Saturday, November 18, 2017

#avargalunmaigal
வருமான வரித் துறை சோதனை போட வேண்டிய இடம் சோ.ராமசாமியின் வீட்டைத்தான் ஜெயலலிதா வீட்டை அல்ல.


சசிகலா ஜெயலலிதாவிற்கு நெருங்கிய தோழியாக இருக்கலாம் ஆனால் ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கை பாத்திரமானவர். துக்ளக் ஆசிரியர் நடிகர் சோ.ராமசாமிதான்... ஜெயலலிதா பல ரகசியங்களை இவரிடம் பகிர்ந்ததுமல்ல இவரிடம் இருந்து ஆலோசனை பெற்றுதான்  தனது அரசியல் மூவ்களை நகர்த்தி வந்துள்ளார்.சசிகலாவை ஒதுக்கி வைத்த போது மிக நெருக்கமாக இருந்தவரும் இவர்தான்.

#avargalunmaigal
சோவின் மறைமுக உதவி இல்லையென்றால் ஜெயலலிதா எப்போதோ சிறையில் கம்பி எண்ணி இருப்பார். அப்படிபட்ட நம்பிக்கைக்கு பாத்திரமானவரிடம்தான் ஜெயலலிதா பல சொத்துகளுக்கான ஆதாரங்களையும் அதை பாதுக்கவும் வழி வகைகளை ஏற்படுத்தி இருந்தார். காரணம் எந்த கட்சி மத்தியில் மட்டுமல்ல மாநிலத்தில் வந்தாலும் அவரின் இடத்தை எந்த காரணத்தை கொண்டும் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால்தான் காரணம் சோ பல அரசியல் கட்சிகளிடம் மிக நெருக்கமான நட்பை ஏற்படுத்தி வாழ்ந்து வந்தார்.

#avargalUnmaigal
தேன் பானையில் கைவிட்டவன் எடுத்து நக்காமலா இருப்பான் என்று சொல்லுவார்கள். இவர் மட்டும் அதில் விதிவிலக்காக இருக்கவா போகிறார்.அப்படிப்பட்டவரின் வீட்டை சோதனை இட மத்திய அரசு முன் வராது. காரணம் அவர்களின் முக்கிய நோக்கம் சசிகலா குடும்பத்தை மட்டுமல்ல அதிமுகவை முற்றிலும் வேரோட அழிப்பதுதான். அப்பதான் அவர்களால் சிறிதளவாவது தமிழகத்தில் காலை ஊன்ற முடியும்.

#avargalUnmaigal
சசிகலா குடும்பத்தினர் அனைவரின் வீட்டிலும் சோதனை நடத்துகிறார்கள் அதில் தவறு ஏதும் இல்லை  அது போல ஜெயலலிதாவின் உதவியாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்துகிறார்கள் அதிலும் தப்பு இல்லை. ஆனால் அது போல ஜெயலலிதாவின் நண்பராண சோ.ராமசாமியின் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டியதுதானே? அதுதானே நியாயம். அது பற்றி வருமான வரித்துறை மட்டுமல்ல ஊடகங்களும் பேசுவதில்லை. அதற்கு பின் என்ன காரணம் இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?



முன்பு சோவினாலும் அம்பிகளாலும் மிகவும் ஆஹா ஒகோன்னு பாராட்டப்பட்ட ஜெயலலிதாவின் அசிங்கங்கள் இப்போது வெளிவந்து அசிங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அது போலவே இப்போது குருமுர்த்தி, டவுசர்களாலும் மற்றும்அம்பிகளாலும் மிகவும் ஆஹா ஒகோன்னு பாராட்டப்படும் மோடியின் கதையும் எதிர்காலத்தில் இப்படித்தான் பேசப்படும்

#AvargalUnmaigaL
வருமான துறை அதிகாரிகளின் கண்ணிற்கு பன்னீர் செல்வம் வருமானத்திற்கு மிக அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவில்லையா? அவர் வீட்டிற்கு வருமானத்துறைக்கு வழி தெரியவில்லையா?


கொசுறு:
(இரண்டு பெண்கள்) - ஜெயலலிதாவிற்கு சசிகலா என்றால்  (இரண்டு ஆண்கள்) -மோடிக்கு அமித்ஷாதான்..

ஜெயலலிதாவின் இல்லம் என்ன கோயிலில்  சாமி சிலைகள் இருக்கும் கருவறையா என்ன? அங்கு யாரும் நுழையக் கூடாது என்று சட்டம் போட அது கொள்ளயர்களின் கூடம்தானே அங்கு சென்று சோதனை போடுவது என்ன பெரிய சாதனையா என்ன?உச்ச நீதிமன்றம் குற்றவாளி என்று சுட்டிக்காட்டிய ஒருவர் வாழ்ந்த, ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் இருவர் ஆட்டம் போட்ட ஒரு வீடு அவ்வளவுதான்






அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. அம்பிகள், டவுசர்கள்.....

    ரசிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பலரால் ரசிக்கப்படுவது சிலரால் ரசிக்கப்படாமலும் சிலரால் ரசிக்கப்படுவது பலரால் ரசிக்கப்படாமலும் இருப்பது இயல்பே

      Delete
  2. முடிவில் கேள்விகள் நன்று நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மற்றதெற்கெல்லாம் துள்ளிக் குதித்து பதில் சொல்லுபவர்கள் அந்த கேள்வியை மட்டும் படிக்காதாவர்கள் மாதிரி செல்கிறார்கள்

      Delete
  3. you have absolutely no idea, no knowledge of Cho . If possible try and search for his grand father and read about him . ( I think his name was also Ramaswamy ) . Cho had written very extensively against Jayalalitha and Sashikala . Please ask MK , even he would agree that Cho had criticised about JJ and Sashikala. Please do some research and don't write from your imaginations . Even there was a news that Cho was a director for short period of time in Midas ( the liquor company ) , it could have been fact , being a lawyer he could have represented a particular company ...one thing about CHO , he had never written or published sex and never corrupt ( meaning, taking money and writing for or against a particular group ) . Speak to some old people in Chennai - they will vouch for him.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கூற்றுப்படி சோ மிகவும் நல்லவர் என்றால் அவர் ஏன் ஜெயலலிதாவுடன் கூடாநட்பு கொள்ள வேண்டும் அவர் ஏன் சாராய கம்பெனிக்கு டைரக்டராக பணி புரிய வேண்டும் அப்படி அவர் டைரக்டராக இருந்து அந்த கம்பெனியை தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அதை அவர் சம்பளம் ஏதும் வாங்காமல் இலவசமாகத்தான் செய்தாரா என்ன? கறை படிந்தவர்களுடன் சேர்ந்து இருந்தால் சந்தேகம் வருவது இயல்பே. வருமான வரி துறை சசிகலா குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுப்பத்தில் தவ்று இல்லை ஆனால் அந்த குடும்பத்திற்காக மட்டுமே அந்த துறை செயல்படுவது போல இருக்கிறது ஜெயலலிதா மூலம் சொத்து சேகரித்தார்கள் என்றால் அதே ஜெயலலிதா மூலம் சொத்து சம்பாதித்த மற்றவர்களையும் அந்த விசாரனை வளையத்திற்குள் கொண்டு வருவதுதானே நியாயம். பதிவின் இறுதியில் பன்னீர் செல்வம் பற்றி ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறேன் அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. விசாரணை என்று வரும் போது ஜெயலலிதாவிற்கு நெருங்கிய அனைவரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம். விசாரணை முடிவில் சோ கறைபடியாத கரத்தை சேர்ந்தவர் என்றால் சந்தோஷம்தானே

      Delete
    2. Police or IT interrogation don't discriminate between witnesses, leads and cues. Everyone will have to be interrogated: from prince to pauper. The raids at various places and the interrogations done so far sent the IT to Veda Nilayam. It's naïve to imagine it is suo motu ie w/o provocation. This blogpost (actually it's based on news) says that the late comedian was in close touch with the late CM and her friends. He was a director in the Co run by Sasikala. He was a friend, philosopher and guide to Jeyalalitha. As Director, he was privy to a lot of sensitive data and information regarding the Co. Because every decision needs to be approved by the Board of Directors. Jeyalalitha must have revealed a lot to him because she had no intimate friend except him. Sasikala was a false friend, she knew.

      Now tell me, against the background I've given, can IT spare Cho Ramasamy? If it leaves him out (although dead, it's possible to ferret from sources related to him) won't the IT lose a lot of vital information? How does the point about his incorruptibility help us in the matter of investigation?

      Delete
  4. இப்படி ஒரு கோணமிருக்கா ?

    ReplyDelete
    Replies
    1. உண்மையான நேர்மையான விசாரணை என்றால் இப்படி பல கோணத்தில் விசாரித்துதான் பார்க்க வேண்டும்

      Delete
  5. எல்லாம் நேரில் இருந்து பார்த்தமாதிரி. எப்படித்தான் எழுத முடிகிறதோ

    ReplyDelete
    Replies
    1. அரசியல் ஒரு சாக்கடை அதில் என்ன இருக்கும் என்பதை ஒரு முறை நேரில் பார்த்தாலே போதுமே அதை பற்றி எழுத அதற்காக ஒவ்வொரு தடவையும் பார்த்துதான் எழுத வேண்டுமென்றுயில்லையே


      சோ அதை சுத்தம் செய்பவராக எடுத்து கொண்டாலும் அவரும் நாரத்தானே செய்வார்

      Delete
  6. Replies
    1. நான் லூஸுன்னே வைச்சுகுவோமே . லூசுகிட்ட் நீ லூசான்னு கேட்டுகிறவன் எவ்வளவு பெரிய லூசா இருப்பான்...

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.