பேஸ்புக் உறவிற்கும் உண்மையான உறவிற்கும் உள்ள வேறுபாடு இதுதானுங்க வெளி உலகத்தில் நம்மை பிடித்தவர்கள் மட்டும்தான் நம்மை பாலோ செய்வார்கள் .ஆனால் பேஸ்புக்கில் நம்மை பிடிக்காதவர்களும் நம்மை பாலோ செய்வார்கள் காரணம் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிய அதனால்தான் மோடி போன்றவர்களுக்கு பேஸ்புக்கில் அதிக பாலோவர்கள்.
இன்னும் ஆழமாக யோசித்துபார்த்தால் உண்மை வாழக்கையில் நம்மை பாலோ செய்ய நம் குடும்பதினர் கூட முன் வரமாட்டார்கள். எத்தனை குடும்பத்தில் நம் அப்பாவை போல நாம் வர வேண்டும் அல்லது அம்மாவை போல எத்தனை பேர் வரவேண்டும் என்று நினைப்பார்கள். நம் குழந்தைளுக்கு நாம் உண்மையிலே நல்வழிகாட்டியாக இருக்கிறோமா என்று மனதை தொட்டு சொல்லுங்கள்.நாம் வாழும் முறைக்கும் அவர்களை வழிகாட்டும் முறைக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள்.
பொய்யான பேஸ்புக் உறவுக்கு என்னவேண்டுமானலும் செய்ய தர தயாராக இருக்கும் நாம் நமக்கு உண்மையாக இருக்கும் உறவிடம் ஐந்து நிமிடம் பேச கூட நாம் தயாராக இல்லை என்பதுதான் சுடும் உண்மை . எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் ஒருவர் எங்கவீட்டில் இன்று மதியம் இன்னென்ன சமைத்தோம் என்று சொல்லி போடும் போட்டோவிற்கு ஆஹா அருமை பார்த்தாலே வாய் ஊறுதே என்றும் அல்லது எங்களுக்கும் அப்படியே ஒரு பார்சல் என்று சொல்லத் தெரிந்த நமக்கு நம்வீட்டில் நமக்காக ஆசையாக சமைத்தை பாராட்டி பேசமல் இருக்கிறோம் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் ஒருத்தருக்கு ஹாய் ஹவ் ஆர் யூ என்று கேட்க தெரிந்த நமக்கு நம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் அது போல கேட்பதில்லை
பல சமயங்களில் சமுக வளைத்தளங்களில் நம்மை பாலோ செய்பவர்களின் பொய்யான அன்பின் மீது நம்பிக்கை வைத்தது
உண்மையான அன்பினை சிலசமயங்களில் இழக்கின்றோம்.சமுக வலைத்தளங்களில் நம்மிடம் அன்பாக பேசும் பொய்யான உள்ளங்களைவிட நம்மோட உரிமையாக நேரில் பழகும் உள்ளத்தை நேசிக்க ஆரம்பித்தால் அது உண்மையாக ஆரோக்கியமான அன்பாக இருக்கும்
நமக்கு பாலோவர்கள் சமுக வலைத்தளங்களில் இருப்பதை விட நம் வாழ்க்கையில் உண்மையான நட்பாக உறவாக அதிகம் இருக்க்கும்படி செய்வதுதான் நல்லது. அந்த நட்பு உறவு பாலோவர்கள்தான் உண்மையிலே நமக்கு பலம், நமக்கு ஏது நடந்தாலும் ஆதரவாக துணைவருவார்கள்.
கொசுறு :
"nobody knows you're a dog
பேஸ்புக்கில் உங்களை பாலோ செய்பவர்களுக்கும் விபசாரியை பாலோ செய்பவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை அங்கே உண்மையான உறவுகளுக்கு வாய்ப்பில்லை என்பதுதான் கசக்கும் உண்மை அதில் மிக சில விதிவிலக்குகள் இருக்கலாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
என்னண்ணே இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே?! போலியான உறவுகள் எங்கயும் இருக்காங்க.
ReplyDelete
Deleteபதிவை படிச்ச நீங்கள் அதன் கடைசி வரியை படிக்காமல் அல்லது அதில் சொல்லி இருக்கும் அர்த்ததை புரிந்து கொள்ளாமல் கடுத்து போட்டுவிட்டீர்களோ என நினைக்கிறேன்.... சில விதிவிலக்குகள் இருக்கலாம என்று சொன்னது உங்கள் கண்ணில் படவில்லையா?
பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டீர்கள்? என்ன ஆச்சு?
ReplyDelete
Deleteஎப்போதும் பட் என்று மனதில்பட்டதை சொல்வதுதான் என் வழக்கம் என்பதால் மூடி மொழுகாமல் சொல்லி இருக்கிறேன்... என்ன ஆச்சு என்று நீங்கள் கேட்ட பின் மேலும் சிலர் கேட்டதால் அனைவருக்கும் சேர்த்து கிழே பதில் சொல்லி இருக்கிறேன்
நன்றாகவே சொன்னீர்கள்.
ReplyDelete
Deleteநீங்களும் என் கண்ணோட்டதுடன் இந்த பேஸ்புக் உலகைபார்ப்பதினால் நான் சொன்னது உங்களுக்கு நன்றாக இருக்கிறது என நினைக்கிறேன்
நன்றாக சொன்னீர்கள். வீட்டில் ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டி அன்பு செலுத்தினால்
ReplyDeleteஉறவு பலப்படும். அக்கம் பக்கத்தில் நல் உறவு வைத்துக் கொண்டால் நல்லது. அடுத்தவீட்டுக்காரர் பேர்கூட தெரியாமல் வாழ்வது கொடுமை.
நேசிப்போம் அனைவரையும்.
நான் எங்கோ இருக்கும் ஆட்களைவிட இங்கே என் அருகில் இருக்கும் ஆட்களுடன் முக்கியமாக அருகாமைவீடில் இருப்பவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கிறேன்...அவர்கள்தான் குடும்ப நண்பர்களாக இருக்கிறார்கள் எந்த வித உதவி வேண்டுமானலும் நேரம் காலம் பார்க்காமல் கதவை தட்டும் உரிமையோடு அவ்ர்களும் பழகுகிறார்கள்.. இந்தியாவை விட்டு தொலைதூரம் வந்த பின் இங்கு இருப்பவர்களே எனக்கு உறவாகவும் மாறிவிட்டார்கள்
Deleteஉண்மை
ReplyDeleteஉண்மை
உண்மை
தம+1
பதிவில் சொன்னதை புரிந்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி
Deleteமுகப்புத்தக நட்புக்கள் ..நான் பெரும்பாலும் பிளாக் நட்புக்களை மட்டும் சேர்த்தேன் நட்பில் ..
ReplyDeleteஅதிலும் ரெண்டு கருப்பு ஆடுகள் :(
யார் யார் எப்படினு கற்றுக்கொடுத்தது முகப்புத்தகம் ..
முகப்புத்தகத்தில் பிரச்சினையே ஒவ்வொருவர் அந்நியன் ரேஞ்சில் பன்முகம் காட்டுறாங்க என்கிட்டே ஒரு முகம் மற்றவங்க கிட்ட ஒரு முகம் :(
கடைசியில் உண்மை முகம் வெளிப்படும்போது அது தரும் வலி தாங்க முடில :(
ஒரு நொடியில் தூக்கி வீசிட்டேன் fb ..ஐ ஆம் வெற்ரி ஹாப்பி :)
மிக சரியா சொன்னீங்க உண்மையான உறவுகளுக்கு அங்கே வாய்ப்பில்லை :(
Deleteவலைத்தளத்திலும் பல கறுப்பு ஆடுகள் பதுங்கி இருக்கின்றன... ஜாக்கிரதை நீங்கள் அதிரா ராஜி கிரேஸ் போன்றவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்
உண்மைதான். பொதுவெளி உறவுகள் இப்படித்தான். ஆதாயத்தோடும், அவசியமில்லாமல் கூடும். சொந்தங்களிலேயே சேராத மனங்களையா இதில் சேர்த்துவிட முடியும்! ஆமாம், என்ன ஆச்சு?!!
ReplyDeleteமிக சரியாக தெளிவாக சில வரிகளில் நறுக்கென்று சொல்லி இருக்கிங்க ஸ்ரீராம் குட்
Deleteஆஹா ட்றுத்துக்கு இப்போதான் ஞானம் பிறந்திருக்கு:)... சில விசயங்களில் அடுத்தவர்கள் சொல்லி நாம் கேட்கமாட்டோம்.. அடிபடும்போதுதான் புரியும்:)...
ReplyDeleteமேலே பாருங்கோஒராள் மின்னி முழக்குறா இப்போ:).. அவவுக்கு நான் வெளியேவரச்சொன்னபோது, மனம் வராமல் அங்கயே இருந்தா:)... பின்பு ஒருநாள் நெருப்புச்சுட்டதுபோல ஓடி வந்தவ வந்தவதேன் ஹா ஹா ஹா நான் ஜொன்னா யாரு கேய்க்கிறாக:)... புளொக்குகளில் அடிவாங்க மாட்டோம் என்றில்லை ஆனாலும் அதைவிட இது பெட்டர் அவ்ளோதான்:)...
உண்மைதான் அதிரா :( லேட்டானாலும் மனிதர்களை புரிந்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது அதை நினைத்து மீ ஆப்பி :)
Deleteஅப்புறம் அது நெருப்பு சூடு இல்லை volcano அளவு சூடாக்கும் :(
நான் சுடுபடவும் இல்லை ஞானம் பெறவும் இல்லை... மற்றவர்களின் அனுபவத்தில் இருந்தே நான் பாடம் கற்றுக் கொள்பவன் அதனால் நான் அடிப்பட்டுதான் பாடம் கற்க வேண்டுமென்பதில்லை..
Deleteஅதிரான ஞானம் யாரு அவங்க அமலா பால் அல்லது நயனோடு தங்கச்சியா?
என்ன ஆச்சு என்ன ஆச்சு என்ற கேட்ட நட்புகளுக்கு எனக்கு ஒன்றும் ஆகவில்லை எந்தவிதான மோசமான அனுபவங்களும் எனக்கு இந்த சமுக வலைத்தளங்கள் மூலமும் ஏற்படவில்லை அதிலும் பேஸ்புக் மூலமாக ஏதும் ஏற்படவில்லை.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் தளத்தில் . இந்தவரிகளை *******"நம்மை பிடித்தவர்கள் மட்டும்தான் நம்மை பாலோ செய்வார்கள் .ஆனால் பேஸ்புக்கில் நம்மை பிடிக்காதவர்களும் நம்மை பாலோ செய்வார்கள் காரணம் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிய அதனால்தான் மோடி போன்றவர்களுக்கு பேஸ்புக்கில் அதிக பாலோவர்கள். " ********* போஸ்ட் செய்து இருந்தேன். அதை ரெண்டு நாட்களுக்கு முன் ஒல்ட் மெம்மோரி என்று பேஸ்புக் தளம் எனக்கு காட்டியது அதை ரீ ஷேர் பண்ணாமல் அந்த வரிகளை பற்றி சற்று ஆழமாக யோசித்ததன் விளைவே இந்த பதிவு..
ReplyDeleteஎன்னை பொறுத்த வரை பேஸ்புக் என்பது நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதற்கும் தமிழ்மணம் போல மற்றவர்களுக்கு எனது வலைப்பதிவை சேர்பதற்கு உதவும் தளமாகவே நான் பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான் நான் யாரிடமும் இங்கு ஏமாறுவதில்லை ஏமாற்றுவதும் இல்லை. நான் ஏமாறுவது எல்லாம் நேரில் பழகுபவர்களிடம் மட்டுமே காரணம் இங்கு வருவது பொழுதுபோக்கிற்காக மட்டுமே ...
மதுர...
ReplyDeleteமுகநூல் நட்பு அது முகமூடி நட்பு. அளவோட இருக்கணும்.. அதே போல் தூர இருத்தல் சேர உறவு.
Its just time pass. nothing more than that.
ReplyDeleteஉண்மை கூட இருப்பவரை அலட்சியப்படுத்துவது நமக்கே நாம் செய்து கொள்ளும் துரோகம் ஆனால் நல்லவையும் கெட்டவையும் எங்கும் உண்டு ....தீதும் நன்றும் பிறர் தர வாரா ....இதுக்கும் விதிவிலக்கு இருக்கு
ReplyDeleteநான் முகப் புத்த்ககத்தில் அதிகம் வருவதில்லை சிலர் கருத்துகளைப் படித்து எதிரிகள் போல் நினைக்கிறார்களோ என்றும் தெரிகிறது
ReplyDeleteFB - just time pass.
ReplyDeleteIn a second, you open many people's eyes.
ReplyDelete