அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் தீவரவாதிகள் அட்டாக் ...
திங்களன்று 27, ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்துகொண்டிருந்த போது குண்டு வெடிப்பு நடந்தது . போட்டி முடியக் கூடிய இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. முதல் குண்டு வெடிப்பு 15.04.2013, அன்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.50 க்கு நடந்துள்ளது. அடுத்த 10 வினாடிகளில் முதற் குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு 50 யார் தூரத்தில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது. 9/11 ற்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த முதலாவது பாரிய குண்டு வெடிப்பாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. கிட்டதட்ட மாரத்தான் முடியும் போது தான் குபிளாசா நட்சத்திர ஒட்டல் அருகே குண்டு வெடிப்பு நடந்தது .இச்சம்பவத்தில் 3பேர் பலியானார்கள் 141க்கும் மேற்படடோர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்களில் 25லிருந்து 30 பேர் வரை ஒரு கால் மற்றும் இரு கால்களை இழந்திருப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.போட்டியை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்களே இந்தக் குண்டு வெடிப்புகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.பாஸ்டன் நகரில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஸ்டன் நகரின் சகஜ நிலமை இன்று பாதிக்கப்பட்டுள்ளது. அது வழக்கம் போல காலை நேரத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வெடிக்கச்செய்த வெடிகுண்டு சிறிய நடு்த்தர உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதான் என பாஸ்டன் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. பாஸ்டன் நகரில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தொடர்பான 50 க்கும் மேற்பட்ட போட்டோக்களை கிழகண்ட லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்
http://abcnews.go.com/US/slideshow/boston-marathon-explosions-finish-line-18960444
அமெரிக்காவில் இருக்கும் FBI மற்றும் அனைத்து துறைகளும் துப்பு துலங்கி கொண்டிருக்கின்றனர். இதை அமெரிக்கா அரசாங்கம் எளிதாக எடுத்து கொள்ளவில்லை செப்டம்பர் 11 க்கு அப்புறம் நடந்த மிகப் பெரிய தாக்குதலாகவே கருதுகிறது. இந்திய அரசாங்கம் மாதிரி எளிதில் எடுத்து கொள்ளாது. சம்பவம் நடந்த இடத்துக்கருகில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட ஒரு அரேபியா நாட்டவரிடம் விசாரணை நடத்தியது அது பற்றிய தகவல்கள் அதிகம் ஏதும் இப்போதைக்கு வெளியிடவில்லை..
ஆனால் ஒன்று உறுதி தவறு செய்தவனை கண்டுபிடித்து உடனடியாக தண்டனை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒண்ரு மட்டும் நிச்சயம் இந்தியா மாதிரி கைது செய்து பல ஆண்டுகள் சிறையில் வைத்து பிரியாணி தரமாட்டார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
எவ்ளோ பாதுகாப்பு இருந்தும் அசம்பாவிதங்கள் நடைபெற்று விடுகின்றன
ReplyDelete
ReplyDeleteஒப்பீடுகள் சரியா... தேவையா...?
உயிரை மதிக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இதே அமெரிக்கர்கள் எத்தனை பேர்கள் இராக்கில், ஆப்கானிஸ்தானில், லிபியாவில் மக்களை கொல்லுகிறார்கள் கொன்று இருக்கிறார்கள். அது உயிர் இல்லையா?
ReplyDeleteபாவம்
ReplyDeleteபஞ்ச் இங்கேயும் ......................
எவ்வளவுதான் தொழில் நுட்பப் பாதுகாப்பு இருந்தாலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடிவதில்லை.
ReplyDeleteதவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும்.
ReplyDeleteஇதை செய்தவர்கள் கொடூரமானவர்கள்.
ReplyDelete//ஆனால் ஒன்று உறுதி தவறு செய்தவனை கண்டுபிடித்து உடனடியாக தண்டனை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை//
உண்மை தான்.
தவறு செய்தவனை தண்டிக்கும் போது தவறுசெய்தவனை தண்டிக்காதீர்கள் விடுதலை செய் என்றும் அமெரிக்காவில் சொல்ல மாட்டார்கள்.
நேற்று இந்த செய்தியைக் கேள்விப்பட்டது முதல் மன உளைச்சல்தான்! எத்தனை கோழைத்தனமிக்க செயல்! தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்.
ReplyDelete