Friday, December 7, 2012





 
ரஜினியை வைத்து நக்கல் பண்ணும் அரைவேக்காட்டு விகடனின் நிருபர்கள்


ரஜினியை  வைத்து காமெடி பண்ணும் விகடன் நிருபர்கள் இந்த வார ஆனந்தவிகடனில் நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்? என்ற தலைப்பில் எழுதி அதற்கு 63 காரணங்களை கூறி இருக்கிறார்கள்.

ரஜினியை பற்றி அவர்கள் எழுதிய காரணம் ரஜினி புகழை பரப்ப வேண்டுமென்பதல்ல தனது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். ரஜினியைப் பற்றி எழுதினால் விகடனை வாங்காத ரஜினி ரசிகர்களும் அவரைபற்றி நாம் அறியாத தகவல் வந்திருக்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள் என்று நினைத்துதான் அதை வெளியிட்டு உள்ளார்கள் இப்படித்தான் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்

விகடனை பார்க்கும் போது ஒன்று மட்டும்  நன்றாக தெரிகிறது விகடனின் நிருபர்கள் அரைவேக்காடாகத்தான் இருக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்தநாளுக்காக அவரை கெளரவபடுத்தி செய்தி வெளியிட நினைத்தால் அவர் செய்த நல்ல காரியங்களை  அறிந்து(அவர் குடும்பதினருடன் பேசி பேட்டி எடுத்து ) அதை வெளியிட்டு இருந்தால் அதை நாம் பாராட்டலாம். ஆனால் அவர்கள் செய்தது அரைவேக்காட்டான  யாருக்கும் உபயோகம் இல்லாத செய்தியை செய்தியை வெளியிட்டு இருப்பதுதான் அவர்கள் செய்த சாதனை.


ரஜினி ஒரு நல்ல மனிதரை அவர் தன்னை பெற்று எடுக்கவில்லையாலும் அவரை தனது தந்தையாக ஏற்றுக் கொண்டிருப்பதாக இணையத்தில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...அது உண்மையோ அல்லது ரூமரோ தெரியவில்லை ஆனால் அது போன்ற நல்ல செய்திகளை வெளியிட்டு இருக்கலாமே? தமிழகத்தின் புகழ் பெற்ற இதழனான விகடன் குழுமத்தாற்கு ரஜினி பண்ணிய ஒரு நல்ல காரியம் கூட கண்ணில் படவில்லை என்பது எனக்கு மிக ஆச்சிரியமே அல்லது உண்மையில் அவர் ஒன்றும் நல்ல காரியம் பண்ணதான் வில்லையா? இதில் எது உண்மை?

எனக்கு புரியவில்லை? உங்களுக்கு புரிந்தால் எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்

இதை பதிவாக வெளியிட்டால் விகடனின் பொறுப்பாசிரியர் பொறுப்பா நல்ல விஷயங்களை சேகரிக்க நிருபர்களுக்கு கட்டளை இடுவார்கள் என நினைத்துதான் வெளியிட்டு இருக்கிறேன். இப்படி பட்ட விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்று கருத்து தெரிவிப்பதன் மூலம்தான் கொஞ்சமாவது நல்ல விஷயங்களை வெளியிடச் செய்ய முடியும். இப்படி சொல்லவில்லையென்றால் இந்த செய்திகள் நமக்கு பிடித்து இருப்பதாக தொடர்ந்து வெளியிட்டு வருவார்கள் என்னங்க நான் சொல்லவது சரிதானே?

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

டிஸ்கி : அப்படி என்ன அரைவேக்காட்டுதனமாக விகடனின் நிருபர்கள் ரஜினியை வைத்து நக்கல் பண்ணி இருக்கிறார்கள் என்று ஆவலா மக்கா அதை எனது அடுத்த பதிவில் வெளியிடுகிறேன் அதற்குள் விகடனை வாங்க ஒடாதீர்கள் காசை கரியாக்காதீர்கள். அவர்கள் நல்ல விஷயங்ளை வெளீயிடும் வரை பொறுத்து இருங்கள்.

2 comments:

  1. உண்மைதான்! விகடன் கொஞ்சமென்ன? நிறையவே மாறி விட்டது! நல்லதொரு பகிர்வு!

    ReplyDelete
  2. எப்படியோ ரஜினி நிறையப் பேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.