உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, November 26, 2012

ஜூனியர் விகடன் நிருபர்கள் தற்குறிகளா? அல்லது பொறுப்பாசிரியர் பொறுப்பற்ற ஆசிரியாராகிவிட்டாரா ?


ஜூனியர் விகடன் நிருபர்கள் தற்குறிகளா? அல்லது பொறுப்பாசிரியர் பொறுப்பற்ற ஆசிரியாராகிவிட்டாரா ?ஆனந்த விகடனுக்கு என்று பரம்பரை பரம்பரையாக   வாசகர்கள் கூட்டம் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துக் கொண்டிருக்கிறது.   அந்த நிறுவினத்தில் இருந்து வெளிவரும் ஜூவி காலத்திற்கேற்ப இன்வெஸ்டிகேட் , அரசியல் மற்றும் சமுக குற்ற செய்திகளை வெளியிடுவத்தில் முண்ணனி வகித்தன. எனது கல்லூரிப் பருவத்தில் நான் அதன் மீது கொண்ட காதல் மிக வெறித்தனமாக இருந்து வந்தது. அதன் பின் நான் அமெரிக்கா வந்ததும் அதன் மீது இருந்த தொடர்பு அறுந்துவிட்டது. அப்படி நான் விரும்பி படித்த இதழில்  நிருபராக பணி புரிவது என்பது மிக பெருமை மிக்க விஷயமாகவே இருந்தது. ஆனால் இப்போது அதில் வரும் கட்டுரைகளை படித்தால் ஏதோ ஒரு தற்குறி எழுதிய கட்டுரை போலவே இருக்கிறது. அதிலும் இந்த வாரத்தில் அஜ்மல் கசாப்பின் கடைசி நிமிடங்கள்! என்ற கட்டுரையை படிக்கும் போது அந்த கட்டுரையை எழுதிய நிருபர் கனிஷ்கா சிறுபிள்ளைத்தனமாக சொந்தக் கருத்தை முன்மொழிந்து எழுதி இருப்பதாகத்தான் தோன்றுகிறது. அவர் எழுதிய இந்தக் கட்டுரையில் அவரின்  சிறுபிள்ளைத்தனமான கற்பனைகள் அற்புதமாக தெரிகிறது.

சரி அவர்தான் தற்குறி போல எழுதினாலும் அந்த இதழின் பொறுப்பாசிரியர் அந்த கட்டுரையை பொறுப்பாக படித்தல்லவா அதனை வெளியிட்டு இருக்க வேண்டும். என்ன நடக்கிறது விகடன் குழுமத்தில். ஏன் இந்த வறட்சி நிலை.


விகடனில் வரும் கட்டுரைகள் சந்தியில் உள்ளவர்கள் படித்து சிந்திக்கும் படியாக இருக்க வேண்டுமே தவிர சந்திசிரிக்கும் மஞ்சள் இதழாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் என் ஆதங்கம்.அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
அஜ்மல் கசாப்பின் கடைசி நிமிடங்கள்! என்ற் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்


/// கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இந்தத் தகவலை கசாப்பிடம் சிறைச்சாலை அதிகாரி பக்குவமாக எடுத்துச்சொல்லி, மரண அறிவிப்பு அறிக்கையில் கையெழுத்து வாங்கினார். 'குப்'பென்று வியர்த்துக்கொட்ட, கைகள் நடுங்க அந்த வாரன்ட்டில் கையெழுத்துப் போட்டாராம் கசாப். அந்த நிமிடம் முதல் மரண பீதி அவர் முகத்தில் தொற்றிக்கொண்டது. அதையடுத்து, அவ்வப்போது பிதற்ற ஆரம்பித்தாராம்.//

கனிஷ்காவின் நல்ல கற்பனைவளம் இங்கு தெரிகிறது. பேசாமல் இவர் விஜய் படத்துக்கு கதை எழுத போகலாம்


கடந்த நான்கு வருடங்களாக கசாப்புடன் நன்கு பழகிய சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர் சொன்ன விஷயங்களின் சாராம்சம் இதுதான். 'என்னுடன் சேர்த்து 10 பேர் கடல் வழியாக படகில் மும்பைக்குள் நுழைந்தோம். அவர்கள் அனைவரும் 26/11 தாக்குதலில் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்களை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. என் உடலையும் அதுபோல செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்சி இருக்கிறார்.

ஏன் என்பதற்குக் காரணம் இருக்கிறது.

மும்பையில் 2008-ம் வருடம் நவம்பர் 26-ம் தேதி திடீரென எட்டு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஒன்பது தீவிரவாதிகள் 60 மணி நேரத் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். இறந்த ஒன்பது தீவிரவாதிகளின் உடல்களை ரகசியமாக எடுத்துச் சென்று கடலில் அடக்கம் செய்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. அது போலவே, தனது உடலையும் கடல் சமாதி செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் கசாப். மதரீதியாக சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்படித்தான் நடந்தது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள்.///

சிவப்பு நிறத்தில் குறிப்பிட்ட வரிகளுக்கும் நீல நிறத்தில் குறிப்பிட்ட வரிகளுக்கும் எவ்வளவு முரண்பாடுகள்


///கசாப்பைத் தூக்கில் போடும் ஆபரேஷன் 'எக்ஸ்'ஸின் முதல் கட்டமாக, அவருக்கு டெங்குக் காய்ச்சல் என்று செய்தி பரப்பப்பட்டது. மின்னல் வேகத்தில் அவரின் ரத்த சாம்பிள்கள் சிறைச்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக எந்த நேரமும் சிறைக்கு வெளியே காரில் அழைத்துச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கசியவிட்டனர்.///

தமிழகத்தில் அதிகம் இருக்கும் டெங்கு காய்ச்சல் பற்றிய கட்டுரையை எழுதிய உடனே இந்த செய்தியை எழுதியதின் விளைவுதான் இந்த டெங்கு கற்பனையோ?

///மரண பீதியில் தூங்காமல் தவித்த கசாப்பை, நள்ளிரவு நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் தட்டி எழுப்பி காரில் ஏற்றினர். சீறிப் பாய்ந்து இருளில் மறைந்தது கார். ///

அதெப்படி தூங்கியவனைத்தான் தட்டி எழுப்பலாம் ஆனால் தூங்காதவனை எப்படி போலிஸார் தட்டி எழுப்ப முடியும். ஐயோ பாவம் இந்த கட்டுரையாளர் கனிஷ்கா தூங்கி கொண்டே இந்த கட்டுரையை எழுதி இருப்பது இந்த வரிகளை படித்த பின் நன்கு புரிகிறது

//இது ஒருபுறம் இருக்க... கசாப்பின் குடும்பத்தினருக்கு கூரியரில் தபால் அனுப்பியது, பாகிஸ்தான் நாட்டுத் தூதரகத்துக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி உடலை வாங்கிக்கொள்வது பற்றி கருத்துக் கேட்டது போன்ற விவகாரங்களை, இந்திய வெளிவிவகாரத் துறை கனகச்சிதமாய் செய்தது///

இந்த விஷயம் முன் கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிஞ்சு இருந்தால் அதனை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காமல் இருக்க பாகிஸ்தான் என்ன இந்திய ஆட்சியாளர்களால்வா நடத்தப்படுகிறது.

//, கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டினர். உயர் அதிகாரி சிக்னல் காட்டியதும், மேடையின் லீவர் திறக்கப்பட... ஒரே ஒரு துள்ளலுடன் அடங்கியது //

தூக்கில் போட்டால் ஒரே ஒரு துள்ளல்தானா? மிக நல்ல அறிவு கனிஷ்காவிற்கு


// ரத்த அழுத்தம் 120/80. ஆக, உடல்நிலை நார்மலாக இருப்பதாக சர்ட்டிஃபிகேட் தந்தனர்.///

ஆஹா நிருபருக்கு ரத்த அழுத்தம் பற்றிய அறிவு நம்மை மிகவும் மெய் சிலிர்க்க வருகிறது.


விகடனில் இருந்து சில பகுதிகளை  இங்கு எடுத்தாண்டதால் விகடனுக்கு எனது நன்றிகள்


4 comments :

 1. பல செய்திகளும் இப்படி தான் நமக்கு தரப்படுகின்றது. செய்தியாளர்கள் அறிவு தேடுவதை நிர்த்தி விட்டனர்

  ReplyDelete
 2. அங்கிருந்தபடியே கூர்மையாக பலவற்றையும் கவனிக்கிறீங்க.

  ReplyDelete
 3. `இரண்டு விடயங்கள்.

  1. அஜ்மல் தூக்கிலிடும் முன் அவர் பாகிஸ்தான் குடிமகன் என்கிற காரணத்தினால் பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு முறைப்படி அறிவித்தாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால் இதுவரை அஜ்மலை தனது நாட்டு குடிமகன் என பாக் அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

  2. தூக்கில் தொங்கி தற்கொலை செய்வர் வேண்டுமானால் துடித்து துள்ளி சாகலாம். தூக்கு தண்டனை இப்போதெல்லாம் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது. Long drop எனும் முறையில் சரியான கயிற்றின் நீளம் கையின் எடை & உயரம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்(பார்முலா 1260 divided by the weight of prisoner in pounds = length of the drop in feet). கைதி ~ 5 அடி உயரத்துக்கு தீடீரென விழுவார், உடனே கழுத்து அல்லது ஸ்பைன் உடைந்து மூளைக்கு இரத்த ஓட்டம் நின்று பாரலைஸிஸ் உண்டாகி விழுந்த அடுத்த விநாடி மயக்கமாகி விடுவார். மூளை சில நிமிடத்தில் சாகும். 20-30 நிமிடத்தில் முழு மரணம். நாம் நினைப்பதற்கு மாறாக தூக்கு தண்டனை கொடுமை குறைந்த மரணத்தையே தரும். தொங்க விட்ட அடுத்த விநாடி ஆள் காலி.

  ஆனால் கயிற்றின் நீளம் மிக முக்கியம் நீளம் குறைந்தால் தலை துண்டாகிவிடும்.அதிகமானால் கழுந்து நெறிக்கப்பட்டு துடிதுடித்து மரணம். அப்புறம் முடிச்சு சற்றே கைதியின் இடப்புறமாக இருக்கவேண்டும். ஆக கயிற்றின் நீளம்& முடிச்சின் இடம் இவற்றை மாற்றி கைதியை துடித்து சாகவும் வைக்கலாம்.

  மற்றபடி நம்ம புலனாய்வு ஏடுகளின் லட்சணம் அறிந்ததுதானே!

  ReplyDelete
 4. செய்தியா முக்கியம்...? பரபரப்பு (பணம்) முக்கியம்...

  சுட்டிக்காட்டியதற்கு நன்றி...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog