Friday, November 3, 2017

கலைஞரை கண்டு இன்றும் காவிகள் பயம் கொள்வதேன்?


தனது  உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் எல்லாவித  பொறுப்பில் இருந்தும் விலகி ஒரு சாதாரண குடும்பத்தலைவனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கலைஞர். அவரின் உடல் நிலை சிறிது தேறியதும் முரசொலி கண்காட்சியை பார்க்க அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அதன் பின் அவரது பேரனுக்கு திருமணம் அவரது ஆசிர்வாதத்துடன் நடந்தது. அது பற்றி ஊடகங்களில் செய்தி வந்ததும். இந்த காவிகள் பொறுக்க முடியாமல் சமுக வலைத்தளங்களில் ஊளையிடத் துவங்கி இருக்கின்றனர்.



அவர்கள் பகுத்தறிவு பேசி கொண்டு பலரின் தாலியை தமிழகத்தில் அறுத்தவர் என்று பேசுகிறார்கள்.காரணம் கலைஞரின் பேரனுக்கு நடந்த திருமணத்தில் மணப்பெண்ணிற்கு தாலி அணுவிக்கப்பட்டதாம். அது காவிகளுக்கு குற்றமாகப்பட்டதாம். அட காவிகளே தாலிகளுக்கு நீங்கள் எதிராக பேசுவது போல அல்லவா இருக்கிறது. பகுத்தறிவாளர் குடும்பத்தில் தாலி அனுவிக்கப்பட்டு கலியாணம் நடந்தது என்றால் அதற்கு சந்தோஷப்பட்டு பாராட்ட அல்லவா செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் அதற்கு எதிராக அல்லவா பேசுகின்றீர்கள். கலைஞர் பகுத்தறிவு பேசிக் கொண்டு கட்சி நடத்தி இருக்கலாம் ஆனால் அவரின் கட்சியில் உள்ள அனைவரும் பகுத்தறிவு பேசிக் கொண்டு கோயில் செல்லாமல் இருக்கவா செய்தனர்  பலரும் கோயிலுக்கு போய் கொண்டேதானே இருக்கின்றனர். அது போல கலைஞர் பகுத்தறிவு பேசினாலும் அவர் குடும்பத்திற்கு வந்த மருமகள்கள் கோயிலுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட்டுதானே வருகின்றனர். இது பலரும் அறிந்த உண்மைதானே


கலைஞர் கருப்பு துண்டை தூக்கி போட்டுவிட்டு மஞ்சள் துண்டை தன் வயதான காலத்தில் போட ஆரம்பித்ததில் இருந்தே அவருள் சிறிது மாற்றம் ஏற்பட்டு இருக்கலாமே அதில் என்ன தவறு.


இத்தனை காலம் பகுத்தறிவு பேசி திராவிடகட்சிகள் நாட்டை அழ்த்துவிட்டனர் என்று அதற்கு காரணம் கூறுகிறார்கள் இந்த காவிகள் ஆனால் பக்தியை பற்றி பேசி இந்து மதத்தை பற்றி பேசி ஆட்சி செய்த மூன்று ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் அழித்தது என்று சொல்வதைவிட மிக அதிகமாகவே இந்த காவிகள் அழித்துவிட்டார்கள். இந்த மூஞ்சியை வைத்துக் கொண்டா கலைஞரை கேலி செய்கின்றீர்கள்.

எங்கே கலைஞர் குடும்பத்தினர் பகுத்தறிவு பேசுவதை நிறுத்தி பக்தியில் இறங்கிவிட்டால் நம்ம பொழப்பு நாறிப் போயிடுமே. என்று பதறிப் போய் கலைஞரை காறி உமிழ்கிறீர்களே உங்கள் பக்தி வேஷம் கரையத்துடங்கி உங்களின் சுய ரூபம் வெளியே தெரியத் தொடங்கிவிட்டது என்பதை தமிழக மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதையாவது நீங்கள் அறிவீர்களா அல்லது உங்களின் போலி பக்தி உங்களின் கண்களை மறைக்கிறதா என்ன?

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. வெறும் வாய்க்கு அவல் கிடைத்து விட்டது நண்பரே...

    ReplyDelete
  2. சரிதான் பயமோ.......

    ReplyDelete
  3. பயம் ஒடம்போடு ஒட்டி பிறந்ததானுங்க.............

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.