அப்பாவி கணவன் செய்தது தவறா அல்லது அடங்கா மனைவி செய்தது தவறா?
அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்த மனைவி ' தன் கணவன் இன்னொரு பெண்கூட படுக்கை அறையில் இருந்ததை பார்த்து அதிர்ந்து போனாள். உடனே அவள் மனமுடைந்து அழுதவாறே அவனை திட்ட தொடங்கினாள்.. உங்களால் எப்படிங்க இப்படி செய்ய முடிந்தது? நான் உங்கள் குழந்தைக்கு மடியில் சுமந்து வளர்த்தேன்... நீங்கள் பன்னியை விட கேவலமானவர்.. இனி உங்க கூட வாழ்வே எனக்கு பிடிக்கவில்லை. நாளையே ஒரு நல்ல வக்கிலை பார்த்து உங்களுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறேன் என்று சொல்லியவாறு வெளியே செல்ல முயன்றாள்.
அதை கேட்ட அவள் கணவன் சொன்னான். நீ போறதுன்னு முடிவு பண்ணிய பிறகு நான் உன்னை தடுக்க விரும்பவில்லை ஆனால் போவதற்கு முன் நான் சொல்லவருவதை மட்டும் கேட்டுவிட்டு செல் என்றான்.
அவளும் அழுதாவாறே கேட்கலானாள்
அவன் சொன்னான் நான் இன்று ஆபீஸில் இருந்து வரும் வழியில் இந்த பெண் லிப்ட் கேட்டாள். அவளை பார்த்ததும் எனக்கு பரிதாபமாக இருந்தது. அதனால் நானும் சரியென்று அவளை காரில் ஏற அனுமதித்தேன். அப்போது அவளை மிக அருகில் பார்த்தேன் அவள் மிகவும் ஒல்லியாக இருந்தாள் . பாவம் மிகவும் பழைய ஆடையை அணிந்து இருந்தாள் பார்க்கவும் மிக அனுதாபத்திற்குரியவாளாக இருந்தாள். அவளுடன் பேச்சு கொடுத்த போது சொன்னாள் சாப்பிட்டே 2 நாடகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சொன்னாள்.
அதனால் அவள் மேல் இரக்கப்பட்டு அவள் இடத்திற்கு போகும் வழியில் நம் வீடு இருப்பதால் அவள் மேல் இரக்கப்பட்டு அவளை நமது வீட்டிற்கு அழைத்து சென்றேன்.
அப்போது நேற்று இரவு நான் உனக்காக ஆசையாக சமைத்த உணவை நீ சாப்பிட்டால் மிக குண்டாகி விடுவாய் உன் டையட் வீணாகிவிடும் என்று நீ ஒதுக்கி வைத்த உணவை நான் சூடுபடுத்தி கொடுத்தேன் அதை அவள் மிகவும் ஆசையோடு சுவைத்து சாப்பிட்டாள். அதன் பின் அவள் மிகவும் அழுக்காக இருந்ததால் அவளை குளித்துவிட்டு போகச் சொன்னேன். அப்போதுதான் நான் கவனித்தேன்அவள் ஆடைகள் கிழிந்து இருந்ததை அப்போது எனக்கு ஞாபகம் வந்தது உனது பிறந்தநாள் பரிசாக நான் வாங்கி கொடுத்த சேலை நன்றாக இல்லையென்று நீ உடுத்தாமல் வைத்திருந்தது, எனவே உபயோகம் இல்லாத அதை அவளுக்கு கொடுத்தேன். அது போல என் அம்மா ஆசையாக உனக்கு தைத்து கொடுத்த ப்ளவுஸை டிஸைனர் ப்ளவுசை அவளை இன்சல்ட் பண்ணுவதற்காக அதை அணியாமல் வைத்திருந்ததை எடுத்து அவளுக்கு தந்தேன். நான் வெளியூர் போய்விட்டு திரும்ப வரும் போது ஆசை ஆசையாக உனக்கு வாங்கி வந்த உள்ளாடைகளை எனக்கு நல்ல டேஸ்ட் இல்லை என்ரு கூறி அதை அணியாமல் வைத்திருந்ததையும் அவளிடம் தந்தேன்
அது போல மிகவும் விலை மதிக்கதக்க டிஸைனர் செருப்பை நீ என்னிடம் சொல்லி வாங்கி வர சொன்னாய். அதை நான் வாங்கி கொடுத்த பின் அதே செருப்பை உன் சக அலுவலர் அணிந்திருப்பதால் அதை அணியாமல் வீணாக உபயோகம் இல்லாத அதை அவளுக்கு கொடுத்தேன். அது போல என் தங்கை புத்தாண்டுக்கு பரிசாக வாங்கி கொடுத்த பேக்கை அவளை வெறுப்பு ஏத்துவதற்காக நீ உபயோகம் படுத்தாமல் வைத்திருந்ததையும் எடுத்து அவளுக்கு தந்தேன்
இப்படி வரிசையாக சொல்லி வந்த கணவன் தன் மூச்சை சற்று நிறுத்தி சுவாசித்துவிட்டு சொன்னான். நான் செய்த இந்த உதவையை எல்லாம் பெற்றுக் கொண்ட அந்த பெண் வீட்டை விட்டு செல்லும் போது கண்ணில் கண்ணிருடன் நான் செய்த உதவிக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிவிட்டு ஒன்று கேட்டாள். உங்கள் மனைவி உபயோகப்படுத்தாத வேறு ஏதும் இருந்தால் எனக்கு தாருங்கள் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று சொன்னாள்
அதனால் உனக்கு உபயோகம் இல்லாத என்னை தந்தேன் அது தவறா??
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
//அது தவறா??//
ReplyDeleteஇல்லை, இல்லை, இல்லை. மும்முறை சொன்னேன்.
ரொம்ப மோசம்....
ReplyDeleteசாட்டையடி பதில் அந்த மனைவிக்கு!
ReplyDeleteஇது என்னமோ உங்க.., சரி ஒண்ணுமில்லை விடுங்க சகோ
ReplyDeleteithu nagaisuvai pola irunthaalum pengal eysigavaikkum pathivu.
ReplyDeleteஉண்மை தான் தோழா எனினும் செய்த தவறை மறைக்க நீயும் தான் தவறு செய்தாய் என்று சொல்வது போல் தோன்றுகிறது ........
ReplyDeleteசூப்பர் தான். எங்கிருந்துதான் புடிக்கிறீங்களோ?
ReplyDeleteஇதையே இன்னொரு விதமாக பிச்சைக்காரனிடம் மனைவி சொல்வதுபோல் படித்திருக்கிறேன்..
ஒரு வேலை உங்கள் ஆனுபவமா இருக்குமோ...!
ReplyDeleteகதை அருமை
ReplyDeleteஅவன் அவளுக்கு எல்லாவற்றையும் தந்துவிட்டு
ReplyDeleteஅவன் அவளிடமிருந்து அந்த நோயை மட்டும் பெற்றுக் கொண்டான் .....
என்று முடித்திருந்தால் கதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் “உண்மைகள்“
சிநேகிதனை...........சிநேகிதனை...........இர்ர்ர்ர்ர்ர்ரகசிய சிநேகிதனை...........அடப்பாவிங்களா பிச்சைக்காரியைக் கூட விட்டுவைக்க மாட்டீங்களாடா........
ReplyDelete