Wednesday, November 22, 2017

#avargalUnmaigal
கருத்து சுதந்திரம் இப்போது காவிகள் சுதந்திரமாக போய்விட்டதா?

இந்திய மக்களிடம் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு அதற்கு பதில் காவி சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பாஜக ஆட்சியில் எழுதிய சட்டத்தைவிட எழுதாத சட்டத்திற்கே மதிப்பு அதிகம்.


ஒருவர் ஒரு நிகழ்வை பற்றி விமர்சித்து கருத்து சொன்னால் அதில்  உடன்பாடி இருந்தால் அதை ஆதரிக்கவோ அல்லது அது தவ்று என்று ஆதாரப் பூர்வமாக மறுத்து பதில் கருத்து சொல்லலாம் அல்லது அந்த கருத்து ஒரு சமுகத்தில் குழப்பம் விளைவித்து  அதற்கு சேதம் ஏற்படுமானால் அவரை விசாரித்து அவர் சொன்னது சட்டப்படி தவறாக இருந்தால் அவருக்கு தண்டனை தரலாம். அதுதான் நியாயம்..




ஆனால் அப்படி இல்லாமல் கருத்து சொன்னவரின் தலையை வெட்டி வருபவர்களுக்கு அல்லது அவரின் மூஞ்சியில் கரி பூசுபவர்களுக்கு அல்லது அவரது வீட்டை குடுமபத்தை  சேதபடுத்துவர்களுக்கு ஒரு லட்சம் அல்லது கோடி ரூபாய் பரிசு என்று அறிவிப்பது சட்டப்படி சரியா?   இப்படி அறிவிப்பது ஒரு ஜனநாயக நாட்டின் சட்டமாக அல்லாமல்  திவரவாதிகளின் சட்டமாகவே இருக்கும்..

ஒருவரை கொல்ல அறிவிக்கும் உரிமை இருக்கும் நாட்டில் பேசத்தான் உரிமை இல்லை. வெட்ககேடு


இப்படிபட்ட சட்டங்கள் இந்தியாவில் பாஜக ஆதரவாளர்களால் இப்போது மெதுவாக அமுல்படுத்தப்படுகிறது அதை பார்த்தும் கேட்டும் பாரதப் பிரதமரும் எந்தவித ஆக்ஷனும் எடுக்காமல் இருக்கிறார் என்றால் அவர் தீவிரவாத சட்டத்தை ஆதரிப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது  

இந்திய சட்டத்தை எழுதியவர் வேண்டுமானால் அம்பேத்காராக இருக்கலாம் ஆனால் அந்த சட்டத்தை மாற்றி அமைத்த பெருமையை பெற்றவர்கள் காவி கூட்டங்கள்

இதோ பாஜக ஆட்சியில் திருத்தி எழுதப்பட்ட கருத்து சுதந்திரங்கள்

பாட்னா:''பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம்,'' என, பீஹார் மாநில, பா.ஜ., தலைவர் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

#பத்மாவதி படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோன் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் என அரியானா பா.ஜ.க. செய்தித் தொடர்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சூரஜ்பால் பகிரங்க அறிவிப்பு  #Padmavati #DeepikaPadukone

இப்படி இந்திய சட்டத்திற்கு எதிராக பேசுபவர்களை கண்டிக்க  அல்லது தண்டிக்க இந்திய பிரதமருக்கும் அல்லது ஜனாதிபதிக்கும் அல்லது தலைமை நீதீபதிக்கும்  அதிகாரம்  இல்லையா என்ன? இல்லை அதிகாரத்தை பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிப்பது யார்

நான் எழுதும் அரசியல் பதிவுகளுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும்  பாஜக தொண்டனுக்கு பிஹார் அரியானா மாநில தலைவர்கள் இப்படி பேசியதற்கு ஒரு கண்டம் கூட தெரிவிக்காமல் இருக்கிறீர்களே அது எப்படி உங்களால் இப்படி இருக்க முடிகிறது..

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :  ஹீஹீ படம் எப்படியோ தவறுதலாக இங்கே வந்துவிட்டது மன்னிச்சுங்கோ மக்காஸ் ஹீஹீ

5 comments:

  1. இந்தியா சுதந்திர நாடு என்பதை முதலில் போட்ட படமே காட்டி விட்ட"தூ"

    கடைசி ஒரு எழுத்து தே.தி.மு.க. தலைவருடையது.

    ReplyDelete
  2. கலாச்சாரமென்பது உணர்வுகள் சம்பந்தப் பட்டதுமிக எளிதாக தூண்ட முடியும் சரித்திரம் என்பது சான்றுகளால் நிரூபிக்கப்பட வேண்டியது1303 ம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தை 1540ம் ஆண்டு கவிதையாக வடித்திருக்கிறர் மாலிக் மொஹமத் ஜயசி என்பவர் அதில் வரும் ராணி பத்மினி தங்கள் இனத்தின் மானம்காக்க தீக்குளித்ததாக கூறப்பட்டது அதை ஒரு படமாக எடுத்து அது வெளிவரும் முன் படத்தில் சித்தரிக்கப்பட்டவைகள் ராஜ புத்திர இனத்துக்கு அவமானமென்று கூறி வெட்டு குத்து என்றேல்லமச்சுறுத்துகிறார்கள் அதற்கு துணை போகும் காவியரசு அவர்களால் ஆளப்படும் நாம்கருத்து சுதந்திரம் எதிர்பார்க்கலாமாபார்க்க என்படிவு சரித்திரமா கலாச்சாரமா

    ReplyDelete
  3. அரசியலின் தரம் அந்த அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  4. முற்றும் உண்மை

    ReplyDelete
  5. படத்தை பார்த்து புரிந்து கொள் என்பது மாதிரி.... புரிந்து விட்டது..கருத்து சூ..தந்திரம் காவிகளின் சு..தந்திரமாக ஆகிவிட்டது..என்பது..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.