Friday, November 10, 2017

#avargal#unmaigal



லட்சுமி குறும்படம் பார்த்த பின் ஆண்களின் மனதில் மிகப் பெரிய மாற்றம். அது என்ன?


அந்த படத்தை பார்த்த பின் பல ஆண்கள் சமையலை கற்று தேர்ச்சி பெற போயிருக்கிறார்களாம். அப்படி அவர் கற்று சமையல் செய்து மனைவியை அசத்த போகிறார்கள் என்று நீங்க நினைத்தால் அது மிகப் பெரிய முட்டாள்தனம். அவர்கள் கற்று தேர்ந்து லட்சுமி மாதிரி பெண்களுக்கு சமைத்து போட்டு ஒரு நைட்டாவது அசத்தனும் என்றுதான் இப்படி கற்றுக் கொள்ளப் போகிறார்களாம். நம்ம ஊரில்தான் அடிக்கடி  இந்த போராட்டம் அந்த போராட்டம் மழை வெள்ளம் என்று பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதால் பஸ் ரயில் போக்குவரத்துபாதிப்புக்கள் ஏற்படும் . அதனால்சமையல் கற்றுக் கொண்டால் லட்சுமி மாதிரி கஷ்டப்படுகிற பெண்களுக்கு  உதவ முடியுமே என்றுதான் சமையல் கலை கற்க போகிறார்கள்!



இப்ப கொஞ்சம் சீரியஸாக பார்ப்போம்



அன்பான மனைவிக்கு பார்த்து பார்த்து செய்யும்  கணவன் இருக்கையிலேயே மனம் பிறழும் பெண்களும் இருக்கிறார்கள் என்கிற பொழுது அப்படியிருக்கும்போது இயந்த்திர  வாழ்க்கையை அமையப் பெற்ற லட்சுமி  போன்ற பெண்ணிடம் புதிதாய் அறிமுகமாகும் ஒருவன் அதிலும் தினசரி பார்க்கும் ஒருவன் அவள்  சாதாரணமாகச் செய்யும் பணிகளை உயர்வாகவும் விழியகல வியப்புடனும் கூறும்போது அப்பெண் மயங்குவதில் தப்பு என்ன?


இந்த படத்தில் இயந்திர கதியில் படுக்கையில் இயங்கும் கணவனுக்கு மாற்றாக படுக்கையில் இயல்பாக இயங்ககூடியவனை நோக்கி சென்றதாகவே சொல்லப்பட்டு இருக்கிறது போல எனக்கு தோன்றுகிறது. லட்சுமிக்கு தேவை அன்பும் ஆதரவும் அணைத்து பாராட்ட மகிழ ஒரு உறவு தேவைப்பட்டு இருக்கிறது ஆனால் அந்த இளைஞனுக்கோ  உயிர் வாழ உதவும் ஆக்ஸிசன் போல செக்ஸ் தேவைப்படுகிறது . அதனால் இங்கு பண்ட மாற்று முறைப்படி அவரவர்களுக்கு தேவையானதை பெற்றும் கொடுத்தும் வாழ்கிறார்கள் அவ்வளவுதான். காலம்காலமாக இந்த மாதிரி உறவுகள் பல மட்டத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதை ஒத்துக்கொள்ள பலரின் மனது மறுக்கிறது.. உண்மை கசப்பதால் இதை பலரும்  கழுவி கொட்டடுகிறார்கள்.


இந்த படத்தில் லட்சுமியின் கணவருக்கு போன் செய்யும் பெண்ணும் லட்சுமி மாதிரி இன்னொரு குடும்பத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கலாம் அவர்களிடத்தும் இது மாதிரியான உறவுகள் இருக்கலாம்..


இந்த படத்தை பார்த்த பின் எனக்கு தோன்றுவது இந்த படத்தில் வரும் இரு ஆண்களும் தவறு செய்கிறார்கள்.... கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்க கூடிய இன்றைய காலகட்டத்தில் மனைவி வீட்டிற்கு வந்து சமைத்து பறிமாறிய பின் அவளுக்கு துணையாக இருந்து பாத்திரம் தேய்த்து கழுவி கிச்சனை சுத்தம் செய்வதற்கு உதவி பண்ணி அந்த நேரத்தில் அன்றைய தினத்தில் அவர்களின் வாழ்க்கையில் நடந்தது என்ன என்று பகிர்ந்து அதன் பின் படுக்கையை பகிர்ந்தால் இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல இருக்கலாம். அதுவும் 30, 40 யில் இருக்க கூடிய பெண்மணிகள் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இன்றைய கால இளைஞிகளின் (30க்கும் கீழே )மன ஒட்டம் அப்படி இல்லாமல் இருக்கலாம்.ஆனால் லட்சுமியின் கணவன் அப்படி செய்யவில்லை. சரி அவந்தான் தவறு செய்கிறான் என்றால் அந்த இளைஞனோ லட்சுமிக்கு தேவை அன்பும் ஆதரவும் அரவனைப்பான பேச்சும்தான் அதை மட்டும் தந்து நல்ல நட்புறவை பேணி  இருக்கலாம்.ஆனால் என்ன எல்லா ஆண்களுமே சுத்த மோசம்தான் என்று இங்கு சித்தகரிப்படுகின்றனர்.. சரி ஆண்கள் அப்படி மோசம் என்றால் அவர்களை அப்படி வளரவிட்டது யார்? பெற்றோர்களா? ஆசிரியர்களா? சமுகமா?



இவ்வளவு பேர் இந்தப் படத்தை ஆர்வமாகப் பார்த்திருப்பதற்கான காரணம் சில நிமிடங்களே வரும் உடலுறவு காட்சியால் கிடைக்கும் பரவச நிலைக்காக மட்டுமே.பாவம் பாரதியார் மட்டும் இந்த காலத்தில் இருந்து பார்த்திருந்தால் நம் கவிதைகளை இந்த மாதிரி படங்களுக்கு உபயோகபடுத்துவதை எண்ணி மனம் வெதும்பி எழுதுவதையே நிறுத்தி இருப்பார். இந்த படம் மிக பரபரப்பாக பேசப்படுவதற்கு இதில் வரும் உடலுறவு காட்சிதான். கணவனும் மனைவியும் உறவு கொள்ளும் காட்சியின் போது பிணம் போல அந்த பெண் இருப்பதை காட்டியவர்கள் அந்த இளைஞனோட உறவு கொள்ளும் போது அவள் பரவசம் கொள்ளும் காட்சியையும் காட்டி இருக்கலாம். காரணம் அப்போதாவது அந்த பெண் உண்மையிலேயேதான் பரவசம் கொள்கிறாளா அல்லது தன்மீது அன்பை காட்டிய அந்த இளைஞனை மகிழ்விக்க உதவுகிறாளா என்பது தெரிந்து இருக்கும்.

ஒரு வேளை அதை காண்பித்து அந்த பெண் உண்மையிலேயே பரவசம் அடைந்து இருந்தால் இந்த ஆண் சமுதாயமே பதறி போய் இருக்கும். நல்ல வேளை அதை காண்பிக்கவில்லை


இந்த கதையில் சொல்லப்படும் moral of the story என்னவென்றால் தப்பு செய்யும் ஆண் சமுகத்தை திருத்துவதற்கு பதில் அதே தப்பை பெண் சமுகமும் செய்துவிட்டு போகட்டும் என்பதுதான்.காரணம் யாரும் இங்கு புத்தனில்லை அல்லது மகாத்மாவும் இல்லை


எனக்கொரு டவுட்: அந்த இளைஞனோட உறவு கொண்ட அந்த பெண் அதன் பின் ஞானம் பெற்றுவிட்டாளா என்ன? அதனால்தான் அவள் ரயில் செல்லாமல் பஸ்ஸில் செல்கிறாளா? அல்லது அந்த உறவும் புளித்து போய் புது உறவை தேடி பஸ் பயணமா? படத்தை இயக்கியவர்கள் இதை பற்றி சொல்லவில்லை ஒரு வேளை அடுத்த குறும்படத்தில் அதை சொல்லாம் பொறுத்து இருந்து பார்ப்போம்



டிஸ்கி : என்ன இப்படி ஒரு பதிவு போட்டுவிட்டு அதில் மோடியை பற்றி சொல்லாமல் போய்விடுவானோ என்று நினைக்க வேண்டாம். மோடி என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்கள் அவரைப்பற்றி சொல்ல வில்லையென்றால் நமக்கு தூக்கம் வாராது அதனால் அவரை பற்றி சில வரிகள்.

இந்த படத்தில் எப்படி உறவை காண்பித்துவிட்டு  ஓவியம் ,சிற்பம் போன்ற அழகியல் மசாலாக்களை தூவி கொடுத்திருக்கிறார்கள். துணைக்கு பாரதியாரும். இதில் எந்தவிதமான புரட்சியும் புண்ணாக்கும்  புதுமையும் இல்லை அது போலத்தான்  மோடியும் தான் செய்யும் தவறுகளை மறைக்க மதத்தையும் தேசத்தையும் கேடயமாக பயன்படுத்துகிறார்..

என்ன நான் சொல்வது சரிதானே?

https://www.youtube.com/watch?time_continue=6&v=vP5dOY42DKI

அன்புடன்
மதுரைத்தமிழன்


13 comments:

  1. ஆண்களுக்கு...
    படத்தை பார்த்துட்டு கொஞ்சம் ஜெர்க் ஆனா உடனே உன் லைப் ஸ்டைலை மாத்து.. அய்யோ பாவம்ன்னு யோசிச்தா.. உனக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இந்தபடத்தை பார்த்து ஆண்கள் தான் அதிர்ச்சி அடைந்து போஸ்ட் மேல் போஸ்ட்டாக போட்டு கொண்டு இருக்கிறர்கள். எல்லா இடத்திலும்! பெண்கள், ஒரு சிலரை தவிர நமட்டு சிரிப்புடன் நகர்ப்பவர்களையே அதிகம் பார்க்கிறேன். . ஆண்கள் திருந்த வேண்டிய நேரம் வந்து விட்டது . அது சரி, நம் நாட்டில் இடுக்கு முன் பின் இந்த மாதிரி விஷயங்கள் நடந்தது இல்லையா, ஏன் இவ்வளவு பதட்டம் ஆண்களிடம்?

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவன் பொண்டாட்டி மேல் ஆசை கொள்ளும் ஆண்களுக்கு இந்த படத்தை பார்த்த பின் தான் புரிந்திருக்கிறது தன் மனைவி மீது அடுத்தவன் ஆசை கொள்வான் என்று அதனால்தான் இத்தனை பதட்டம்

      Delete
  3. லட்சுமிக்கு தேவை அன்பும், ஆதரவும்,அணைத்து பாராட்ட ஒரு உறவு&/// அது உடல் ரிதியிலானதாய் இருக்க வேண்டும் என்பதை நான் மறுக்கின்றேன். குறிப்பிட்ட வயதின் பின் பல பெண்கள் தனித்து விட்ட உண்ர்வை பெறும் போது புரித்துணர்வு கொண்ட நல்லதொரு நட்பை தேடலாம். அது தவறே இல்லை. அதை உடலளிவில் முடிச்சி போடுவது அனைத்து ஆண் பெண் நட்பையும் கொச்சைப்படுத்தும் செயலாக முடியும், எழுத்தை விட சினிமா மக்களை சீக்கிரம் சென்றடைகின்றது புரட்சி செய்வதாய் மிரட்சி அடைய வைக்கும் படியாய் வரும் இம்மாதிரி படங்களை நாங்கள் புறக்கணிக்க வேண்டும். இப்படி ஆளுக்கு ஆள் விமர்சித்து விளம்பரம் செய்ய வேண்டாம்.

    ஒரு பெண்ணுக்கு வீட்டில் பிரச்சனை எனில்..... அட! பிரச்சனை இல்லாத வீடுகளே இல்லை எனும் போது இப்படியே எல்லா பெண்களும் இப்படி உடல் ரிதியிலான தேடலை நட்பை நியாயப்படுத்த நினைத்தால் குடும்பம் எனும் கட்டுக்கோப்பு உடைந்து விடும் ஆபத்தும் உண்டல்லவா?

    மரணம் இல்லாத வீட்டைத்தேடுவது போலத்தான் பிரச்சனைகளில்லாத குடும்பத்தினை தேடுவதும். அதிலும் திருமணமாகி பிள்ளைகள் பிறந்து குறிப்பிட்ட வயதானதும் பிள்ளைகளுக்கென அதிகம் சிந்திக்க ஆரம்பிக்கும் போது கணவன் மனைவிக்கிடையினான புரிதல்களில் சற்று விரிசல் வருவது இயல்பு. அந்த விரிசல்ளை சேர்க்கும் பாலமாய் பிள்ளைகள் இருப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்து தங்கள் தேவை நிமித்தம் பிரிந்த பின் தம்பதிகளுக்குள் மீண்டும் புரித்துணர்வு வரும் சாத்தியமே அதிகம். இது இயல்பான் நம் எல்லோர் வாழ்வில் கடந்து போகும் விடயம். எங்கேயோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் இமமதிரி நிகழ்வுகளை நியாயப்படுத்தி பதிவிடும் பல பெண்களை காணும் போது மலைப்பாய் இருக்கின்றது?

    எங்கே செல்கின்றோம் நாம்?

    என்னைப்பொறுத்த வரை நான் இந்த குறும்படம் பார்க்கவில்லை. பார்த்தவர்களின் விமர்சனத்தின் படி ஆண் பெண் என இருவரையும் கொச்சைப்படுத்தி பார்ப்பவர்களையெல்லாம் அபப்டி இருக்குமோ, இப்படி இருப்பார்களோ என சந்தேகிக்க வைத்திருக்கின்றது இப்படம்.

    தவறு செய்யும் போது ஆரம்பம் தான் உறுத்தும், அதுவே பழகிடும் போது இயல்பாய் போய் விடும், பார்த்து பத்திரமா இருந்துக்கோங்கப்பா.



    ReplyDelete
  4. குறும்படத்தைப் பார்க்கவில்லை. விவாதித்த விதம் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

    ReplyDelete
  5. ஆண் பெண் நட்பு அதீதமானால் ஒற்றை கம்பி நடப்பது போல் தான் கரணம் தப்பினால் மரணம் மிக கவனம் வேண்டும்
    இந்த படம் மிகவும் குறுகிய கண்ணோட்டத்தில் எடுத்துவிட்டார்கள் இப்ப என்ன சொல்லவருகிறார்கள் ஆணிடம் பேசாதே அவன் பாராட்டினால் ஏற்று கொள்ளத்தே முகத்தை திருப்பி கொள் தவிர்த்துவிடு என்பதையா? இதில் யாரை பயம்புறுத்துகிறார்கள் ஆணையா? பெண்ணையா? இருவர் சேர்ந்து வாழும் வாழ்வில் நம்பிக்கை தான் பிரத்னமானது இங்கு அதை கொலை செய்துவிட்டார்கள் இதை பார்கும் மனநிலையில் உள்ள இளைஞ்சர்கள் எல்லோரும் எல்லவரையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள் தவிர வேற எதுவும் திருந்த மாட்டார்கள் உண்மையில் மனிதநேயம் என்பது வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கிறது தன் தாயிக்கு உதவியவன் தன் மனைவி மக்களுக்கும் உதவிகள் புரிவான் இது எவ்வ்ளவுதான் சொல்லி கொடுத்தாலும் இயலப்பாய் வரவேண்டும் அவன் எண்ணத்தில் கட்டி கொடுத்த சோறு எவ்வ்ளவு நாள் தாங்கும் ஆணுக்கு மனித நேயமில்லை பண்பு இலையென்றால் அவனால் உருவாகும் ஜெனரேஷனுக்குமிருக்காது.......
    இப்படி ஒரு படம் திருமணம் என்ற பந்தை கேள்வி குறியாக்குகிறது லிவிங் டு கெதர் என்பதை நோக்கி தள்ள பார்கிறது என் இதை பார்கும் மகன்கள் இருக்கிறார்கள் ககோதரர்கள் இருக்கிறார்கள் அவர்களின் என்ன போக்கு என்னவாக மாறும் அம்மாவை பற்றியோ சகோதரிகளை பற்றியோ மிக மோசமான தரம் தாழ்ந்த படம் முடிந்தால் உங்களால் இதை அவர்களுக்கு உணர்த்த முடிந்தால் சொல்லுங்கள் தரமணி என்ற படத்திலாவது கொஞ்சம் நியாயம் இருந்தது

    ReplyDelete
  6. இந்தக் குறும் படத்தை நான் பார்த்தேன்,கழுவி ஊற்றுகிறார்களே அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக.......இனி என் கருத்து..>>>>>பெண்கள் பொதுவாகவே உணர்ச்சிக்கு அடிமையானவர்கள்/அடிமையாவார்கள்.ஒரு சிறிய குடும்பம், நடுத்தர வர்க்கம் என்று சொல்லலாம்.ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.ஒண்டுக் குடித்தனம்.இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.மனைவியானவள் வீட்டிலும்/அலுவலகத்திலும் வேலை பார்க்க வேண்டும்.ஆண்+பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு தேவைப்படும்.இதில்,ஒரு குழந்தைக்குப் பின் காட்டப்படும் உறவு இயந்திரத் தனமானதாக இருக்கிறது.அது பெண்ணுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை.அதனால் பிறழ்கிறாள் என்பதாகக் காண்பிக்கிறார்கள்.ஆணுக்கும் அதே தான் வேறு உறவை நாடச் செய்கிறது.ஆண் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தொலைபேசி அழைப்பின் மூலம் மனைவியானவள் தெரிந்து கொள்வதாக காண்பிக்கிறார்கள்.அந்தப் பெண் தனிமையில் வாழ்பவளாக இருக்கக் கூடும்.அதே போன்ற ஒரு தனிமையில் வாழும்
    ஓர் ஆண் தான் லக்‌ஷ்மி வாழ்விலும் குறுக்கிடுகிறார்..........இனி கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டியது தான்.அதாவது ஆண்/பெண் வேறுபாடின்றி எதுவும் செய்யலாம்,அவ்வளவு தான்........

    ReplyDelete
  7. எங்காவது எழுத்தில் சொல் பிழை இருந்தால் திருத்துங்கள் நிறைய வருகிறது கவனிக்காமல் விட்டு விடுகிறேன் சில நேரம் திருத்தி எழுதி சரி செய்கிறேன் என்பதை திரும்பி பார்க்காமல் விடுவதால்

    ReplyDelete
  8. நானும் 'லட்சுமி' பார்த்தேன். ஏதாவது 'பிட்' படத்துக்கான கதைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதில் இசை, ஓவியம், சிற்பம், பெண்ணுரிமை, பாரதியார் பாடல் - போன்ற பழம்பெரும் மசாலாக்களைத் தடவிக் கொள்ள வேண்டியது. இது அந்தக் கால பாலச்சந்தர் பாணி. அதைத்தான் இந்த குறும்படத்திலும் செய்துள்ளார்கள்.

    ReplyDelete
  9. நான் சொல்ல நினைத்த கருத்துகள் பெரும்பாலும் பூவிழி மற்றும் நிஷா சொல்லிட்டாங்க. நானும் படம் பார்க்கவில்லை. ஆனால் கீதா சாம்பசிவம் அக்காவின் பதிவு இங்கு உங்கள் பதிவு நிஷா, பூவிழி கருத்துகள் எல்லாம் சொல்லுவதை வைத்து....ஸாரி டு ஸே திஸ்! இப்படத்திற்கு விருது கூட கிடைத்ததாமே!! விருது கிடைக்கும் அளவுக்கான படம் என்று தோன்றவில்லை....ஆண் பெண் நட்பு நல்ல ரீதியில் இருப்பதாகக் கூடக் காட்டியிருக்கலாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு கட்டத்தில் ஒரு வெறுமை வரலாம் ஆனால் இப்படித்தான் போக வேண்டும் என்று அல்லாமல் எத்தனையோ நல்ல முடிவுகளில் ஒன்றைக் கொடுத்திருக்கலாம்...என்று தோன்றியது.

    ஆனால் நீங்கள் சொல்லுவது போன்று இம்மாதிரியான உறவுகள் எல்லாம் சங்ககாலம் முந்தைய தைய காலகட்டத்திலும் இருந்திருக்கிறதுதான்..முதலில் மனிதஇனம் மனவளர்ச்சி, நாகரீகம், பண்பாடு, குடும்பம் உறவுஅள், கலாச்சாரம் என்று பக்குவப்படாத காலகட்டத்தில் .அப்பொது தவறாக நினைக்கப்படாத ஒன்று சமூகக்கட்டமைப்பு, குடும்பக் கட்டமைப்பு ஒழுக்க விதிகள் என்று வந்த பிறகுதான் இவை எல்லாம் தவறு என்று கொள்ளப்பட்டு நீதி நூலகள் கதைகள் என்று வந்தன. என்றாலும் நாமும் இந்தக் கட்டமைப்பில் நம் சமீபத்திய மூதாதையர் வாழ்ந்த வாழ்வியலில் வாழ்ந்து அந்த நீதி ஒழுக்கம், இறையியல் என்று நம் மனதில் பதிந்துவிட்டதால் இப்படியானவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆனால், எப்படி பழையகால உடைகள் ஃபேஷன் என்று கொஞ்சம் உருமாற்றம் பெற்றோ அல்லது அப்படியெவோ வருகிறதோ அதே போன்று மீண்டும் நாம் கொஞ்சம் ஹைட்டெக்காக பண்டைய முறைக்கு மாறி வருகிறோமோ என்றும் தோன்றுகிறது. யதார்த்தம் என்று சொன்னாலும் விருது என்பது மிக மிக வியப்பளிக்கிறது!!விருதுகளும் மதிப்பை இழக்கின்றனவோ என்றும் தோன்றுகிறது. படத்தைப் பற்றிய உங்கள் கேள்விகள் சரியாகவே இருக்கிறது

    கீதா

    ReplyDelete
  10. ஆண்-பெண் (வளர்ந்தவர்களை மட்டும்) இறைவனின் படைப்புக்கள் இருவரின் உடலமைப்பில் உள்ள சிறிய வேறுபாடுகளால் தானாகவே வளரும் குணபேதங்களைத் தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய வேறுபாடுகள் இல பேனைப்பெருமாளாக்குவது மனித இயல்பு எனவே சிறிய வேறுபாடுகளை பெரிதாக ஊதி ''பெண் குலத்துக்கே இதுதான் குணம்'' என்று பொதுவாக்கி அப்பெண்ணை எங்கே எப்படி வைத்தால் தனக்கு நலம் எல்லாவழிகளிலும் என்று ஆண் செய்தததுதான் கலாசாரம் அல்லது வாழ்க்கைப்பண்பாடு பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள் என்பதுதான் அக்கலாச்சாரத்தின் அடிப்படை இக்கலாச்சாரத்தை இறைவன் செய்ததாக வடிவமைத்தது மதவாதிகள்

    இக்குறும்படத்தில் வரும் பெண்ணை ஆண் கட்டமைத்த பெண்-மைய‌ கலாச்சாரத்தின் பிரதிநிதியாகப் பார்க்கும்போது கோபம் எழுகிறது தனிநபராக பார்த்தால், அல்லது எக்கலாச்சார கட்டமைப்பின் கீழ் வராத நபராகப் பார்த்தால் - அங்கே வாதத்துக்கே இடமில்லை அவள் செய்ததது எனக்குப் பிடிக்கவில்லை என்று ஒரே வரியில சொல்லிவிட்டு நகரலாம் சினிமா எனப்து அனைத்தையும் காட்டுவது; நமக்குப் பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அடங்கும்

    Go to a film w/o any baggage on your bag You're not a representative of any culture when viewing a film View it as an individual and criticise it Why not try it?

    ReplyDelete
  11. Shouldn't a woman be an individual and decide to have her marital life as she needs? Why do we expect Lakshmi of the film to have acted to get our approval?

    Film is fantasy It attempts to show on celluloid what it is not possible to happen in actual life but the film makers desire to show at least a dream of it Hence they are called dream merchants The film aspires to show a daring breach with the culture in which woman gets tangled w/o any hope of escape

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.