சுத்தம் என்றால் மேலை நாடு என்று வாயை பிளக்கும் இந்தியர்களா நீங்கள்?
"ஆசியாவிலேயே மிக சுத்தமான வசிப்பிடம்" என ஐ.நா. சபையால் பாராட்டுப் பெற்ற "மாவ்லின்னாங்க்"(MAWLYNNONG) கிராமம்.
சுத்தம் என்றால் மேலை நாடுதான் என்று வாயை பிளந்து ஆஹா ஒகோ என்று எப்போதும் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அதே சுத்தம் இருந்தால் இந்தியாவிற்குள் எங்காவது இருந்தாலும் அவர்களுக்கு தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் வசிக்கும் இடத்தையோ அல்லது பிறரின் வசிப்பிடத்தையோ சுட்டிக் காட்டுவது கிடையாது.
இந்தியாவில் அப்படிபட்ட ஒரு பகுதி இருக்கிறதா என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் "உலகின் மிக சுத்தமான வசிப்பிடம்" என ஐ.நா. சபையால் பாராட்டுப் பெற்ற "மாவ்லின்னாங்க்"(MAWLYNNONG) கிராமம். இது இந்தியாவில் மேகலாயா என்ற பகுதியில் உள்ளது.The village is located around 90 kms (4 hours drive) from Shillong.
முதலில் 2003 டிஸ்கவர் இந்தியா என்ற டிராவல் இதழில் சுத்தமான கிராமம் என்று கண்டறியப்பட்டு செய்தி வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதை BBC, UNESCO and National Geographic ஆகியவை உறுதி செய்து ஆசியாவிலேயே மிக சுத்தமான கிராமம் என்று அறிவிக்கபட்டுள்ளது என்பது மிகவும் ஆச்சிரியத்திற்கு உரியது. அதை 2005 லும் மீண்டும் உறுதிப்படுத்தியது
இக்கிராமம், மொத்தம் 87 குடும்பங்களை மட்டுமே கொண்டது. 485 நபர்கள் வசிக்கிறார்கள் .மிகுந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் , சமுதாயப் பண்புகளாகப் பேணிக்காக்கப்படுகின்றன. இங்குள்ள சாலைகளில் ,ஒரு பேப்பர் துண்டோ, இலைச் சருகோ கூட பார்க்க முடியாது. கால் எடுத்து வைக்க கூட கூசும் அளவிற்கு மிக சுத்தமாக உள்ளது. சாலைகளில் நடக்கவே தான் தயங்கியதாகக் கூறுகிறார் பிரபல கட்டுரையாளர் பிரேமா நந்தகுமார்.
கிராமத்தின் தலைவரும் ,பொறுப்பாளருமான லூஷை பிங்க் ரோப் சுத்தமும், சுகாதாரமும் எங்கள் பாரம்பரியம் என்று பெருமைப்படுகிறார். இவர் வகுத்த திட்டங்களை மக்கள் எந்தத் தயக்கமும், எதிர்ப்புமின்றி செயல்படுத்துகின்றனர். சாலை பராமரிப்புக்கென்று 10 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. காலை எழுந்தவுடன் முறை வைத்து இருவர் இருவராக , மூங்கிலால் நெய்யப்பட்ட மார் கொண்டு சுத்தப்படுத்துகிறார்கள். இந்த மார்கள், சாலையின் மூலையில் ஆங்காங்கே சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இல்லாதபோது பாத சாரிகளே இலை தழைகளைக் கூட்டி சுத்தம் செய்து ,ஆங்காங்கே உள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டுவிடுவர்.
 |
A villager in Mawlynnong, north-east India cleans a village street
during his daily volunteer hours. The village is one of the cleanest
villages in India and Asia and it's community cleanliness program an
example for many. (Sandeep Chourasia-India Beacons) |
இங்குள்ள பொதுக் கழிப்பறைகளை அங்கு வசிக்கும் கிராம மக்களே செய்கின்றனர். சுற்றுபுர சுத்தம் பற்றி சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுத்தருகின்றனர்
அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தெருவில் செல்லும் போது மரத்தில் இருந்து எதாவது இலை கிழே விழுந்து கிடந்தால் அதை பார்க்கும் சிறுவாராக இருக்கட்டும் அல்லது வயதானவர்களாக கூட இருக்கட்டும் ஒருவித தயக்கமும் அருவருப்பும்மின்றி அதை அவர்கள் எடுத்து அருகிலுள்ள மூங்கிலால் செய்யப்பட்டு இருக்கும் குப்பைக் கூடையில் போட்டுவிடுவது அவர்களின் பழக்கமாகவும் பண்பாகவும் இருக்கிறது
இந்த கிராமத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்படவில்லை. ஆனால் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாகக் கையாளப்படுவதால் யாரும் பிளாஸ்டிக் பொருட்களைத் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை.
இங்கு சேரும் குப்பைகளை வாரம் ஒரு முறை அள்ளப்பட்டு ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள பெருங்குழியில் போடப்படுகிறது. இதனுடன் ,ஆடு, மாடுகளின்போன்ற விலங்குகளின் சாணங்களும் கலக்கப்பட்டு மக்கிய தொழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரத்தை முறை வைத்து அனைவரின் வயல், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படுத்துகிறார்கள்
5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஓடையிலிருந்து குழாய் மூலம் குடி தண்ணீர் 24 மணி நேரமும் விநியோகம் செய்யப்படுகிறது. . தண்ணீரை நம் பகுதியினர் போல் தேவைக்கு மீறி செலவழிப்பதோ, வீணாக்குவதோ இவர்கள் பண்பு அல்ல
இந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் நதியின் மேல் ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 200 ஆண்டுகளுக்கு மேலான 2 இரு ஆலமரத்தின் மர வேர்களின் அடிப்பாகம் கொண்டு இணைக்கப்பட்டு இப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவருகிறது. சுற்றுலா பயணிகளுக்கென இங்கு 20 அடி உயரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உருவாக்கப்பட்டு இயற்கையை ரசிக்கவும் வசதி செய்து தந்திருக்கின்றனர் இந்த கிராமமக்கள்
 |
The 1,100 year old living root bridge in Mawlynnong village which took
sixty years to grow. The root bridge is an eco-technology developed by
ancient tribes to construct bridges across rivers using the roots of
trees. (Sandeep Chourasia-India Beacons) |
இவ்வாறு இயற்கையைக் கொஞ்சமும் கூட சேதப்படுத்தாமல் சுற்றுலா தளங்களை மிகப் புத்திசாலித்தனமாக இப்பழங்குடியினர் உருவாக்கி இருப்பது நம்மை ஆச்சரியமுறச் செய்கின்றன, அதுதோடுமட்டும் நின்று விடாமல் நமது செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் நமது மனக் கதவை பலமாக தட்டி எழுப்புகின்றன.
 |
The 85 feet high, Sky walk in Mawlynnong village in North-east India
offers a bird's eye view of the village and a panoramic view of
Bangladesh plains. It's a eco-friendly structure and is built using
community's own architectural traditions. (Sandeep Chourasia-India
Beacons) |
உன் வீடு எப்படியோ அப்படியே நாடும் என்று அறிஞர் அண்ணா சொன்னதை நாம் கடைபிடிக்கிறோமோ இல்லையோ தமிழ் அறியா அந்த மக்கள் அண்ணா சொன்னதை செயல்படுத்தி காண்பித்து நம்மை தலை குனிய வைக்கின்றனர்
இந்த மாவ்லின்னாங்க் கிராம மக்களிடம் இருந்து நமது தலைவர்கள் மட்டுமல்ல மக்களும் எளிய வாழ்க்கை ஒழுக்க சிந்தனை, நேர்த்தியான அமைப்பு என ஏராளமான விஷயங்களை இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் தலைவர்களையும் அரசாங்கத்தையும் இவைகள் இரண்டும் மக்களையும் ஒன்றை ஒன்று குறை கூறாமல் மாவ்லின்னாங்க் மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு தமிழகத்தையும் சிங்கப்பூர் மாதிரி ஆக்க வேண்டும். இதை தமிழ் மக்கள் நினைத்தால் செய்து முடிக்க முடியும்.
இதை படிப்பவர்கள் அனைவரும் இன்றே தங்களால் முடிந்த வரை தங்களது வீட்டை மட்டுமல்லாமல் தாங்கள் வசிக்கும் சுற்று புற பகுதிகளையும் சுத்தமாக வைத்து கொள்ள சிறிய அளவிலாவது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Photo Courtesy : Epoch Times & http://beingindian.quora.com
cleanest village in India.
எல்லா மனிதரும் உணர வேண்டிய பகிர்வுங்க. சுத்தம் தான் சோறு போடும் என்று படிப்பதோடு இருப்பவர்கள் தான் நிறைய பேர் அனைவரும் இந்த கிராமத்து மக்களைப்போல மாற வேண்டும். நாடும் வீடும் சுத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல நம் தெருவையும் சுத்தமாக வைத்திருந்தால் நாடு ஆட்டோமெடிக்காக சுத்தமாகிவிடும்
Deleteஇதுவரை அறியாத தகவல்
ReplyDeleteபடங்களுடன் பதிவு அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நானும் அறியாததுதான் இப்போது அறிந்ததால் பதிவாக இங்கே பகிர்ந்துள்ளேன்
Deleteகூட்டமில்லை பார்த்தீங்களா? அதான் சுத்தமா இருக்கு.
ReplyDeleteசென்னையை நினைச்சால் பகீர்:(
கூட்டமிருந்தாலும் அந்த மக்களின் மனநிலை மற்ற மக்களுக்கும் இருந்தால் எல்லா இடமும் இப்படி சுத்தமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம்
Deleteபசுமையான வனம். கள்ளமில்லாத முகங்கள். கூடவே சுத்தம். சென்னையை நினைத்துக் கொள்கிறேன்.
ReplyDeleteகட்டிடம் இடித்துப் போட்ட செங்கல், சுண்ணாம்புக் கட்டிகள் எல்லாவற்றையும் அகற்றாமல் இரண்டுமாதமாகக் கிடக்கிறது. கார்ப்பரேஷன் ஆட்களுக்கும் கட்டியவருக்கும் சண்டை. அவஸ்தைப் படுவது பக்கத்துவீட்டுக்காரர்கள்.!நல்ல பதிவு நன்றி.
எல்லோரும் சுயநலமில்லாமல் செயல்பட்டால் நிச்சயம் முடியும்
Deleteஅதெல்லாம் எவனும் முயற்சிக்க மாட்டண்ணே
ReplyDeleteஇப்படியே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் மேலைநாட்டை மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருக்க வேண்டும்
Deleteஅறியாத தகவல்.. அருமையான படங்கள்..அழகான சுத்தமான ஊர்.. பகிர்ந்தமைக்கு நன்றி..
ReplyDeleteEvery will try ... Every thing is possible.
ReplyDeleteஉங்களைப் போல எல்லோரும் நினைத்தாலே எல்லாம் சுத்தமாகும்
Deletecongrats for bringing this news
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி
Deleteஒரு சில மேலைநாடுகள் வெளிப்பார்வையில் மட்டுமே சுத்தமாக இருக்கிறது . அத்திப்பழத்தை புட்டுப்பார்த்தால் உள்ளே இருக்குமாம் அவ்வளவும் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் ,அதுபோல நான் மலேஷியா சென்று வந்தேன்.அங்கு கில்லான் (((peru)பெறு))) புதிய பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை நேரம் காலைக்கடன் முடிக்க கட்டண கழிப்பிடத்தில் காசு கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன் . வரிசையில் நின்று உள்ளே சென்றேன் , சென்ற வேகத்தில் திரும்பி வந்துவிட்டேன் உள்ளே அவ்வளவு அசுத்தம் ,தண்ணீர் வரும் ஆனா வராது .மின் விளக்கு இருக்கும் ஆனால் எரியாது ,இந்த பேருந்து நிலையம் மட்டுமின்றி மற்ற இரண்டு (நான் சென்ற) பேருந்து நிறுத்த கட்டண கழிவறையும் அப்படிதான் இருந்தது ,வெளிநாட்டுக்காரங்க எல்லாம் வெளில மட்டும்தான் சுத்தமா வச்சி இருப்பாங்க போல ..............
ReplyDeleteமேலைநாடுகளிலும் அசுத்தமான பகுதிகளும் உண்டு ஆனால் இங்கு 80 சதவிகித பகுதிகள் சுத்தமாகவும் மீதி பகுதிகள் அசுத்தமாகவும் உள்ளன அவ்வளவுதான். அது அங்கு வாழும் மக்களின் மனநிலையை பொருத்ததும் பொருளாதாரத்தை பொருத்தும் இருக்கிறது.
Deleteஇங்கு நான் வசிக்கும் நீயூஜெர்ஸி மாநிலத்தில் கறுப்பு இன மக்கள் மிக அதிகம் வசிக்கும் நுவார்க்கின்(newark ) பல பகுதி அசுத்தமாகவும் நம்மை போல மக்கள் செல்வதற்கும் பாதுகாப்பு அற்றதாகவே இருக்கிறது.
அருமையான விழிப்புணர்வைத்
ReplyDeleteதுாண்டும் பதிவு “உண்மைகள்“
நன்றி
Delete487 peoples and 87 family possible this matter ................
ReplyDeleteமிக எளிதுதான் உண்மைதான் ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் நீங்கள் வசிக்கும் தெருவிலும் இந்த அளவில்தானே மக்கள் வசிக்கின்றனர் உங்கள் தெருவையாவது இந்த மாதிரி சுத்தமாக வைத்து கொள்ளலாம் தானே இப்படி ஒவ்வொரு தெருவிலும் செய்தால் அப்புறம் ஊரே சுத்தமாக இருக்கும் அதன் பின் மாநிலம் சுத்தமாகி நாடும் சுத்தமாகும். அதற்கு வேண்டியது சுயநலம் இல்லாத மனநிலைதான்
Deleteகட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இக் கிராமத்தை பற்றி எடுத்து சொல்லவேண்டும்.சுய கட்டுப்பாடு ஒழுக்கம் இவற்றை இந்த கிராம மக்களிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில் இந்த கிராமம் பற்றி இந்திய முழுவதும் தெரிந்திருக்க வேண்டாமா? உள்ளூர் தலைவர்கள்,எம்.எழ. ஏ, எம்பிக்கள் இந்த கிராமத்தை பார்வையிட அரசாங்கம் வலியுத்த வேண்டும்.ஒரு ஆபத்து என்னவெனில் இவர்கள் போய் அக கிராமத்தை கெடுக்காமல் இருக்கவேண்டும்.
ReplyDeleteவீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவேணும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.அதற்காக தெருவை அசுத்தம் செய்யத் தயங்குவதில்லை.
இப்படி ஒரு பயனுள்ள தகவலை பகிர்ந்ததற்கு நன்றி.
ReplyDeleteமிகவும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
ReplyDelete