விகடனில் நான் படித்து ரசித்த கேள்வி பதில்கள்
1. ஒருவருக்கு இதயத்தில் இடம் கொடுப்பது தவறா?''
''யாருக்குக் கொடுத்தீர்கள் என்பதைப் பொறுத்து! காஜல், ஹன்சிகா, நயன்தாரா, அமலா பால் போன்றோருக்கு இதயத்தில் இடம் கொடுத்தீர்கள். ஆனால், இவர்களில் சேவை வரிக்கு எதிரான திரையுலகினரின் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்கூட, ஈழத் தமிழர் நலனுக்கான உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லையே!''
வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
2. ''எதிரிகளை வெல்வதற்கு எளிய வழியைச் சொல்லுங்களேன்?''
அவர்கள் முன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதுதான். அப்படி நீங்கள் நடந்துகொள்வது... அவர்களை அணுஅணுவாகக் கொன்றுவிடும்!''
விஜயலட்சுமி, பொழிச்சலூர்
3. தமிழ்நாட்டில் ஒரு கோடிப் பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்களாமே?''
''பார்த்தீர்களா... பார்த்தீர்களா... அரசின் எந்தவொரு திட்டமும் ஏழு கோடித் தமிழருக்கும் சென்று சேர்வதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்!''
சுரா.மாணிக்கம், கந்தர்வகோட்டை
4. மேடைப் பேச்சுக்கு அன்று தொண்டர்கள் மயங்கினார்கள். இன்று..?
வேடிக்கை பார்க்கிறார்கள்!
எஸ்.ராமசாமி, குட்டைதயிர்பாளையம்.
5. மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு உள்ள சிறப்பு என்ன?''
''நீர் - நீர்முழ்கிக் கப்பல் ஊழல்
நிலம் - விவசாயிகள் நிவாரண ஊழல்
காற்று - 2ஜி அலைக்கற்றை ஊழல்
ஆகாயம் - ஹெலிகாப்டர் பேர ஊழல்
நெருப்பு - நிலக்கரி பேர ஊழல்.
ஆக, பஞ்சபூத ஊழல் அரசு என்று மன்மோகன் சிங் அரசைக் குறிப்பிடலாமா
6. மற்ற மாநில அமைச்சர்களுக்கும், நம்ம மாநில அமைச்சர்களுக்கும் உள்ள வித்தியாசம்?''
''மற்ற மாநில அமைச்சர்கள் தங்கள் இலாக்கா அறிவிப்புகளைத் தாங்களே வெளியிடுவார்கள். தமிழ்நாட்டு மாநில அமைச்சர்கள் தங்கள் இலாக்கா அறிவிப்புகளையே மறுநாள் செய்தித்தாள் பார்த்துத்தான் தெரிந்துகொள்வார்கள்!''
- சுஜாதா, சென்னை-6
'7. ஜெயலலிதா, கருணாநிதி தொடங்கி பலரும் மன்மோகன் சிங்குக்கு எழுதும் கடிதங்களை சிங் என்ன செய்வார்?''
''மாவீரன் நெப்போலியன் ஒரு முறை சொன்னான். 'உங்களுக்கு வரும் கடிதங்களுக்கு உடனே பதில் எழுதாமல், அதை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள். சில காலம் கழித்து அதை எடுத்துப் படியுங்கள். அப்போது அதற்குப் பதில் எழுத வேண்டிய அவசியம் இருக்காது!’ நெப்போலியன் சொன்னதை இப்போது ஆத்மார்த்தமாகக் கடைபிடிப்பவர் நம் பிரதமர் மட்டும்தான்!''
- எஸ்.விவேக், சென்னை
8. தி.மு.க-வில் அழகிரி என்ன எதிர்பார்க்கிறார்?
அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவர் எதிர்பார்ப்பதும் கருணாநிதி உட்கார்ந்திருக்கும் நாற்காலிதான். நாற்காலி ஒன்று... சுற்றுபவர்கள் இருவர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் சிக்கலே!
பி.சாந்தா, மதுரை-14.
9. கருணாநிதிக்கு எப்போதுமே 'பிரதமர்’ பதவி மேல் மோகம் இருந்ததுமாதிரி தெரியவில்லையே என்ன காரணம்?
'என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று கருணாநிதியே இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார்.
வி.பரமசிவம், சென்னை-25.
10. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸுடன் எந்தக் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் எனக் கணிக்க முடிகிறதா?
இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் 15-க்கும் மேற்பட்ட ’கட்சிகளாவது’ சேர்ந்து கூட்டணி அமைக்கிறார்களா என்பதைப் பார்ப்போம்!
அன்புடன்
மதுரைத்தமிழன்
Courtesy : Vikatan
டிஸ்கி : இந்த கேள்வி பதில்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த கேள்வி பதில் எது?
all are good
ReplyDeleteஎன் இதயத்தில் எத்தனை T.B இடம் வேண்டுமானாலும் தரத் தயார்.
ReplyDelete7 கு பாஸ் மார்க்
ReplyDelete2
ReplyDelete