, போட்டி போட்டு கொண்டு ஒட்டுவது மூலம் இந்தியாவில் ஏற்படும் உயிர் இழப்பைதான் இங்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்)

அடுத்தாக டாக்டர்களின் சுயநலத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்... அது போல அரசியல் தலைவர்களின் சுய நலத்தால் எத்தனை பேர் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கிறது

உதாரணமாக உடல் நலக்குறைவோ அல்லது விபத்தோ ஏற்பட்டால் ஒரே ஒரு போன் கால் பண்ணினால் போலிஸும் ஆம்புலன்சும் 5 நிமிடங்களுக்குள் வந்து நம்மிடம் வசதி இருக்கிறதோ இல்லையோ உடனே ஹாஸ்பிடலுக்கு எடுத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கிறார்கள்....அது போல எமர்ஜென்ஸி நிலைமையில் எந்த ஹாஸ்பிடலுக்கு சென்றாலும் அவரிடம் பணம் இல்லையென்றாலும் உயிருக்கு போராடுபவர்களாக இருப்பவர்களுக்கு மறுக்காமல் சிகிச்சை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்ற சட்டமே இருக்கிறது இங்கே. ஆனால் இந்தியாவில் உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை எந்த நேரமாக இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு எடுத்து செல்லும் போது பணப் பையில் ஆயிரக்கணக்கான அளவில் எடுத்து செல்லவில்லை என்றால் சிகிச்சை மறுக்கப்பட்டு உயிர் இழப்பு  ஏற்படுகிறது என்பதை யாரலும் மறுத்து சொல்ல முடியாது என்பது மனதை சுடும் உண்மைதான்.


இந்தியாவில் குழந்தை பிறக்கும் போது இறக்கும் தாய்மார்களும் குழந்தைகளும் எத்தனை எத்தனை எத்தனை

அது போல முறையற்ற முறையில் நடக்கும் தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் மூலம் நடக்கும் உயிரிழப்ப்புகள் எத்தனை எத்தனை உதாரணமாக சிவகாசியில் தீபாவளி முன்பு  நடந்த வெடிவிபத்தால் இழந்த உயிரிழப்புதான் எத்தனை எத்தனை... அதுமாதிரி இன்னும் எத்தனை தொழிற்சாலைகள் பாதுகாப்பின்றி இன்னும் செயல்பட்டு கொண்டிருக்கிறது..

அளவுக்கும் மீறி அதிக அளவு லோடு ஏற்றி சென்ற லாரி பின்னாடி வந்து பஸ்ஸில் மோதி இறந்தவர்கள் எத்தனைபேர்?

சமிபத்தில் நீயூஜெர்ஸியில் கெமிக்கல் ஏற்றி சென்ற லாரி விபத்திற்கு உண்டான போது அதன் மூலம் காற்றில் மாசு ஏற்பட்ட போது உடனே அந்த டவுனில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு செல்லுமாறு அறிவுருத்தப்பட்டு அதன் பின் சுற்றுபுறம்  நவின விஞ்ஞான முறையில் சுத்தப்படுத்தப்பட்டு அதன் பின் தான் அந்த இடத்திற்கு வர அனுமதிக்கபட்டார்கள். அந்த கெமிக்கல் மூலம் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் அது வருங்காலத்தில் உடல்நிலை குறைவுக்கு வழிவகுக்கும் என்று கருதியதால் இந்த பாதுகாப்பு முயற்சி எடுக்கபட்டது, இப்படிபட்ட பாதுகாப்பு மூறைகள் இந்தியாவில் கைகொள்ளப்படுமா?


மூன்று வருடங்களூக்கு மூன் ஒரு வித வைரஸ்ஸினால் உலகில் உயிர் இழப்பு ஏற்பட்ட போது அந்த வைரஸ் அமெரிக்காவில் தாக்கி பல உயிரிழப்பு ஏற்ப்ட்ட போது அதற்க்காக கண்டுபிடிக்கபட்ட மருந்தை ஏமெர்சன்ஸி வேகத்தில் மில்லியன் அளவில் தயார் செய்யப்பட்டு அதை முதலில் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாகவும் அதன் பின் பெண்கள் முதியவர்களுக்கும் கொடுக்கப்பட்டது அந்த மருந்துக்கு உலக அளவில் தட்டுப்பாடு இருந்த போது மக்களை காப்பாற்ற உலகின் மற்ற நாடுகளைவிட தன் மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பு செய்த நாடு அமெரிக்காவாகத்தான் இருக்கும்.


ஆனால் இந்தியாவில் டெங்குவினால் உயிரிழப்பு ஏற்பட்ட போது அதனால் ஏற்பட்ட உயிரிழப்பை மறைக்க செய்தது நமது இந்திய அரசாங்கம்தான்


வசதி படைத்த வயதானவர்கள் வீட்டில் இருக்கும் போது பணத்திற்காக கொள்ளை அடிக்கும் போது பலியான உயிர்கள் எத்தனை எத்தனை...

அதனால்தான் சொல்லுகிறேன் சொர்க்கமே  என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்று பேசியும் எழுதியும் போலியாக வாழாமால் நாம் இருக்கும் இடத்தை உண்மையில் சொர்க்கமாக மாற்றி வாழ முயற்சிக்க வேண்டும்


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

8 comments:

  1. ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.நன்றி.

    ReplyDelete
  2. பதிவின் கருத்துடன் முழுதும் ஒத்து போகிறேன்.

    எதுவுமே அதிகமாக இருக்கும் போது அது மலிவாகிறது. மனித உயிர் அதிகம் உள்ள நம் நாட்டில் அது மலிவாக நோக்கப்படுவது ஒன்றும் வியப்பு அல்ல.

    புத்தகத்தை, பணத்தை, பூமியை, நதியை, உணவை கடவுளாக பார்க்கும் நாம், சக மனிதனை மனிதனாக பார்க்க தொடங்கினாலே போதும். அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம்.

    ReplyDelete
  3. அந்த கடைசி வரிகள் மிகவும் யோசிக்கவேண்டியவைகள் நண்பா...!

    ReplyDelete
  4. அப்படிப் போடுங்க.

    ReplyDelete
  5. முக்கியமா ஆம்பூரைச் சுற்றி தோல் பதனிடும் தொழிலால் ஒரு மாவட்டமே விஷமாகிப் போனது, எவன் கேட்டான். திருப்பூரில் நொய்யல் ஆறு........நாதியில்லாத ஊருப்பா இது........ Your views are well justified.

    ReplyDelete
  6. அதனால்தான் சொல்லுகிறேன் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்று பேசியும் எழுதியும் போலியாக வாழாமால் நாம் இருக்கும் இடத்தை உண்மையில் சொர்க்கமாக மாற்றி வாழ முயற்சிக்க வேண்டும்.

    அழிவை நாடும் உலகம் உணருமா ?

    ReplyDelete
  7. அருமையா சொன்னீங்க!....

    ReplyDelete
  8. உங்கள் பதிவுகள் எல்லாம் எப்பொழுதும் உண்மை என்னும் தீபெட்டியை உரசி பார்கின்றன
    இந்த பதிவில் நீங்கள் சொலலி இருப்பது சரி தான் நாமே நமக்கு எமனாகி போய்விட்டோம்
    மெத்த முன்னேறியதில் முதுகெலும்பை கழற்றி வைத்து விட்டோம் சுமை என்று

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.