Thursday, April 25, 2013



திருச்சிகாரர்கள் பார்த்து பரவசம் அடைய திருச்சியின் பொக்கிஷம்

எப்போதும் ஏதாவது ஊர் பெயரைச் சொல்லி கிண்டல் பண்ணி  நகைச்சுவை துணுக்கை வெளியிட்டு வந்தேன். இந்த தடவை ஒரு மாறுதலுக்காக இந்த பொக்கிஷப் பதிவு.


பொக்கிஷம்” தொடர்பதிவின் இறுதிப்பகுதியான தெய்வம் இருப்பது எங்கே ?” என்று எழுதி பொக்கிஷ பதிவை முடித்த  திருச்சிகாரர் திரு. வை.கோ அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன். வாழ்க வளமுடன்!.












இந்த படங்கள் சில ebay சைட்டிலும் கூகுலிலும் இருந்து எடுக்கப்பட்டது .படத்தின் சொந்தகாரர்கள் யார் என்று அறிய இயலவில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றி


அன்புடன்
மதுரைத்தமிழன்

அரிய புகைப்படம்

23 comments:

  1. புகைப்படமும் பொக்கிஷம், நம்ம வை.கோ அய்யாவும் ஒரு பொக்கிஷம்...அசத்தல் மக்கா..!

    ReplyDelete
  2. VGK ஐயாவின் பொக்கிச தொடர் பதிவுகள் அனைத்தும் சிறப்பான பொக்கிசங்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள் பல... நன்றிகள்...

    ReplyDelete
  3. அசத்தல். இதே புகைப்படங்கள் எனக்கும் ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார்..... :)

    வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete
  4. ரெம்ப நன்றிங்க ... உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இரண்டு வருடங்கள் வசித்திருக்கிறேன் . கருப்பு வெள்ளையில் புகைப்படங்களை பார்க்கும்பொழுது ஏதேதோ நினைவுகள் வந்து போகின்றன . மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது . நன்றிங்க .

    ReplyDelete
  5. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. நன்றி பகிர்விற்கு

    ReplyDelete
  6. திருச்சி வை.கோ சாருக்கு பெருமிதத்தோடு பொக்கிஷம் சமர்ப்பித்ததிற்கு நன்றி! மாட்டு வண்டியுடன் உள்ள மலை கோட்டை கோயில் கருப்பு-வெள்ளை புகைப்படம் ரொம்ப அழகா இருக்கு! மலை கோட்டை அழகை காண வை.கோ சார் வீட்டிற்கு எல்லோரும் படை எடுக்க வேண்டியதுதான்...!

    ReplyDelete
  7. நாங்கள் (திருச்சிக்காரர்கள்) பழைய நினைவுகளை பரவசத்தோடு அசைபோடச் செய்யும் படங்கள். மூத்த பதிவர் திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சிறப்பித்தமைக்கும், பழைய திருச்சி புகைபடங்களை தொகுத்து தந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. என் அன்புத்தம்பி தங்கக்கம்பி மதுரைத்தமிழன் அவர்கள் உண்மைகள் பேசியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இதுபோன்ற அபூர்வமாக படங்களை எனக்கும் ஒருவர் மெயில் மூலம் அனுப்பியிருந்தார்.

    என் புகைப்படத்தை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது எனக்கு மிகவும் ம்கிழ்ச்சியளிக்கிறது.

    தங்களின் இந்தத்தளத்திலிருந்து என் “பொக்கிஷம்” பதிவுக்கு வருவதற்கு ஏதுவாக லிங்க் கொடுத்திருக்கலாமே!

    பகுதி-1 : http://gopu1949.blogspot.in/2013/03/1.html [கலைமகள் கைகளுக்கே சென்று வந்த என் பேனா]

    பகுதி-11 http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html [தெய்வம் இருப்பது எங்கே?]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெயருடனும் போட்டோவிலும் லிங்க் இணைத்து இருக்கிறேன். பெயருடன் முதலில் லிங்க் போட்டு இருந்தேன். அந்த பதிவை மீண்டும் அப்டேட் பண்ணும் போது விட்டு போய் இருக்கிறது என நினைக்கிறேன். இப்போது அதை சரி செய்துவிட்டேன்

      Delete
    2. மிக்க நன்றி நண்பரே..

      ஐந்தாவது படத்தில் காட்டியுள்ள [மாட்டு வ்ண்டிக்காட்சிகள்] இடம் தான் EXACTLY OUR PRESENT LOCATION. நாங்கள் தற்போது வசிக்கும் அடுக்கு மாடிக்கட்டடத்தின் வாசலில் தான் அந்த மாடுகளும் வண்டிகளும் நிற்கின்றன.

      ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட [1975 வரையிலும்] ஒத்தை மாட்டு வண்டிகள், இரட்டை மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், கை ரிக்‌ஷாக்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள் எல்லாமே இருந்தன. நானும் அவற்றில் பயணம் செய்தது உண்டு.

      இப்போது தான் இவைகளைக்காணோம். அன்று ஆட்டோக்கள் அதிகள் இல்லை. இன்று ஆட்டோக்கள் இல்லாத இடமே இல்லை என்று ஆகிவிட்டது.

      Delete
  9. மேலிருந்து கீழ் ஆறாவது படத்தில் காட்டியுள்ளீர்களே ஒரு காட்சி. அதாவது ஒரு கோயிலின் இரண்டு கோபுரங்களும், அவைகளுக்கிடையே உள்ள கோயில் கருவறையின் விமானமும், அருகே ஒரு குளமும் [SKY LINE VIEW என்று] அது தான் ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதஸ்வாமி கோயில் [சிவன் கோயில்]. இன்று என் வீட்டு ஜன்னலைத் திறந்தாலே தெரியும் VIEW அது.

    அதைப்பற்றி என் சமீபத்திய பதிவான “என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்” + “குலதெய்வமே உன்னைக்கொண்டாடுவேன்” என்ற பதிவுகளில் இதன் இன்றைய காட்சியை படங்களுடன் கொடுத்துள்ளேன். அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html [என் வீட்டு ஜன்னல் கம்பி ... 1]

    http://gopu1949.blogspot.in/2013/02/2.html [என் வீட்டு ஜன்னல் கம்பி ... 2]

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html [என் வீட்டு ஜன்னல் கம்பி ... 3]

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html [குலதெய்வமே உன்னைக்கொண்டாடுவேன்]

    >>>>>>

    ReplyDelete
  10. திருச்சியைப்பற்றி நான் மிகவிரிவான கட்டுரை ஒன்று ஏராளமான படங்களுடன் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.

    பலராலும் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது அது.

    தலைப்பு: “ஊரைச்சொல்லவா பேரைச்சொல்லவா”

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

    >>>>>>

    ReplyDelete
  11. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் சேர்ந்த கோயில்களின் 100/200 ஆண்டுகளுக்கு முன்பான படங்களைத் தாங்கள் வெளியிட்டுள்ளீர்கள்.

    தாயுமானவர் கோயில் மட்டும் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

    தாயுமானவர் கோயிலின் வயது 1500 வருடங்கள் மட்டுமே.

    அதற்கு முன் இருந்த உச்சிப்பிள்ளையார் கோயில் மட்டும் உள்ள அரிய புகைப்படம் என்னிடம் உள்ளது.

    என் அடுத்த பதிவினில் அதை உங்களுக்காகவே வெளியிடுகிறேன்

    திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையின் வயது 3500 மில்லியன் ஆண்டுகள் என புவி இயல் ஆய்வு மதிப்பிடுகிறது.

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமெ.! ;)))))

    >>>>>

    ReplyDelete
  12. இந்த தங்களின் பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.

    இந்தத்தங்களின் பதிவினில் என்னையும் பாராட்டி கருத்தளித்துள்ள அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.


    அன்புடன் VGK

    ReplyDelete

  13. நானும் அந்தக் காலச் சென்னையை அடிக்கடி நினைத்து இன்றைய நிலைக்கு ஒப்பிடுவேன். அகக் கண்ணில் சித்திரமாய் மலரும் காட்சி எனக்கு மட்டும்தானே தெரியும். திருச்சியின் அந்தக் காலப் புகைப் படங்கள்பார்க்க மகிழ்ச்சி தருகிறது. எல்லோரும் ரசிக்கலாம். சற்றே காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கலாம். பாராட்டுக்கள். பகிர்வுக்கு.

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. திருச்சி ஊர் புகைப்படங்கள்( கறுப்பு, வெள்ளை படம் )அழகோ அழகு.
    பொக்கிஷ பகிர்வுதான் படங்கள் எல்லாம்.
    திரு.வை. கோபாலகிருஷணன் சாரும் ஒருபொக்கிஷம்.
    நன்றி.


    ReplyDelete
  16. superb!!! பொக்கிஷமானவருக்கு பொருத்தமான பதிவுங்க .
    நிறைய பழைய கால black and white படங்கள் oldindianphotos.in என்ற லிங்கில் இருக்கு

    ReplyDelete
  17. மேலிருந்து மூன்றாவது படம்---என்ன கோயில் அது?

    ReplyDelete
  18. பொக்கிஷ‌ ப‌ட‌ங்க‌ளுட‌ன் கூடிய‌ ப‌திவு. வை.கோபால‌கிருஷ்ண‌ன் அய்யாவின் பின்னூட்ட‌ங்க‌ள் மூல‌ம் திருச்சி ப‌ற்றி ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் அறிந்தேன்..

    ReplyDelete
  19. உண்மையிலேயே பொக்கிஷங்கள் தான்,

    ReplyDelete
  20. //தாயுமான‌வ‌ர் கோயில் ம‌ட்டும் கி.பி 6ம் நூற்றாண்டில் ப‌ல்ல‌வ‌ ம‌ன்ன‌ன் ம‌கேந்திர‌வ‌ர்ம‌ன் என்ப‌வ‌ரால் க‌ட்ட‌ப்பட்டுள்ள‌து.

    தாயுமான‌வ‌ர் கோயிலின் வ‌ய‌து 1500 வ‌ருட‌ங்க‌ள் ம‌ட்டுமே.

    அத‌ற்கு முன்னிருந்த‌ உச்சிப்பிள்ளையார் கோயில் ம‌ட்டும் உள்ள‌ அரிய‌ புகைப்ப‌ட்ட‌ம் என்னிட‌ம் உள்ள‌து///

    1500 வருட‌ங்க‌ளுக்கு முன்னால், அதாவ‌து தாயுமான‌வ‌ர் கோயில் க‌ட்ட‌ப்ப‌டுமுன்ன‌ர், உச்சிப்பிள்ளையார் கோயில் ம‌ட்டும் உள்ள‌ அரிய‌ புகைப்ப‌ட‌ம் உங்க‌ளிட‌ம் இருக்கிற‌தா? ஒன்றுமே புரிய‌வில்லை, குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌தே.

    ReplyDelete
  21. அருமையான படப்கிர்வுகள் நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.