நெல்லை கலெக்டருக்கு எடப்பாடி அரசு மீது அப்படி என்ன கோபம்
கந்துவட்டியால இறந்த சம்பவத்தை ஒட்டி பாலா ஒரு கார்ட்டூன் போட்டு இருக்கிறார். அது முகநூலில் அவரை பாலோ செய்பவர்கள் மட்டும் பார்த்து ரசித்து வந்தனர். ஆனால் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு எடப்பாடி அர்சு மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.பாலாவை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்ச அந்த கார்ட்டூன் இப்ப உலகம் முழுவது தெரிஞ்ச்ருக்கு.... எப்படி மெர்சல் படத்தை ஹெச்.ராஜா பிரபலபடித்தினாரோ அது போல நெல்லை கலெக்டர் பாலாவின் கார்டுனை பிரபலபடுத்தி இருக்கிறார். இதனால் கந்து வெட்டியை பற்றி மறந்து போன மக்களிடம் அந்த செய்தியை மீண்டும் சூடுபிடிக்க செய்து இருக்கிறார், நெல்லை மாவட்ட கலெக்டர் தான் அசிங்கப்பட்டது போல தமிழக முதல்வரும் அசிங்கப்பட வேண்டும் என்றுதான் இப்படி ஆணையிட்டு இருக்கிறார்
பாலாவின் இந்த கார்டுன்கள் மட்டுமல்ல அவரின் பல கார்டுன்கள் பற்றி பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அதற்காக அவரை விமர்சிக்காலாம் அல்லது திட்டலாம் ஆனால் கருத்து சுதந்திரதை பறிக்கும் வழியில் எடப்பாடி அரசு செயல்படுவதை எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கனும். இல்லையென்றால் இன்று பாலா கைது செய்யப்பட்டது போல நீங்கள் முகநூலில் சொல்லும் கருத்துகளுக்கு நீங்களும் கைது செய்யப்படும் நிலைமை கண்டிப்பாக வரும்.
அவர் தவறு செய்தால் சட்டப்படி வழக்கு தொடுத்து இருக்கலாம். அதைவிட்டுவிட்டு போலீஸ்சார் அவரை கைது செய்ததுமட்டுமல்லாமல் அவரை கைது செய்து எந்த போலீஸ் ஸ்டேஹனுக்கு கொண்டு செல்கிறோம் என்று சொல்லாமல் மறைத்து ஒரு தீவிரவாதியை கைது செய்வது போல கைது செய்வது தவறு அது கண்டிக்கதக்கது. இதற்கு நாம் போலீஸ்சை குற்றம் சொல்ல முடியாது அதற்கு ஆணையிடும் நெல்லை கலெக்டரைத்தான் குற்றம் சொல்லவேண்டும்
இந்த கார்டுனை வெளியிட்டதற்காக கார்டுனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மாப்பு
ReplyDeleteபாலாவிற்கான முதல் விருது
சுடச்சுட...............
ReplyDeleteநீங்கள் தமிழ் நாட்டில் இல்லை நல்ல காலம்
ReplyDelete