Wednesday, December 26, 2012





ஏன் இந்த விபரிதம்...இது எங்கே போய் முடியப் போகிறது?

பில் காஸ்பி ஷோவை பார்த்து காப்பி அடித்து இப்போது தமிழில் சன் டிவியில் ஒரு புரோகிரம் வருகிறது அது மிகவும் கேவலமாக இருக்கிறது அதை தற்செயலாக நேற்று சன் டிவியில் பார்த்த போது அதன் தொகுப்பாளர் அதில் வரும் குழந்தையிடம் உனது அப்பா அம்மாவை திட்டுவாரா? என்ன வார்த்தை சொல்லி திட்டுவார் என்று தூண்டி துருவி கேட்டுக் கொண்டிருந்தார். இதுதான் அந்த தொகுப்பாளர் கேட்கும் நகைச்சுவை கேள்வி நல்ல வேளை அந்த குழந்தை ஏதோ உளறியது. ஒரு வேளை அந்த தந்தை என்றோ கோபத்தில் தன் மனைவியை ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டி அது அந்த குழந்தையின் மனதில் அது பதிந்து அதை சொல்லி இருந்தால் அந்த தந்தைக்கு சமுகத்தில் எந்த அளவு மரியாதைகிடைக்கும் அதே நேரத்தில் அந்த தாயை மிக ஏளனமாக உறவினர்கள் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்குமே? இது கூடா புரியாத மரமண்டைகள் தான் அந்த நிகழ்ச்சியை நடத்துகின்றாரா?

அதே நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்கிறார். வீட்டில் உனக்கு யாரைப் பிடிக்கும் யாரைப் பிடிக்காது? குழந்தை தனக்கே உரிய குழந்தைத்தனத்துடன் சொல்கிறதது. எனக்கு அம்மாவைப் பிடிக்கும். பாட்டியைப் பிடிக்காது அடுத்ததாக ஏன் பாட்டியைப் பிடிக்காது?' அதன் பதில் பாட்டி திட்டிக்கிட்டே இருப்பாங்க.

 சற்று நினைத்துப் பாருங்கள். உலகம் முழுவதும் அந்த திட்டுகிற பாட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை அவர் எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார். தன்னை இந்த கேலிக்கு ஆளாக்கிய குழந்தையின் மீது அவருடைய அன்பு மாறுபாடில்லாமல் தொடருமா? பின்னொரு நாளில் சொல்லிக்காட்ட மாட்டாரா? அந்த பாட்டி, குழ்ந்தையின் அம்மாவிற்கு மாமியாராக இருந்தால் அதன் பின் வீட்டில் என்ன நடக்கும் என்று சொல்லியாத் தெரியவேண்டும். ஏன் இப்படி வேண்டுமென்றே ஒரு குடும்பத்துக்குள் விஷத்தை விதைக்க வேண்டும்.

 அதே போல விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சிகளில் அப்பா பிள்ளை ,கணவன் மனைவி, மாமியார் மருமகள் இருவரையும் எதிர் அணியில் இருத்தி சண்டை போட்டுக்கொள்ளச் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில்போய் எப்படிப் பேசிக்கொள்வார்கள். அவர்களது வாழ்க்கை பொய்யா? அல்லது இந்த டிவி நிகழ்ச்சியே ஒரு முன்திட்டமிட்டு நடிக்கப்பட்ட போலி நாடகமா? எது உண்மை? சன் மற்றும் விஜய் டிவி சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.


அது போல கேன்டிட் கேமிரா போன்ற நிகழ்ச்சிகளையும் வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்துள்ளன நமது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள். யாராகிலும் ஒருவர் திடீரென்று கத்தியுடன் வந்து உங்கள் முன்னால் நின்றால் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கும். இதற்காக சாலையில் வருவோர் போவோரிடமெல்லாம்  ரவுடி வேடத்தில் ஒருவர் கத்தியைக் காட்டியபடி திடிரென்று முன்தோன்றுவார். இவர்களின் கேலிக்கு ஆளாகும் நபர்களில் யாரேனும் ஒருவருக்கு அச்சத்தால் அசம்பாவிதம்  ஏற்பட்டு இறந்துபோனால் அதற்கு யார் பொறுப்பு?

அதுபோல சூப்பர் சிங்கர் ஷோவில் சிறு குழந்தைகள் காதல் பாட்டை பாடும் போது சில சமயங்களில் இன்னும் அதிக உணர்வோடு பாட அறிவுரை வழங்குவார்கள் சிறு வயதில் காதல் உணர்வை அதிகம் எப்படி உணர முடியும் அப்படி செய்வது பிஞ்சிலே பழத்தை பழுக்கச் செய்வது போலதானே?

அது போல டான்ஸ் புரோகிராமில் சிறுவர்களை படத்தில் வருவது போல அரை குறை ஆடைகளுடன் காம உணர்வை தூண்டும் விதத்தில் ஆடச் செய்வதும் மிக கேவலம்தானே? குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவது நல்லதா? 

அதே போல இரவு 11 மணிக்கு மேல் ஓளி பரப்பாகும் இரவு நேர நிகழ்ச்சிகள் தாம்பத்ய உறவில் முழு திருப்தி, ஆண்மையை அதிகரிக்க, ஆண்மை குறைவு, போன்றவை குறித்து வரும் நிகழ்சிகள் முற்றாக தடை செய்யப் வேண்டும்.  பல நகர வீடுகளில் பெரியவர்கள் சீக்கிரமே உறங்க போய் விடுகிறார்கள். 10-25 வயது பிள்ளைகள் தான் இரவு 12 - 3 மணி வரை விழித்திருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் இந்த நிகழ்சிகளை பார்க்காமலா இருப்பார்கள். ஒரு சேனல் என்றால் பரவாயில்லை. வரிசையாக எல்லா சேனல்களுமே இது போன்ற நிகழ்சிகள் தானனே ஒளிபரப்புகின்றன.

தனியார் டிவி சேனல்கள் வியாபாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு எதையும் செய்யாமல் இருக்கிறது. விவரம் தெரிந்தவர்களும் ரசிக்கிறார்களே தவிர, அதன் விபரீதத்தை இன்னும் உணராமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

இன்றைய செய்திதாளில் நான் பார்த்த செய்தி : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது' என, "டிவி' சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.

இதை உத்தரவாக மட்டுமில்லாமல் அதை சட்டாமாக ஆக்கி அதை செயல்படுத்த வேண்டும் அதை இந்திய அரசாங்கம் செய்ய முன் வருமா?

அதுமட்டுமல்லாமல் மீடியா மூலம் தவறாக சித்தரிக்கபடும் பால் (gender ) குற்றங்களை  படித்து உங்கள் ரத்தம் கொதிக்கலாம் அதற்கான எதிர்ப்பை நாம் இங்கு பதிவு  செய்யலாம் .Radio/TV/Web related complaints can be submitted to the ElectronicMedia Monitoring .  Complain in the right forums about sexist media 


The State has a duty to protect its citizens from broadcast of undesirable content. All developed democracies of the world regulate the broadcasting sector and the content being broadcast. Notwithstanding this, regulation of content is a legitimate function which the Ministry of Information and Broadcasting has to discharge in response to grievances and complaints, court intervention etc. The setting up of a well equipped technologically modern facility is a meaningful tool to check the violations of the Codes enshrined in Cable Television Networks(Regulation) Act 1995 and rules framed there under, license conditions for private FM radio and DTH etc. The revised up-linking guidelines and down-linking guidelines for channels beamed at Indian viewers also require monitoring of violations and remedial measures thereto.

Social policy goods provided via public and commercial broadcasting channels include:

    Children’s programming
    Regional and local content
    Documentary programming
    Cultural /Language programming.
    Reality shows and feature films, news, sport, documentaries and other information programming such as talk shows, music videos and variety programming.

All the above require constant monitoring for violations and for protection of the viewers' rights.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

6 comments:

  1. தங்கள் கருத்தை வரவேற்கின்றேன்

    ReplyDelete
  2. சரியான கருத்துகள். ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  3. நாளை வலைச்சரத்தில் உங்க பதிவை பகிர்ந்துள்ளேன்! நன்றி!

    ReplyDelete
  4. அருமையான பதிவு... உணர்பவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.

    ReplyDelete
  5. தங்கள் கருத்துக்கு மாற்று ஏதும் இல்லை . நல்ல பதிவு. நன்றி அய்யா .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.