இப்படித்தான் குடும்பங்களில் சண்டை ஆரம்பிக்கிறது....
ஒருத்தன் தன் வீட்டிற்கு மிகவும் லேட்டாக வந்தான். அவனுக்கு நிச்சயம் தெரியும் என்னதான் அவன் கதவை தட்டினாலும் அவன் மனைவி திறக்க மாட்டாள் என்று அதனால் ஒரு தந்திரம் செய்தான். அவளுக்காக அவன் ஒரு லேப்டாப் வாங்கி வந்திருப்பதாக நடிக்க முடிவு செய்தான். அதன்பின் கதவை தட்டினான்.
அப்போது அவன் மனைவி யார் அது என்று கேட்டாள்.
அதற்கு அவன் அழகான ஸ்மார்ட்டான பெண்ணுக்கு லேப்டாப் கொண்டு வந்திருப்பதாக சொன்னான்.
மனைவி கதவை திறந்து விட்டு அவன் கையை பார்த்து எங்கே அந்த லேப்டாப் என்று கேட்டாள்.
அதற்கு அவன் கேட்டான் எங்கே அந்த அழகான ஸ்மார்ட்டான பெண் என்று கேட்டான்.
அவ்வளவுதாங்க அவன் சொன்னான்...
அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று என்னிடம் கேட்கிறீர்களா?
புரியாதவர்கள் பதிவின் தலைப்பை மீண்டும் படிக்கவும்.
மேலே சொன்ன விஷயம் நடந்து ஒரு மாதம் ஆனா பின் அவர்கள் வாழ்க்கை மீண்டும் சந்தோஷமாக இருந்து வந்தது. அப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த பெண்ணின் கணவன் ஒரு நாள் மிக சீக்கிரமாக வந்து கதவை தட்டினான்.
கதவை திறந்த அவன் மனைவி அவனிடம் என்னங்க ரொம்ப ஆச்சிரியமாக இருக்கிறது நீங்க சீக்கிரமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாள்
அதற்கு அவன் நான் ஆபிஸ் வேலையில் ஒரு சின்ன தப்பு பண்ணிவிட்டேன் அதனால் என் மேனேஜர் நன்றாக திட்டி நரகத்துக்கு (Go to Hell ) போடா என்று திட்டிவிட்டாள்.
அதன் பின்னும் அவள் சொல்லை நான் கேட்கவில்லையென்றால் பிரச்சனை என்று கருதி வீட்டுக்கு வந்துவிட்டேன் என்றான்.
அவன் சொன்னதுல என்ன தப்புங்க.......
யாரப்பா சவுண்டா கேட்கறது...அந்த கணவன் நீங்கள்தானா என்று........உங்க கேள்விக்கு எல்லாம் ஆமாம் என்று சொல்லி சண்டையை ஆரம்பிக்க இப்ப விரும்பவில்லை அடுத்த மாசம் வந்து கேளுங்க... ஒகே வா...
எங்க வீட்டு கிச்சன்ல யாரோ பூரிக்கட்டையை தேடுறமாதிரி இருக்குது... நான் என் தலையை காப்பாற்றனும். அதனால இப்ப நான் ஜுட் விட்டுகிறேனுங்க...
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹா..!
ReplyDeleteஒவ்வொரு வரியிலும் சிரிப்புதாங்க நிறைஞ்சிருக்கு.
சாதரணமாக நடக்கக்கூடிய உண்மைதான் நண்பரே. 2 படங்களும் மிகவும் அருமை.
ஹா.. ஹா.. அப்ப இந்த மாச சண்டை ஓவரா? டைம் டேபிள் வச்சு சண்டையா? அடுத்த மாசம் எப்ப வரும்ங்க..? ஆவலோடு..!
ReplyDeleteஅடிக்கிற கைதான் அணைக்கும் நண்பா .... நாம ஆயிரம் தான்மதுர தமிழனா இருந்தாலும் கல்யாணம் ஆனதுக்கப்புறம் முறுக்குன மீசைய வீட்டுக்குள்ள போறப்போ கீழ தொங்க விட்டு போனாதான் மீசையாவது மிஞ்சும் அனுபவம் உள்ளவன் சொல்றேன் கேட்டுகோங்க!!!
ReplyDeleteஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹா..!
Deleteஎல்லா வீடுகள்லயும் இதே பிரச்சனை தானா? நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
சங்க தலைவர் யார்
ReplyDelete//யாரப்பா சவுண்டா கேட்கறது//
ReplyDeleteஇது கூட தெரியாமலா இருக்கோம்.
ஹா ஹா ஹா! நல்ல நகைச்சுவை! இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteதமிழன் அப்படியெல்லாம் ஒடப்படாது நல்லபடியா நாலு அடி வாங்கி புத்தாண்டை தொடங்குங்க பாஸ்.
ReplyDeleteபாருங்களேன் எவ்வளவு நல்ல மனசுன்னு த்ம்கொண்டு இருக்கற பூரிகட்டையை தேடறாங்க உலக்கையை தேடாம உண்மைகள் நீங்க உண்மையிலேயே குடுத்துவச்சவர்தான்
ReplyDeleteநல்லா இருக்கு.
ReplyDelete:)))))))
ReplyDeleteHa ha ha ha..........
ReplyDelete