வெள்ளக்காடன சென்னையும் முகநூல் கருத்துகளும்
சென்னையில் மழையாம் அதனால் வெள்ளமாம்
தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறதாம்.
மக்களே இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்
வெள்ளம் வடிந்து நிலைமை சரியானதும்
நாம் காவிரி தண்ணிருக்காக போரடலாம்
அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்
அரசின் மெத்தனமும் அதிகாரிகளின் மெத்தனமும்தான்
சென்னையில் மழை நீரால் ஏற்பட்ட
வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் என்று மக்கள் குற்றசாட்டாம்.
ஆமாய்யா இவங்கதான் மிக பொறுப்போடதான்
பிக்பாஸை பார்த்து கொண்டு
ஒவியாவா ஜுலியா என்று விவாதித்து கொண்டு இருந்தனர்.
என்னமோ அவங்கதான் வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கப் போவது மாதிரி.
போங்கடா பொறுப்பற்ற வெண்னைங்களா உங்களுக்கு எல்லாம் இந்த வெள்ளம் போதாதுடா
சுனாமிதாண்டா வரணும் #Chennairain
----------------------------
ஸ்டாலின் துபாய் சென்றதால் எங்களால் வெள்ள நிவாரண பணிகளை செய்ய முடியவில்லை அதிமுக அரசு கைவிரிப்பு
சென்னை நவம்பர் 04 :தமிழக முதலவர் எடப்பாடி மற்றும் பன்னீர் இருவரும் வெள்ளம் ஏற்பட்ட சில பகுதிகளை சென்று பார்வையிட்டு அங்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறார்கள் அவர்கள் அப்படி செய்த பின்பும் அந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாத நிலமைதான் பல இடங்களில் இருக்கிறதாம். இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் தமிழகத்தில் ஸ்டாலின் இல்லாததால்தான் என்று தெரியவருகிறது.
அதிமுக அமைச்சர்கள் வெள்ள நிவாரண செயல்ககளை செய்வதைவிட ஸ்டாலின் துபாய்க்கு சென்றது ஏன் என்று பேசியே காலத்தை வீண் அடிக்கிறார்கள் ஒரு வேளை தமிழகத்தில் ஸ்டாலின் இல்லாததால்தான் எங்களால் வெள்ளை நிவாரண பணிகளை செய்ய முடியவில்லை என்று அதிமுக அரசு சொன்னாலும் சொல்லும்
வெள்ள நேரத்தில் ஸ்டாலின் துபாய் செல்வது நியாயமா என்று கேட்கும் கூமுட்டைகளே அவர் என்ன தமிழக முதல்வாரா என்ன? வெள்ள நேரத்தில் தமிழகத்தில் இருக்கும் இரண்டு முதல்வர்கள் களத்தில் இருக்காமல வீட்டிற்குள் இருப்பது ஏன் என்று கேளுங்கள்
எம்.எல்.ஏவாக இருந்து தன் தொகுதியில் வெள்ள நிவாரணம் செய்யாமல் துபாய் செல்லாமா?
எதிர்கட்சி தலைவராக இருந்ததால் அவரும் வெள்ளம் பாதித்த பகுதிகளை சென்று பார்த்து அவரால் என்ன செய்ய முடியுமோ அதை அவர் செய்தார். அவர் எம் எல் ஏவாக இருந்தாலும் அதற்கு மேல் அவரால் என்ன செய்ய இயலும். செய்ய வேண்டியது எல்லாம் அரசும் அரசுத்துறையும்தான் ஸ்டாலின் பயணம் முன்பாகவே ப்ளான் செய்யப்பட்டது அவர் தண்ணி வடியும் வரை தன் ப்ளானை மாற்றத்தான் வேண்டுமா என்ன? அப்ப முதல்வர் துணை முதல்வர்களின் செயல்பாடுகள்தான் என்ன?
வெள்ள நேரத்தில் தமிழகத்தில் இல்லாம் துபாய் சென்ற ஸ்டாலின் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணனுமா? அப்ப தமிழகத்தில் இருந்தும் வெள்ளப்பகுதிகளில் களம் இறங்கி வேலை செய்யாத அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலில் ராஜினமா செய்யத்தயாரா?
---------------------------------------------------------------------------------
இந்த காலத்தில் படித்த முட்டாள்கள் அதிகம் அதனால்தான் எதை வாங்கினாலும் அதில் வார்னிங்க் லேபல் இருக்கிறது அந்த காலங்களில் அப்படி இல்லை
அன்புடன்
மதுரைத்தமிழன்
படிக்காத முட்டாள்களைவிட...படித்த முட்டாள்கள்தான் நாட்டில் பெருகி வருகிறார்கள்....
ReplyDeleteரெட் கோட் பண்ண வரிகள் சூப்பர்
ReplyDeleteபடிக்காதவங்களா இருந்த அப்போ நல்லாத்தான் இருந்து இருக்காங்க சொல் புத்தி சுய புத்தியோடு இரண்டையும் இணைச்சு இப்பதான் எல்லாம் தெரியும் எல்லாம் தெரியும் பல்லி மாதிரி கத்தி கழனி பானையில் விழறாங்க
உண்மைதான் !
ReplyDeleteமக்களுக்கும் தேங்கும் நீரில் பங்கு இருக்கிறது. பிளாஸ்டிக் உட்பட கண்ட குப்பைகளையும் சர்வசாதாரணமாக தெருவில் போட்டு விடுவோம். ஆனால் அவை சென்று நீர்செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டால் அதை எடுக்க அரசாங்கமும், கார்ப்பரேஷனும் வரவேண்டும்! எதிர்க்கட்சிகள் என்றால் ஆளும் காட்சியைக் குறை சொல்லியே ஆகவேண்டும்.அப்போதுதான் அடுத்து அவர்களால் ஆட்சிக்கு வரமுடியுமென்கிற சிந்தனை. ஆளும் கட்சியோ, மழையா, வெள்ளமா? எங்கே? இல்லையே என்று சொல்ல வேண்டும்! பொதுமக்கள் இவரால் பக்கம் பாதி, அவர்கள் பக்கம் பாதி என்று பிரிந்து கட்சி கட்டவேண்டும்! அடைப்பு போங்கய்யா.... (கடைசி வரியை ரைசா குரலில் படிக்கவும்!)
ReplyDeleteநன்றாக அலசி ஆய்வு செய்துள்ளீர்கள்
ReplyDeleteபாராட்டுகள்
நெத்தியடி. அருமை நண்பரே
ReplyDelete