Sunday, April 7, 2013



 


சில கேள்விகள் & சிந்தனைகள் இங்கு கிறுக்கல்களாக


சாக்கடையில் இறங்கி வேலை பார்ப்பவர்களை காணும் போது இழிவாக முகம் சுழித்து செல்லும் சென்னை மேல் மட்ட வர்க்கத்தினர் சென்னையில் விடாது மழை பெய்யும் போது ரோட்டில் நடக்காமல் பறந்துதான் செல்வார்களா என்ன?

கமல்ஹாசன் , ரஜினிகாந்த் போன்றவர்கள் நாட்டுக்கு நல்ல விஷயங்களை கற்று தரும் தலைவர்கள் அதனால்தான் அவர்களுக்கு ரசிகர்கள் அதிகமோ?

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சரி இல்லையாம் அதனால்தான் இந்திய மக்கள் சட்டத்தை மதித்து நடப்பது முட்டாள் தனமான காரியம் என்று அதை மதிக்காமல் செல்லுகிறார்களோ?

இந்தியாவின்  சுந்திரத்திற்கு முன்   வெள்ளையர்கள் நம் நாட்டை கொள்ளை அடித்து அவனது நாட்டில் செல்வத்தை சேர்த்து வைத்தார்கள் சுந்திரத்திற்கு பின் அரசியல் தலைவர்கள் நம் நாட்டை கொள்ளை அடித்து அந்நிய நாட்டில் செல்வத்தை சேர்த்து வைக்கிறார்கள்

இந்திய நாட்டை அயல்நாட்டவர்களுக்கு அடகு வைக்க இந்திய அரசியல் தலைவர்கள் தரும் கைக்கூலிதான் ஒட்டுக்கு தரும் இலவசம்

பலவகை உணவுகளை பசியோடு பரிமாறுபவள் வேலைக்காரி அந்த  பலவகை உணவுகளை பசியில்லாமல் சாபிடுபவள் வீட்டுக்காரி

மற்றவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து எழுதுபவன் கவிஞனாகும் போது அந்த கஷ்டங்களை பார்த்து உதவும் மனிதன் மகாத்மா ஆவதும் இயல்புதானே

அடுத்தவன் கதைகளை திருடி படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு உள்ள கவலை தன் படம் திருட்டு விசிடியாக போகுமோ என்றுதான்


எப்போதும் உயரத்திலேயே இருப்பதற்கான ஒரு சிறந்த வழி &  மிகவும் எளிதான வழி மிக உயர்ந்த பில்டிங்கில் டாப் மாடியில் குடியிருப்பதும் & வேலை செய்வதால் மட்டுமே முடியும்


அன்புடன்
மதுரைதமிழன்

9 comments:

  1. தாங்கள் சொல்வது சரிதான் , அன்று அயல் நாட்டினான் நமது நாட்டை கொள்ளை அடித்தான் ,தற்பொழுது நமது நாட்டினனே நம்மை கொள்ளை அடித்து அயல் நாட்டில் சேமிக்கின்றான்

    ReplyDelete
  2. நல்லாவே ஜிந்திக்குறிங்க.

    ReplyDelete
  3. ரசிகர்கள் அல்ல... வெறியர்கள்...

    சில உண்மை வரிகள்... சிலது நகைச்சுவைகள்...

    ReplyDelete
  4. ஒரே கேள்வி மயம், இங்கதான் எக்ஸாம் நாட்கள் என்றால் நீங்களும் இன்னும் அதை விடவில்லை போல் இருங்க.... கொஞ்சம் மூளைய கசக்கி விட்டு தான் பதில் சொல்லணும் சிலபஸில் இல்லாத கேள்வியை கேட்டு இருக்கலாம் அல்லவா ?

    ReplyDelete
  5. நல்ல கேள்விகள்.. சிந்தனைகள்.. புன்னகைக்க வைத்தது!

    ReplyDelete

  6. பொதுவாகவே உங்கள் பதிவுகளில் நெகடிவ் எண்ணங்களே பிரதிபலிக்கிறதோ. ? “காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே.காய்தலின் கண் குணமும் , உவத்தலின் கண் குறையும் தோன்றாக் கெடும்” நிச்சயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கேள்விப்பட்ட வரையில் எந்த சமுதாயத்திலும் (குழுவிலும்) 20% பேர் மிக நல்லவர்களாகவும் 20% பேர் மிக மோசமானவர்களாகவும் மீதி 60% பேர் சராசரியானவர்களாகவும் இருப்பர். This seems to be an universal truth.. இவற்றையும் சில சிந்தனைக் கிறுக்கல்களாக எடுத்துக் கொள்ளலாமே.!.

    ReplyDelete
  7. சில கேள்விகள் சிந்தனைகள்
    அருமையான கிரியா ஊக்கிகளாக
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நல்ல சிந்தனைக் கேள்விகள் “உண்மைகள்“

    ReplyDelete
  9. Each and every point except about actors worth pondering.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.