வருமான வரித்துறையின் சோதனையும் நெட்டிசன் மதுரைத்தமிழனின் நக்கல் கருத்துகளும்
நாடு முழுதும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது உறவினர் இல்லங்களிலும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை முன்றாவது நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்த மதுரைத்தமிழனின் கருத்துக்கள் இங்கே
வெற்றிகரமாக நூறாவது நாளாக சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் , நண்பர்களின் இடங்களில் வருமானவரி சோதனை தொடர்கிறது: வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல். இப்படி ஒரு தகவல் மோடி ஆட்சியில் வராமலா போய்விடும் #Sasikala #ITRaid
என்னடா நம்ம வீட்டில் வருமான வரி சோதனை பண்ணுறோம் என்று வந்தவர்கள் நிரந்தரமாக இங்கேயே வருமான வரி அலுவலகத்தையே ஆரம்பித்துவிட்டார்களே அடப்பாவிகளா!
சசிகலா தினகரன் குடும்பத்தினர் இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்களே அவர்களிடம் இருந்த சொத்தை எல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்துவிட்டதா என்ன?
அதெல்லாம் இல்லீங்க சோதனை செய்த நாட்களின் போது வருமான துறை அலுவலர்களுக்கு பொங்கி போட்டே அந்த சொத்து முழுவதும் காலியாகி இப்ப தெருவில் நிற்கிறார்களாம்.
எடப்பாடி இப்படிதான் யோசிப்பாரோ என்னவோ ?இப்படியே சோதனை தொடர்ந்தால் வருமான வரி துறை அதிகாரிகளும் தினகரன் குடும்பத்தினரும் ஒன்றுக்குள் ஒன்றாகி சம்பந்தம் பண்ண ஆரம்பித்துவிடப் போகிறார்கள்..
பன்னீர் மைண்ட் வாய்ஸ் :இப்படியே தொடர்ந்தால் வருமான வரித்துறையே என் சொல்லுக்கு கட்டுபட்டு என் வீட்டிலே இருக்கிறார்கள் என்று பேசிடப் போகிறார்கள்
சசிகலா தினகரன் வீட்டை வருமான வரி துறையினர் சோதனையிட்ட போது கிடைத்த தகவல்களின்படி இவர்கள் இருவரும் இந்திய அரசைவிட மிக அதிக அளவு சொத்துக்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வருமான வரித்துறையின் வேலை என்னவென்றால் ஆளும் கட்சியினரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க வைத்து வேடிக்கை பார்த்துவிட்டு அவர்கள் எதிர் கட்சிகளாக ஆகும் போது அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதுதான்..
சசிகலா, தினகரன் மீது வருமான வரி துறை சோதனை நடத்துவதில் தப்பு ஏதும் சொல்ல முடியாது.. ஆனால் இவர்கள் இத்தனை நாள் சொத்துக்கள் சேர்க்கும் வரை வருமான வரி துறை என்ன செய்து கொண்டிருந்தது. உலகம் முழுவதற்க்கும் இவர்கள் சொத்து சேர்த்த வுபரம் தெரியும் போது இந்த துறைக்கு மட்டும் இத்தனை நாள் தெரியாமல் இருந்தது எப்படி? இவர்களுக்கு தெரிந்தும் இத்தனைநாள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது செய்யுமா? இந்த மோடி அரசு ?
அன்புடன்
மதுரைத்தமிழன்
முந்தைய சோதனைகள் சொல்லிச் சென்றதைத்தான் இதுவும் செய்யப் போகிறது.
ReplyDeleteஇதெல்லாம் ஒரு கேலிக்கூத்து... இப்பல்லாம் வருமான வரி சோதனை என்பதை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படியான சோதனைகள் தொடரும் பட்சத்தில் அதிகாரிகளை வாண வேடிக்கையுடன் வரவேற்கும் காலம் விரைவில் வரக்கூடும்.
இது மாதிரி தகவல்கள் எல்லாம் தெரிய வருமே தவிர, அப்புறம் அவை என்னாகும் என்று யாருக்கும் தெரியாது! அரசியல்!
ReplyDeleteநீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? தினமலர் வெளியிட்ட இந்த செய்தி உங்கள் பார்வைக்கு வந்ததா இல்லையா?
ReplyDeleteரகசியம் கசிந்தது: இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி.,யுடன் பேசி, பாதுகாப்பு கேட்டுள்ளனர். அப்போது, 'ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று, வரித்துறை கூறியுள்ளது. ஆனாலும், எப்படியோ, தினகரன் தரப்புக்கு ரகசியம் கசிந்துள்ளது. சில இடங்களில், போலீசார் முறையாக ஒத்துழைக்கவில்லை என்கின்றனர், வரித்துறையினர். ( http://www.dinamalar.com/news_detail.asp?id=1894358 )
அரசியல்.....
ReplyDeleteஎல்லாம் பூச்சாண்டி வேலை எவனுக்கு தண்டனை கிடைக்கப்போகுதூதூதூதூதூதூதூ
ReplyDeletecorrect action ...we must support the govt
ReplyDeleteஎண்டர்டெயின்மெண்ட் கொடுக்கிறார்கள் மக்களுக்கு
ReplyDeleteஹாஹாஹாஹா இப்படி மதுரை பதிவு எழுதறதுக்காகவே தான் இப்படி எல்லாம்...அப்புறம் எங்கேங்க இதைப் பத்தி பேசுறாங்க? இல்லை வெளிய வருதா நியூஸ். உள்ள புகுந்து இவ்வளவு சுருண்டுருக்குதுனு சொல்லுவாங்க அப்புறம் அதை விரிக்கவே மாட்டேன்றாங்களே!
ReplyDeleteகீதா
தவறு இழைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் அவர்களால் உபயோகம் இல்லை என்று தெரிந்த பிறகா
ReplyDelete