Sunday, November 19, 2017

மக்களிடம் மோடிக்கு  செல்வாக்கு அதிகரித்து இருக்கிறதா?



மக்களிடம்  கருத்து கணிப்பு நடத்தி மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று எதற்க்காக இப்ப நிருபிக்கனும்? மக்களிடம் உண்மையாக செல்வாக்கு குறைந்து போனாதால்தான் இப்படி போலியாக கணிப்பு நாடகம் நடத்தி நிறுபிக்கிறார்கள்


10,000 பேர் ஆதரிப்பதை இந்தியாவே ஆதரிக்கிறது என்று விளம்பரம் செய்யக்கூடிய நிலையில்தால்தான் மோடியின் செல்வாக்கு இருக்கிறது



விரும்பாத பெண்ணை அடைய நினைக்கும் பாலியல் பலாத்காரம் மாதிரிதான்,
விரும்பாத மக்களை ஆள நினைக்கும் காவிகள் செய்யும் முயற்சிகள் அனைத்துமே அரசியல் பலாத்காரமே.
டிவிட்டரில் படித்தது: பகிர்ந்தவர் : செல்வி


மீனவர்கள் சுடப்பட்டது உண்மைதான், ஆனால் குண்டு கடலோர காவல்படைக்கு சொந்தமானது அல்ல - நிர்மலா சீதாராமன் #

நல்லவேளை மோடி சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணும் போது சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இல்லை ஒரு வேளை அவர் இருந்திருந்தால் மோடியின் ப்ளான்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆனால் அதை நடத்தியது இந்திய இராணுவம் இல்லை என்று சொல்லி இருப்பார்


கவர்னர் தன் வேலையை செய்கிறார் என்று சொல்லுபவர்கள் ஜனாதிபதி என்ன புடுங்கிட்டு இருக்கிறார் என்று கொஞ்சம் சொல்லாமே


அடே யாரவது எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் கொஞ்சம் எடுத்து சொலுங்கப்பா முதல்வர் என்றால் தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஏற்படுத்தபட்டதே தவிர மோடிக்கு சேவை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட பதவி அல்ல என்று

எடப்பாடியை ஆதரிக்க கூவத்தூரில் தங்கி இருந்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதே அது முறையாக சேர்க்கப்பட்ட சொத்துதானா? அதற்கு அவர்கள் ஒழுங்காக வருமான வரி கட்டி இருக்கிறார்களா? இதையெல்லாம் வருமானவரி துறை சோதனை செய்ததா என்று  நாம் கேட்டால் நம்மை பார்த்து கிறுக்கன் உளறுகிறான் வேற வேலைய பாருங்க என்கிறார்கள்? ஆமாம் இப்ப யாரு கிறுக்கன் வருமானவரி துறை அதிகாரிகளா அல்லது நானா?

அட கூமுட்டைங்களா GSTயை வரவேற்க்க வேண்டியது இந்திய மக்களேயன்றி அமெரிக்க முதலாளி பில்கேட் அல்ல..

அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Nov 2017

10 comments:

  1. மோடியின் லட்சணம் சமீபத்திய இடைத்தேர்தலில் இ.காங்கிரஸ் வென்றதில் தெரிகிறதே...
    கார்ட்டூன்களை மிகவும் இரசித்தேன் நண்பரே
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. இடைத்தேர்தலை வைத்து நாம் எந்த முடிவிற்கும் வந்துவிட முடியாது... வருகிற ஆண்டுகளில் வரும் பொது தேர்தலை வைத்துதான் எதையும் சொல்ல முடியும்... ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவருக்கு கிடைத்த இந்துத்துவா ஆட்களின் வோட்டு பாஜக விற்கு கிடைத்து சில இடங்களை பிடிக்கலாம். அதனால் பாஜக தமிழகத்தில் வளர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது

      Delete
  2. கார்டூன் நல்ல இருக்கு ஆனா பார்த்து .....GST சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க சிட்ஷனுக்கு பேச்சு எழுத்துரிமை மற்ற நாடுகளை விட அதிகம் அதனால் மனதில்பட்டதை பட்டென்று சொல்லமுடிகிறது. சுதந்திரம் கிடைத்த பின் அதைப்பயன்படுத்தாமல் இருப்பதுதான் தவறு

      Delete
  3. அதிகமாக சிந்திக்கவைத்த உங்களின் பதிவுகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் உங்களைப் போல எல்லோரும் சிந்திக்க முயற்சிப்பதில்லையே அதுதான் பிரச்சனையே...

      Delete
  4. இந்தியாவின் தலைநகரம் வாஷிங்டன் என்பதால் பில்கேட்ஸ் வரவேற்று இருப்பார்.....

    ReplyDelete
    Replies
    1. ஹீஹீ அப்படி மாறினதுகூட தெரியாமல் நான் இருந்திருக்கிறேன்.... அப்ப தமிழிசை சொன்னது ரைட்டுதான்

      Delete
  5. நீங்கள் ஏன் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கக் கூடாது

    ReplyDelete
    Replies
    1. ஹீஹீ இன்வெஸ்ட்மெண்ட் நீங்க பண்ணுறேனு ஒரு வார்த்தை சொல்லுங்க.... நாளையே ஆரம்பிச்சுடுவோம் அது மட்டுமல்ல நம்ம எல்லா பதிவர்களின் பதிவுகளையும் அதில் வெளியிடுவோம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.