உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, June 15, 2012

சத்திய வாக்கை நம்பாத அமெரிக்க பெண்ணும் அதை இந்த காலத்திலும் நம்பும் இந்திய பெண்களும்

 

சத்திய வாக்கை நம்பாத அமெரிக்க பெண்ணும் அதை இந்த காலத்திலும் நம்பும் இந்திய பெண்களும்

மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஒரு மதுரைக்காரன்(ஹலோ அது நான் இல்லேங்க நான் மதுரை டவுன்ல வளர்ந்தவன் ஹீ...ஹீ...ஹீ ) சென்னைக்கு போய் படிக்க தாயிடம் அனுமதி கேட்டான்.

அதைகேட்டு பதைபதைத்து போன அந்த அப்பாவி தாய் வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது  செக்க சிவக்க ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா கண்னா என்று பதறினாள்

அதை கேட்டு சிரித்த அந்த இளைஞன் அம்மா அங்க பட்டம் கொடுக்கும் போது யாரும்  கூடவே ஒரு பொண்ணையும் கொடுக்கமாட்டார்கள் .  அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா என்று அந்த அப்பாவி அம்மாவுக்கு விளக்கம் தந்தான்


அப்படின்னா, என் தலையில சத்தியம் செஞ்சுட்டுப் போ தம்பி என்று சத்தியம் வாங்கிக்கொண்டு மகனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்.

அவனுடைய சத்திய சோதனையாக கல்லூரியில் ஒரு மோகினியை போல செக்க செவேலன இருந்த ஒரு நார்த் இண்டியன் பொண்ணின் வலையில் விழுந்து அதை கிராமத்துக்கு கூட்டிச் சென்றான்.

சத்தியத்தை மீறிய தன் மகனை பார்த்து கண்ணிர்விட்டால அந்த தாயி.....

காலம் கரைந்தது....அவனும் நல்ல வேலையில் இருந்தான். அப்போது அவனுக்கு அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அவன் மனைவியிடம் சொன்னான் இது குறுகிய கால வேலை நான் சென்று வந்து விடுகிறேன் என்றான்.


அதைகேட்டு பதைபதைத்து போன அந்த அப்பாவி மனைவி வேணாம் செல்லம் ! அமெரிக்கா பக்கம் வேலைக்கு போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது  வெள்ளை வெள்ளையன ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா செல்லம் என்று பதறினாள்

அதை கேட்டு சிரித்த அந்த கணவன் பாரும்மா அங்க வேலைதான் தருவான் யாரும்  கூடவே ஒரு பொண்ணையும் கொடுக்கமாட்டார்கள் .  அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா என்று அந்த அப்பாவி மனைவிக்கு விளக்கம் தந்தான்


அப்படின்னா, என் தலையில சத்தியம் செஞ்சுட்டுப் போங்க என்று சத்தியம் வாங்கிக்கொண்டு கணவனை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தாள்.

அவனுடைய சத்திய சோதனையாக அமெரிக்காவில் ஒரு மோகினியை போல வெள்ளை வெள்ளையன  இருந்த ஒரு அமெரிக்க பொண்ணின் வலையில் விழுந்தான்.

ஆனா அந்த அமெரிக்க பொண்ணோ மிக சாமர்த்தியம் அவன் எப்போது எல்லாம் இந்தியா போக வேண்டும் என்று சொல்லும் போது தலையில் அடித்து சத்தியம் வாங்குவதில்லை அதற்கு பதிலாக அவனது தலையில் நாலு தட்டு தட்டி அவனை எங்கும் அனுப்பாமல் இருக்க செய்கிறாள்


இந்த சம்பவத்தில் வருவது நீங்களா என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது அதெல்லாம் இல்லைங்க. வேணுமுணா உங்க தலையில் அடித்து சத்தியம் பண்ண நான் ரெடி அட இது உண்மையான சத்தியமுங்க... என்னை நம்புங்க நம்புங்க.....3 comments :

  1. யாரைத்தான் நம்புவதோ இந்த பேதை நெஞ்சம் . ஒரு ஆண் மகனே இதனை பெண்களை ஏமாற்றும் போது பெண் வர்க்கத்தை நினைத்துப் பாருங்க .

    ReplyDelete
  2. இந்திய பெண்களாகிய நாங்கள் ஆண்களை சார்ந்து வாழ்கிறோம் அதனால் அவர்கள் எதை சொன்னாலும் நம்புவோம்...

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog