Sunday, November 12, 2017

#avargalUnmaigal
மோடியை பக்தாள்ஸ் கைவிட்டது ஏன்?
மோடி கூட தவறை ஏற்றுக்கொள்ள கூடும். ஆனால் அவருக்கு முட்டு கொடுப்பவர்கள்(பக்தாள்ஸ்) ஒருநாளும் ஒத்துக்கொள்வதில்லை.

மோடி ஏன் தவறுக்கு மேல் தவறாக செய்து வருகிறார்?
யாரோ  ஒரு மகான், அவருக்கு தவறுகளில் இருந்துதான்
பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
அப்படி என்ன பாடம் கற்று கொள்ளப் போகிறார்?
தோல்வி என்ற பாடத்தைத்தா  கற்றுக் கொள்ளப் போகிறார் வே மோடி தவறுகள் செய்துவருகிறார்

ஜி.எஸ்.டி கவுன்சில் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது மக்களின் நலனை கருதியா?
மக்களின் நலம் என்று சொன்னாலும் மோடி குஜராத்தில் வரும் தேர்தலை கருத்தில் கொண்டுதான் குறைத்திருப்பார்.
சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்று சொல்வார்கள்


கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொன்ன மோடி  அதை செய்துவிட்டாரா?
அவறு கருப்பினத்தை அழிக்கபோகிறேன் என்று சொன்னதை யாரோ கருப்பு பணத்தை என்று  திசை திருப்பிவிட்டார்கள் .ஆனால் மோடி சொன்ன சொல் மாறாமல் கருப்பினத்தை (தமிழர்களை ) அழிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்.

மோடி செய்த சாதனைகளில் ஒன்றை சொல்ல முடியுமா?

பணக்காரர்களிடம் இருக்கும் கருப்பு பணம் நல்ல பணமாகவும்
சாமானியர்கள் உழைத்து சம்பாதித்த பணம் செல்லாப் பணமாகவும்
மாற்றியதுதான் மோடி செய்த சாதனை.

மக்களிடம் சர்வே நடத்தாமல் ஆன்லைனில் சர்வே நடத்தியதற்கு காரணம் என்னவாக இருக்கும்?
நேரில் கேட்டால் காறி காறித்துப்புகிறார்களாம். அதனால்தான் ஆன்லைனில் சர்வேயாம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ஆன்லைன் சர்வேயில் மக்கள் ஆதரவு///

எந்த நாட்டுமக்கள் ஆதரவு என்று சொல்லவில்லை.

120 கோடி மக்கள் இருக்கும் நாட்டில, 10000 பேர்தான் ஆன்லைன் மூலம் மோடியின் பணநடவடிக்கைக்கு ஆதரவு தந்து இருக்கிறார்கள்
மீதமுள்ளவர்கள் தரவில்லையோ அது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த 10000 ஐடிக்களும் பேக்(Fake) ஐடிகளாகத்தான் இருக்க வேண்டும் அல்லது இந்த சர்வே பேக் சர்வேயாகத்தான் இருக்க வேண்டும் . இல்லையென்றால் நாட்டில் மோடியை ஆதரிக்கும் டவசர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம்தானே. இல்லை இந்த டவுசர்கள் கூட மோடியின் பண நடவடிக்கையை ஆதரிக்கவில்லையோ என்னவோ? அல்லது ஒருவேளை இந்த சர்வே நீதிபதி குமாரசாமியின் தலைமையில் நடந்திருக்குமோ என்னவோ அதனால்தான் 10000 பேர்மட்டும் ஆதரவு தந்திருக்கிறார்கள்

வசதியானவர்கள் மீது போடப்படும் வழக்குகளை சட்டப்படி விசாரிக்க பல ஆண்டுகாலம் எடுத்து கொள்ளும் அரசு ஏழைகள் மீது போடப்படும் வழக்குகளை மட்டும் படுசிக்கிரம் முடித்து வைக்கிறதே


PC: All things that are allegedly achieved by Demonetization, could have been achieved without doing it.

Well explanation !!

இங்கு அனைத்து தலைவர்களும் தேவைப்பட்டால் அடித்து துவைக்கப்படுவார்கள். ஆனால் இப்போது மிகவும் கறை படிந்த அழுக்கு சர்ட்டாக மோடி இருப்பதால் இங்கு சற்று அதிகமாகவே துவைக்கப்படுகிறார்..

அன்புடன்
மதுரைத்தமிழன்
12 Nov 2017

6 comments:

  1. திருடனை பிடித்தது சந்தோஷம்தான் ஆனால் பிடிக்கச் சொன்ன திருடனை யார் பிடிப்பது ?

    ReplyDelete
    Replies
    1. எப்படிபட்ட திருடனாக இருந்தாலும் ஒரு நாள் பிடிபடத்தான் செய்வான் இது வரலாறு நமக்கு கற்று தந்த பாடம்

      Delete
  2. Replies
    1. மோடி அடுத்த தடவை ஆட்சியை பிடித்தாலும் இங்கே எதிர்ப்பு தொடரும் .... உங்களுக்கு எதிர்ப்பு செய்திகளை படிக்க விருப்பம் இல்லையென்றால் இங்கே வந்து டம் வேஸ்ட் பண்ண வேண்டாம். பல பக்தாள்ஸ் நடத்தும் வலைத்தளங்கள் சென்று படித்து சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள்.

      Delete
  3. தமிழ்மணம் +1.
    ரொம்ப நாளைக்குப் பிறகு வாக்கும் அளித்தாச்சு..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.