Picture Courtesy : Dinakaran |
நடிகர்கள் நடத்திய காமெடி (சுயநல) உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதவராக சென்னையில் நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதப்போராட்டம் இலங்கை பிரச்சனையை தீர்ப்பதற்காகத்தான் என்று எந்த ஒரு தமிழனும் நினைத்து இருந்தால் அவன் ஒரு வடிகட்டின முட்டாளே
நடிகர்கள் இருந்த உண்ணாவிரதம் இலங்கை பிரச்சனையை தீர்ப்பதற்காக அல்ல அவர்களின் வருங்கால பட வசூலை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட கபட நாடகமே.
இந்த நடிகர்கள் எல்லாம் சேர்ந்து கடைசியில் சில தீர்மானம் போட்டாங்களாம். தீர்மானம் போட்டா அதை நிறைவேற்றும் வரையில் போராடுவங்களா? அல்லது இது நாடகத்தின் ஒரு காட்சி என்று நினைத்து முடித்துவிடுவார்களா?
அல்லது மத்திய அரசாங்கம் இதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் தங்கள் ரசிகர்களையும் அழைத்து போராடுவர்களா அல்லது தங்களது நண்பர்களான வட இந்திய நடிகர்களையும் அழைத்து அவர்களுக்கும் விளக்கி போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ஸ் தருவார்களா?
அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்? இதில் யாராவது ஒரு சூடு சுரனையுள்ள நடிகர் இதற்கு பதில் சொல்ல தகுதியுண்டா?
இப்ப மதுரைத்தமிழன் சில நடிகர்களிடம் கேட்ட கேள்வியும் அதற்கான் பதிலும்
ரஜினியிடம் என்ன சார் உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு? என்ன இந்த பக்கம். மதுர இன்று பிரேக் பாஸ்ட் லேட்டா சாப்பிட்டேன் அதற்கு அப்புறம் மனைவி சொன்னாங்க லஞ்சு ரெடியாக கொஞ்சம் லேட்டாகுமுன்னு சொன்னாங்க. அப்பதான் என் மனசுல கோச்சடையான் பட ரீலிஸ் பத்தி ஞாபகம் வந்திச்சு.. எப்படி விஸ்ப ரூபத்தை விட அதிக வசூல் பண்ணல்லமுன்னு நினைச்சுகிட்டு இருந்தப்ப எனக்கு ஒரு போன் வந்துச்சு எல்லா திரைப்பட நண்பர்களும் நல்லா சாப்பிட்டுவிட்டு இங்கேவந்து இருப்பதாக அதனால் ஒரு நடை வந்து படம் வெற்றி பெற ஆலோசனை பண்ணினேன் அவ்வளவுதானப்பா
கமலிடம் என்ன சார் உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு? என்ன இந்த பக்கம். மதுர எனக்கு லஞ்சு சாப்பிட்ட அப்புறம் தூங்க எனக்கு பிடிக்காது. அதனால டிவியை ஆன் பண்ணினா என்னை நடுத்தெருவுல நிக்க வச்சுடுவாங்கன்னு நான் நினைச்ச என் ரசிகர்கள் என்னை அப்படி பண்ணாம அவர்கள் இப்போ நடுத்தெருவுல நின்னு இந்த வீணாப் போன நடிகர்களை பாக்குறதுக்கு நிக்கறதா கேள்வி பட்டேன் இப்படி வீணாப் போனவர்களை பார்ப்பத்ற்கு பதிலாக உலகநாயகன் என்னை பார்த்து ரசிக்கட்டும் என்று தரிசனம் தருவதற்க்காக இங்கு வந்துள்ளேன் என்று சொன்னார்
சிவகுமாரிடம் என்ன சார் உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு? என்ன இந்த பக்கம். மதுர வீட்டுல மனைவி சத்தம் போட்டா எப்ப பாரு சொற்பொழிவு அது இதுன்னு போயிடுறீங்க இந்த 2 பிள்ளைகளை பொறுப்பா எங்காவது கூப்பிட்டு போயிருக்கிங்களா என்று சத்தம் போட்டா அதனால பிள்ளைகளிடம் எங்க போக ஆசைபடுறீங்க என்று கேட்டடேன் அதற்கு அவர்கள் அப்பா எங்களுக்கு கேம் ஆடனும் போலிருக்குது என்று சொன்னார்கள் அதனால் இங்கு அழைத்து வந்தேன். இங்கு வந்ததும் அவர்கள் மீயூசிக்கல் சேர் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாரகள் என்றார்.
பவர் ஸ்டாரிடம் என்ன சார் உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு? என்ன இந்த பக்கம். மதுர நான் ஊரைவிட்ட்டே ஒடிப் போயிட்டேன் என்று மக்கள் நினைக்கிறார்கள் நான் அப்படி செல்ல வில்லை என்பதை காண்பிக்கவும் இந்த உண்ணாவிரத்தில் பவர் ஸ்டார் இல்லை என்றால் அதற்கு பவர் இல்லானல் போய்விடும் என்று கேட்டுக் கொண்டதால் இங்கு வந்தேன்
அஜித்திடம் என்ன சார் உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு? என்ன இந்த பக்கம். மதுர நான் பொறுப்புள்ள இந்தியக் குடிமகன் அதனால் இந்த போராட்டத்துல கலந்துகிறேன். இதை அரசியல்வாதிகள் நடத்தி என்னை கூப்பிட்டு இருந்தா அறிக்கைவிட்டு ஒரு கலக்கு கலக்கி இருப்பேன். ஆனால் அப்படி இல்லாததால் நாள் முழுவதும் இருந்து இந்த போராட்டத்தை நடத்தி ஆதரவு தருகிறேன்
விஜய்யிடம் போனில் என்ன் சார் நீங்க இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் மதுர நான் என் அப்பாவிடம் கேட்டேன் டேய் நீ வருங்கால முதலைமைச்சர்டா நீ முதலைமைச்சர் ஆனா பின் சட்டசபையில் தீர்மானம் போடலாம் என்று சொல்லிவிட்டார் அப்பவும் என் மனசு கேட்கல நான் என் நண்பர்களிடம் கேட்டேன் அவர்கள் சொன்னார்கள் நடிக்க தெரிந்த நடிகர்கள் மட்டும்தான் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளனும் அதனால் நீ கலந்து கொள்ளவில்லை என்றால் யாரும் கவலைப்பட மாட்டார்கள் என்று சொன்னார்கள் என்றார்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.