Wednesday, December 19, 2012






நல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல  அரசியல்வாதியை வாழ்த்த கூடாது?

 அரசியல் ஒரு சாக்கடை என்றாலும் அதிலும் சில மாணிக்கங்கள் இருக்கின்றன. அதில் உள்ள ஒரு மாணிக்கம்தான் .அன்பழகன் அவர்கள் . எதிர்கட்சிகள் கூட இவர் மீது எந்த குற்றமும் சாற்றுவதில்லை. குற்றம் சொல்ல முடியாத ஒரு அரசியல்வாதி ஒருவர் உண்டு என்றால் இவரைச் சுட்டிக் காட்டலாம்.

.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.

தமிழர் இனம்குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர்

அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 19-12-1922 அன்று மகனாகப் பிறந்தவர். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். பிறந்தநாள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர்.  நல்லவரை தோற்கடிக்க செய்வது நமது தமிழர் வழக்கம் என்பதால்  2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.

இந்த நல்ல மனிதருக்கு இன்று  91வது பிறந்தநாள் அதனால் அவருக்கு எனது வலைதளம் சார்பாக எனது வாழ்த்துக்களை சொல்லுகிறேன்...முடிந்தால் நீங்களும் அவரை வாழ்த்தி செல்லுங்கள்.

யார் யாரையோ வாழ்த்தும் நாம் ஒரு நல்ல  அரசியல்வாதியை வாழ்த்துவோமே!

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

10 comments:

  1. He is one of the most respected politicians in India. My wishes :-)

    ReplyDelete
  2. அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்!
    வாழ்க நலமுடன்!

    ReplyDelete
  3. அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கர்ணன் நல்லவன் தான், ஆனால் அவன் யார் கூட இருதான்..........?? துரியோதனன் கூட. அதாவது பரவாயில்லை துரியோதனன் பண்ணிய அக்கிரமம் எதயாச்சும் தவறு என்று சுட்டிக் காட்டி செய்ய வேண்டாம் என்று தடுத்தானா? அதுவும் இல்லை. ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, நல்ல இடத்திலும் இருக்க வேண்டும், சரியில்லை என்னும்போது ஒன்று தவறைத் தடுக்க வேண்டும், அல்லது அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நல்லவனே ஆனாலும் திருடனுடன் கூட்டு வைத்துக் கொண்ட பின்னர் அவனை யோக்கியன் என்று ஏற்ப்பதற்கில்லை. [நான் கர்ணனை மட்டும் சொன்னேன்].

    பிறந்த நாள் என்பது சாதாரணமாக பகுத்தறிவு இல்லாதவன் கொண்டாடுவது. என்றைக்கு தாயின் வயிற்றில் இருந்தானோ அந்த ஒரு நாள் தான் பிறந்த நாள். இதுதான் பகுத்தறிவு. அதெல்லாம் கொள்கை தானே குப்பையில போட்டுவிட்டு வருடா வரும்டம் இவங்க கொண்டாடுவாங்க, நாமும் சைங்... சக்.... போடணும். குஷ்டம்டா சாமி.............

    ReplyDelete
  5. பிறந்த நாள் என்பது சாதாரணமாக பகுத்தறிவு இல்லாதவன் கொண்டாடுவது. என்றைக்கு தாயின் வயிற்றில் இருந்து பிறந்தானோ அந்த ஒரு நாள் தான் பிறந்த நாள். இதுதான் பகுத்தறிவு. அதெல்லாம் கொள்கை தானே குப்பையில போட்டுவிட்டு வருடா வரும்டம் இவங்க கொண்டாடுவாங்க, நாமும் சைங்... சக்.... போடணும். குஷ்டம்டா சாமி.............

    ReplyDelete
  6. திமுக வில் சர்ச்சைகளில் சிக்காத ஒரே மனிதர்.

    ReplyDelete
  7. நல்லதொரு அரசியல்வாதி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அடிக்கடி உங்க போஸ்டுங்க காணாம போவதின் மர்மம் என்ன? அதுக்கும் ஒரு போஸ்டு போட்டு விளக்கம் கொடுக்கலாமே?

    ReplyDelete
  9. நல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல அரசியல்வாதியை வாழ்த்த கூடாது?....எப்பிடி நல்லவருன்னு சொல்லறீங்க....தன்னுடைய மகளுடன் படித்த பெண்ணையே கட்டிகிட்டாறே அதுனால நல்லவரா...???/

    ReplyDelete
  10. பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.