தமிழகத்து பாசிடிவ் செய்திகள் (படிக்க ரசிக்க )
அம்மா உணவகம் மூலம் மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன உலகில் எந்த அரசாங்கமும் செய்யாத புதுமையான முயற்சி இதனால் எல்லார்வீட்டிலும் கிரைண்டரில் மாவு அரைக்கப் பயன்படும் மின்சாரம் சேமிக்கபடுகிறது அதனால் மத்திய அரசாங்கத்திடம் மின்சாரம் எதிர்பார்க்க தேவையில்லை அதுமட்டுமல்லாமக் கேஸ் விலையை ஏற்றிவிட்டதால் சமைக்க கேஸ் அதிகம் உபயோகிக்க தேவையில்லை மேலும் வரும் தேர்தலில் இலவசமாக கிரைண்டர் தர தேவையில்லை.
இது ஒரு பாசிடிவ் செய்திதானே?????
மேலும் சில பாசிடிவ் செய்திகள்
தமிழக அரசின் சாதனை : அப்பாவிற்கு டாஸ்மாக்கில் வேலை அம்மாவிற்கு அம்மா உணவகத்தில் வேலை........
கோடைகாலம் வருவதால் "தண்ணிர்' பிரச்சனையை சமாளிக்க அதிரடிப்பணி .அதிக அளவில் டாஸ்மாக்கில் பீர் ஸ்டாக் வைத்து விற்பனை செய்ய டார்கெட் நிர்ணயம்
கண்டிப்பாக தினசரி சில மணிநேரங்கள் மின்சாரம் சப்ளை செய்யப்படும்
இந்த மாதம் அமைச்சரைவையில் மாற்றம் ஏதும் கிடையாது.
தமிழகம் மிகவும் சுபிட்சமாக இருப்பதால் தொழிலாளர்கள், பஸ் டிரைவர்கள் ஸ்டிரைக் செய்யவில்லை
கள்ளச்சாரயம் எங்கும் காய்ச்சப்படவில்லை அதனால் ஏற்படும் சாவுகளும் இல்லை.
விரைவில் திறக்கவிருக்கும் பள்ளி கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து அந்த பள்ளியின் வளர்ச்சியில் பங்கு பெறவும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலும் அந்த கல்லூரிகளுக்கு லட்சக் கணக்கில் டொனேஷன் தர மக்கள் ரெடி.
மக்கள் இடத்தில் பணப் புழக்கம் மிக அதிகம்
இலங்கை பிரச்சனை தீர தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம், திமுக கட்சி மத்திய அரசாங்கத்தில் இருந்து விலகல், ஆளுக்கு 2 மணி நேரம் வீதம் காலை முதல் மாலை வரை சினிமா நடிகர்கள் தொடர் உண்ணாவிரதம்.
இந்த வாரத்தில் காதலிக்க மறுத்த பெண்கள் மீது ஆசிட் ஊற்றவில்லை பரபரப்பாக செய்திகள் வெளியிட பலத்காரம் ஏதும் செய்யவில்லை.
அரசியல் தலைவர்கள் வாக்கிங் செய்யும் போது நடக்கும் கொலைகள் ஏதும் நடக்கவில்லை.
நித்தியாவிற்கு அப்புறம் வேறு எந்த சுவாமிஜிகளின் லீலை படங்கள் ஏதும் டிவியில் ஒலிபரப்பு செய்யவில்லை.
உலகநாயகன் எடுத்த படத்திற்கு மக்கள் ஆதரவு தந்து அவரை தெருக்கு கொண்டு வரமாலும் வெளிநாட்டுக்கு அவரது திறமை போகாமலும் செய்தனர்.
தமிழக மக்களின் சந்தோஷத்திற்காக தன் உடல் நிலை சரியில்லை என்ற போதிலும் கோச்சடையான் படத்தில் ரஜினி பல மாதம் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வெற்றியடைய தன் உடல் நிலை சரியில்லை என்ற போதிலும் 2 மணி நேரம் இலங்கை தமிழருக்காக கடும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
தமிழக மக்கள் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி டிவி ஷோவை தினசரி பார்த்து வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்ற நல்ல வாழ்க்கை பழக்க வழக்கங்களை கற்று கொண்டு வருகின்றனர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் தமிழகத்தில் பாடகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.
அன்புடன்
மதுரைத்தமிழன்
நான் பாசிடிவ் செய்திகள் வெளியிடுவதில்லை என்ற சிலரின் மனக் குறையை தீர்க்க இந்த பதிவு. எப்படி இருக்கிறது என்பதை புரிந்து ரசித்தால் பின்னுட்டத்தில் கும்மவும்
.
எனது முந்தையபதிவில் பின்னுட்டம் இட்ட ரமணி சார், சீனு, தனபாலன், சசிகலா, சுரேஷ், உஷா அன்பரசு, முத்தரசு, அமுதா கிருஷ்ணா, அருணா செல்வம், பூவிழி, நம்பள்கி, வீரராகவன் ரங்கராஜ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அனைவரும் நல்ல கமெண்ட்ஸை வழங்கி இருக்கிறார்கள். அதில் மிகவும் என்னை சிரிக்க வைத்தது 1. அமுதா கிருஷ்ணா, 2 வீரராகவன் 3. நம்பள்கி 4 பூவிழி. உங்கள் நான்கு பேருக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள். காரணம் நான் சொன்னதை நகைச்சுவையாக எடுத்து புரிந்து கொண்டு அதற்கு நகைச்சுவையாக பின்னுட்டம் இட்டதற்குதான்
என்னமா பாசிட்டிவாக யோசிக்கிறீங்க ??/
ReplyDeleteநாடி கவிதைகள்
நாங்க மதுரக்காரங்கல்ல
Deleteபாசிடிவ் செய்தி ரசித்து சிரிக்க வைத்தது.
ReplyDeleteஆமா இது என்ன பதிவுக்கு பதிவு நன்றி சொல்லும் உத்தேசமா ?
என்னங்க நான் வெளியிட்டது பாசிடிவ் செய்திங்க அதை பார்த்து தமிழகத்தில் நல்லது நடக்க்குதுன்னு நினைச்சு பெருமை படுவீங்கன்னு பார்த்தா நீங்க காமெடியாக எடுத்தி சிரிக்கிறீங்க
Deleteஎங்கள் மனக் குறையைத் தீர்த்து
ReplyDeleteவைத்தும் ரசித்து சிரிக்க வைத்தமைக்கும்
மனமார்ந்த நன்றி
Deleteபடித்து ரசித்து கருத்து இட்டதற்கு நன்றி சார்
அது என்ன "கடும்" உண்ணாவிரதம் ????
ReplyDeleteகடும் உண்ணாவிரதம் என்றால் நன்றாக சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரத பந்தலில் 2 மணி நேரம் உட்கார்ந்து நல்ல பாடல்களை கேட்டு விட்டு பசிக்கும் போது வீட்டிற்கு போய் வேண்டியதை சாப்பிடுவதுதாங்க இந்த கடும் உண்ணாவிரதம் தலைவர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் நார்மல் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் அதாவது நாள் முழுவதும் சாப்பிடாம்ல் தண்ணி குடிக்காமல் இருக்க வேண்டும்
Delete
ReplyDeleteNO ONE CAN DO IT FOR ME.. உண்மை.....! நானாகத் திருந்தினால்தான் உண்டு.!