Wednesday, April 17, 2013

தவறான செய்திகளை முந்தி தருவதில் தினமலருக்கு முதலிடம்

பாஸ்டன் நகரில் குண்டு வெடித்தது பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.. அதை செய்த சதிகாரனைத் தேடி அமெரிக்க புலனாய்வு துறை துப்பு துலக்கி கொண்டிருக்கிறது. அது சம்பந்தமான ஒரு ஆளை அடையாளம் கண்டு கொண்டடுள்ளது என்று அவர்கள் நீயூஸ் கான்பரென்ஸில் தெரிவித்திருக்கிறார்கள் அப்போது அவர்கள் CNN நீயூஸுக்கு சொன்னது இது சம்பந்தமாக நாங்கள் இது வரை யாரையும் அரஸ்ட் செய்யவில்லை என்று கூறி இருக்கிறது.


ஆனால் நம்ம உண்மையின் உரைகல் தினமலர் சதிகாரனை கைது செய்திருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.




இதில் இருந்து தெரிவது அவர்களது நிருபர்களுக்கு ஆங்கில செய்தி கேட்டு நன்கு புரிந்து கொண்டு எழுதும் திறமை இல்லாமல் இருப்பதால்  அவர்கள் தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று நாம் கருதலாம்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இப்போது அமெரிக்காவில் ஈஸ்டன் நேரம் 6.00 PM ( 04/17/13 ) இந்திய நேரம் 3.33 AM ( 04/18/13 ). இந்த நேரம் வரை யாரையும் அரஸ்ட் செய்து இருப்பதாக செய்திகள் இல்லை

6 comments:

  1. முந்தித் தரும் அவசரம் அவர்களிடம் எப்போதும் உண்டு! அதனால தப்புகள் அடிக்கடி வர்றது அந்த நாளிதழ்ல சகஜமான ஒண்ணுதான்! ஆனாலும் இப்படியா...? வேதனை... வே‌தனை!

    ReplyDelete
  2. முதலில் குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஒருவரை கைது செய்துவிட்டதாக பாஸ்டன் காவலதிகாரி ஒருவர் தெரிவித்தார் என செய்தி நிறுவனமான அசோஸியேட்டட் பிரஸ் பத்தரிக்கைகளுக்கு செய்தி வழங்கியது. இச்செய்தி தினமலர் மட்டுமல்லாது பல வேறு பத்திரிக்கைகளில் வெளியானது. பின்பு நடந்த செய்தியாளர் மாநாட்டில் எப்பிஜ மற்றும் பாஸ்டன் போலிஸ் யாரும் கைது செய்யப்படவில்லை என அறிவித்தன. ஏதோ தில்லாலங்கிடி வேலை நடந்திருக்கும் என நினைக்கிறேன்.

    http://tinyurl.com/ch2mgcu

    ReplyDelete
  3. வேற எவன் இதை செய்தாலும் தற்செயலே...!
    தினமலர் தொழிலே இதான்...தினமலர் தவறுக்கு [ஹி! ஹி!! தெரிஞ்சே செய்த மொள்ள மாறத் தனத்திற்கு], சப்பை கட்டு கட்ட ஆட்கள் வருவார்கள்...அவாளுக்கு வேண்டாவதனை அசிங்கப் புடுதுவதில் முதலிடம்...அதற்க்கு சப்பை கட்டு கட்டுவதில் இவாளுக்கு முதலிடம்....தினமலரை மட்டும் விட்டே கொடுக்கமாட்டார்கள்....பாசம்...@!

    ReplyDelete
  4. நாம எல்லாம் அந்த 'உத்தரகிரியை பத்திரிக்கையை', இன்னும் ஒரு செய்திப் பத்திரிக்கையா நினச்சு , மதிச்சு பேசிட்டு இருக்கமே , அதே ஒரு நல்ல மரியாதைதான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.