இன்றைய காதல் காவியக் காதல் அல்ல
அவன் இவளது பேஸ்புக் ஸ்டேடஸ்க்கு லைக் போடுவான்
இவள் அவனது பேஸ்புக் ஸ்டேடஸ்க்கு லைக் போடுவாள்
அவன் அவளுக்கு பேஸ்புக்கில் காலை வணக்கம் சொல்லுவான்
இவள் அவனுக்கு பேஸ்புக்கில் இரவு வணக்கம் சொல்லுவாள்
அதன் பின் இருவரது புரோபைலிலும் போட்டோக்களும்
தினசரி மாறிக் கொண்டே இருக்கும்
அவன் பெண்ணுரிமைக்கு ஆதரவாக பதிவை இடுவான்
இவள் காதலில் உருகி கவிதைகள் எழுதுவாள்
அதன் பின் மொபைலிம் மெசேஜ் பரக்கும்
கம்பியுட்டரில் சாட் செய்யும்
'ஐ லவ் யூ 'என்பார்கள்
கடற்கரையில் சந்திப்பார்கள்
படகோரம் அமர்வார்கள்
பட்டாணி சுண்டல் வாங்கி சாப்பிடுவார்கள்
கைகள் விளையாடும்
மீண்டும் சந்திப்பார்கள்
மனம் மட்டும் ஒன்றினால் போதுமா
கைகள் விளையாடினால் போதுமா
உடல் ஒன்ற வேண்டாமா என்று நினைத்து
மகாபலிபுரம் போவார்கள்
ஆதம் ஏவாளாக மாறுவார்கள்
உடல் பொருத்த ஆராய்ச்சி பல முறை நடக்கும்
மனப் பொருத்தமும் உடல் பொருத்தமும்
பார்த்தால் மட்டும் போதுமா என்று எண்ணி
சாதி ,பொருளாதார, குடும்ப அந்தஸ்து பொருத்தமும் பார்ப்பார்கள்
அதன் பின் அவர்கள் அறிவுக் கண் திறக்கும்
மாற்றம் ஒன்றே என்றும் மாறாது என்று நினைப்பார்கள்
உடனே அவர்கள் செல்போன் எண் மாறும் பேஸ்புக் ஐடியும் மாறும்.
காதலும் மாறும் கத்தரிக்காயும் மாறும்
கல்யாணமும் நடக்கும் கஷ்டகாலமும் ஆரம்பிக்கும்
எனக்கும் கிறுக்க தெரியும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பழைமையான நம்பிக்கைகளில் ஊறிப்போன இந்தியா நாட்டிற்கு அறிவியல்பூர்வமான சிந்தனையே கிடையாதா?
பழைமையான நம்பிக்கைகளில் ஊறிப்போன இந்தியா நாட்டிற்கு அறிவியல்பூர்வமான சிந்தனையே கிடையாதா?
நல்லாவே கிறுக்கியிருக்கீங்கப்பூ...! யதார்த்த உலகில் நிறையக் காதல்கள் இந்த மாதிரி இருந்து தொலைக்கின்றன. என் செய்வது?
ReplyDeleteகாதல்கள் பல வகை அதில் இதுவும் ஒரு வகை
Deleteஇன்றைய இளைஞர்களின் விளையாட்டு இதுதான்...
ReplyDeleteஇந்த விளையாட்டு முதியவர்களிடம் தொற்றிக் கொண்டு வருகிறது
Deleteமாற்றம் ஒன்றே மாற்றமே இல்லாது என்பது இதற்கும் பொருந்துகிறதே....!
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
Delete//உடல் ஒன்ற வேண்டாமா // இந்த வரிகளில் இருக்கும் கோவத்தை ரசித்தேன்
ReplyDeleteஇல்ல சார் இது கிறுக்கல் அல்ல.. இன்றைய காதல் குறித்த அவலம்
நல்ல விஷயம் இல்லாமல் அவலத்தை சொல்லுவதால் கிறுக்கல் என்று சொல்லி இருக்கிறேன்
Deleteநடக்கும் உண்மைகள்...
ReplyDeleteஉண்மைதான் மதுரைக்காரரே
Deleteஹாஹ்ஹ்..........நிஜமாதான் கிறுக்கி உள்ளீர்கள்
ReplyDeleteநான் மனதில் தோன்றியதை கிறுக்கினேன் அது நிஜமாகி உள்ளது
Deleteஇப்படித்தான் இன்றைக்கிருக்கிற காதல்னு இயல்பா அழகா கொஞ்சம் கோவத்துடன் கவிதையா சொல்லியிருக்கிங்க.
ReplyDeleteஇப்படித்தான் இன்றைய காதல் இருக்கிறது என்று சொல்ல வில்லை ஆனால் இப்படியும் காதலில் சிலவகைகள் இருக்கின்றன என சொல்ல முயற்சிக்கிறேன் அவ்வளவுதான் . அப்புறம் இதில் எனக்கு கோபம் ஏதும் இல்லை அது எழுதும் போது இயற்கையாக வந்து இருக்கிறது. இது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம் அதனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
Deleteநான் எந்த விஷயங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை அல்லது கோபப்படுவதில்லை
இப்படி எழுதுவதற்கு பேருதான் கவிதையா?
உண்மையை கவிதையாய் சொன்ன விதம் சூப்பர்
ReplyDeleteஅட நான் கவிஞனா?
Deleteஅட கிறுக்கலும் கவிதையாத்தான் தெரியுது.
ReplyDeleteநீங்களும் என்னை கவிஞராக ஆக்கிட்டீங்க அப்ப நான் இனிமேல் அதிக கிறுக்க ஆரம்பிக்க போறேன்
Deleteஉண்மையை கூட இலக்கிய நயத்துடன் சொல்லிய தமிழ் சங்கம் வளர்த்த மதுரை யில் மதுரைகாரரா நீங்கள் ..................
ReplyDelete
Deleteஎன்னங்க இப்படியா நக்கல் பண்ணுவது புடிக்கலைன்னா நேரிடியா திட்டுங்க