Tuesday, April 2, 2013



 Courtesy : http://instaconservative.tumblr.com/post/37363350383/i-think-its-funny-nation-tax-prosperity

இதெல்லாம் இல்லாத நேரத்தில் உலகின் நம்பர் 1 நாடாக இருந்த அமெரிக்கா இப்போ?


100 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இந்த அளவு வரிகள் கிடையாது. ஆனால் இப்ப பாருங்க எவ்வளவு வரி...மற்ற நாட்டில் உள்ள மக்களைபோல வரிகளை ஏமாற்றுவது இங்குள்ள சாமானிய மக்களுக்கு எளிதல்ல

இங்கு குறிப்பிட்ட வரிகள் சாம்பிளுக்கு மட்டுமே, இன்னும் அதிக வரிகள் உண்டு

The inheritance tax.
Accounts Receivable Tax
Building Permit Tax
CDL license Tax
Cigarette Tax
Corporate Income Tax
Dog License Tax
Excise Taxes
Federal Income Tax
Federal Unemployment Tax (FUTA)
Fishing License Tax
Food License Tax
Fuel Permit Tax
Gasoline Tax (currently 44.75 cents per gallon)
Gross Receipts Tax
Hunting License Tax
Inheritance Tax
Inventory Tax
IRS Interest Charges IRS Penalties (tax on top of tax)
Liquor Tax
Luxury Taxes
Marriage License Tax
Medicare Tax
Personal Property Tax
Property Tax
Real Estate Tax
Service Charge Tax
Social Security Tax
Road Usage Tax
Recreational Vehicle Tax
Sales Tax
School Tax
State Income Tax
State Unemployment Tax (SUTA)
Telephone Federal Excise Tax
Telephone Federal Universal Service Fee Tax
Telephone Federal, State and Local Surcharge Taxes
Telephone Minimum Usage Surcharge Tax
Telephone Recurring and Nonrecurring Charges Tax
Telephone State and Local Tax
Telephone Usage Charge Tax
Utility Taxes
Vehicle License Registration Tax
Vehicle Sales Tax
Watercraft Registration Tax
Well Permit Tax
Workers Compensation Tax
Obama Care tax


இத்தனை வரிகள் 100 வருடங்களுக்கு முன்பு இல்லை  ஆனாலும் உலகின் மிக செல்வ மிக்க நாடுகளில் தலை சிறந்த நாடாக அமெரிக்கா இருந்து வந்தது. ஆனால் இப்ப பாருங்க இவ்வளவு வரி விதித்து வசூலித்தும் நாட்டின் கடன் மிக அதிகரித்து கொண்டு இருக்கிறது. அப்போது அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் இருந்தனர். அப்போது பெண்கள் குடும்பத்தையும் வீட்டையும் மட்டும் கவனித்து குழந்தைகளை  மகிழ்ச்சியுடன் வளர்த்து வாழ்ந்து வந்தனர்.(ஆனால் இப்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களை பார்ப்பதே மிக அறிதாகிவிட்டது)

ஆனால் இப்போது பணக்கார நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வீடுகளை இழந்து ஹோம்லெஸ்' என்று தெருவில் குடும்பத்துடன் இறங்கி இருப்பது அதிகம். அதனால் குடும்பங்கள் சிதறுண்டு போகின்றன.. நாட்டின் தேசிய கடன்களும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இதெல்லாம் மாறுமா என்று நினைத்து பார்த்தால் மாறும் என்ற நம்பிக்கை மனதில் இன்னும்  அமெரிக்கர் மனதில் துளிர்விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது ஒரே அடியாக பட்டுப் போய்விடவில்லை என்றுதான் பல அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள் . அமெரிக்காவிற்கு நல்ல தலைவன் கிடைத்துவிட்டால் போதாது அவர் கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு "சுயநலமில்லாத" ஆதரவு இருந்தாலே போதும் அமெரிக்கா மீண்டும் எழுந்துவிடும்.



அன்புடன்
சரியோ தவறோ மனதில்பட்டதை அப்படியே சொல்லும்
உங்கள் அன்பிற்குரிய
மதுரைத்தமிழன்

 

8 comments:

  1. புரிகிறது...நன்றி..

    ReplyDelete
  2. புரிந்து கொள்ள முடிகிறது
    ஆயினும் இது குறித்து விரிவான பதிவைத்
    தொடர்ந்தால் எம் போன்றோர் இன்னும் சரியாக
    அமெரிக்காவைப் புரிந்து கொள்வோம்

    ReplyDelete
  3. நல்ல தலைவன் வந்து விட்டால் போதாது.. அவர் கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு சுய நலமில்லாத ஆதரவு இருந்தால் போதும்- இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்ங்க..!

    ReplyDelete
  4. சாம்பிள் வரிகளே இவ்வளவா...?

    ReplyDelete

  5. முப்பது ஆண்டுகள் ( ஒரு தலை முறை.?) வாழ்ந்து உயர்ந்தவர்களும் கிடையாது , வீழ்ந்து பட்டவர்களும் கிடையாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்

    ReplyDelete
  6. டாக்ஸ் பட்டியலைப் பாத்து தலைய சுத்துது.

    ReplyDelete
  7. இப்படியெல்லாமும் படுத்தறாங்களா!!!!!!!! அவன் குடும்பத்தை காப்பாத்தா மத்தவங்களை குடைச்சல் கொடுக்கிற மனிலைக்கு போகாம இருந்த சரி மாற்றம் ஒன்றுதானே வாழ்க்கையின் நியதி மாற்றம் வரும்

    ReplyDelete
  8. வரிக்கு வரி... “வரி“யாக எழுதியிருந்த
    உங்களின் வரிகள் எனக்குப் பிடித்திருந்தது “உண்மைகள்“

    ஆனால்..“வரி“ பிடித்தால் தான்
    வாழும் ஜனநாயக நாடு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.