கம்ப ராமாயணதை எழுதியது சேக்கிழார் என்று எடப்பாடி வாய் தவறியோ அல்லது அது பற்றி தெளிவாக தெரியாமல் பதில் சொன்னாதால் என்னவோ இப்ப சமுக இணையதளங்களில் அவரின் கிண்டல் கேலி செய்து பேசி வருவது வைரலாக பரவி வருகிறது..
இப்படி நாடே கிண்டல் செய்யும் போது நாம் சும்மா இருந்தால் இந்த நாடு நம்மை மன்னிக்காது என்பதால் நாமும் எடப்பாடி பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று எண்ணி என்ன எழுதலாம் என்று யோசித்த போது பேசாமல் அவரிடமே ஒரு பேட்டி கண்டு அதை பதிவாக போடலாம் என்று முடிவு அவரை அணுகிய போது அவர் அதற்கு சம்மதித்தார்
அந்த பேட்டியில் அவரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதிலையும் இங்கே பார்ப்போம்.
ஐயா வணக்கம் கம்பராமயணத்தை பற்றி நீங்கள் பேசியதை எல்லோரும் கேலி செய்கிறார்களே அதை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எடப்பாடி : பொது அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்கள்தான் சமுக வலைதளங்களில் என்னைப்பற்றி கேளி செய்கிறார்கள். நீங்கள் வேண்டுமென்றால் என் பொது அறிவை சோதித்து பாருங்களேன் அதன் பின் என் அறிவை எண்ணி உலகமே வியக்கும்.
மதுரைத்தமிழன்: ஐயா திருக்குறளை எழுதியது யார் என்று உங்களுக்கு தெரியுமா?
எடப்பாடி : என்ன தம்பி இவ்வளவு எளிமையாக கேட்கிறீங்களே திருக்குறளை எழுதியது யார் என்று கேட்டால் சின்ன புள்ளைங்ககூட திருமாவளன் என்று சொல்லவார்கள் அது கூட எனக்கு தெரியாதா என்ன...
மதுரைத்தமிழன் : காமராஜ் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்களே அவரைப்பற்றி உங்களுக்கு தெரிந்ததை சில வரிகளில் சொல்லுங்களேன்?
எடப்பாடி : காமராஜ் சிறந்த பாலியில் டாக்டர். அவர் பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவர் புக் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு சிறந்த டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என நினைத்து இருக்கிறேன்.
மதுரைத்தமிழன் : மகா பெரியவர் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சில வரிகளில் சொல்லுங்களேன்?
எடப்பாடி: மாகபெரியவவர் மிகவும் பவர் வாய்ந்தவர் அவரின் தயவால்தான் நான் இப்போது ஆட்சியை தொடரந்து கொண்டிருக்கிறேன்.மகாபெரியவரின் பாதத்தில் விழுந்து வணங்குபவர்கள் சிறந்து விளங்குவார்கள் ஆனால் அவருக்கு எதிராக இருப்பவர்களை வருமானத்துறை ஆயுதத்தை ஏவி அழித்துவிடுவார்.
மதுரைத்தமிழன் " சோழமன்னர்கள் பற்றி?
எடப்பாடி : சோழமன்னர்கள் மதுரை உள்ள வைகை மூலம் கடல் கடந்து கப்பல் மூலம் வாணிகம் செய்தார்கள் வரலாற்று பாடத்தில் படித்து இருக்கிறேன்.
மதுரைத்தமிழன்: தஞ்சாவூர் கோயிலை கட்டியது யார்?
எடப்பாடி : தம்பி சிம்பிள் சிம்பிளாக கேள்வி கேட்குறீங்க அதை கட்டியது அக்பர் என்று உலகமே அறியுமே
ஐயா இதற்கு மேலே உங்கள் பொது அறிவை சோதிக்க வேண்டியது இல்லை நீங்கள் அறிவுக் களஞ்சியம் ஐயா நீங்கள் முதல்வாரக இருந்து ஆட்சி செய்வதற்கு தமிழக மக்கள் மிகவும் கொடுத்து வைத்து இருக்கிறார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பொது அறிவு கேள்விதாட்களுக்கு சரியான பதில் அளிப்பவர்கள் அரசு அலுவலர்களாகவும் தவறாக பதில் அளிப்பவர்கள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்
ஒரு வேளை தஞ்சாவூர் கோயிலை கட்டியது அக்பர்தானோ ? நான் ஏற்கனவே நினைச்சேன்
ReplyDeleteநீங்க நினைச்சதை முன்பே சொல்லி இருந்தால் நீங்கள் தமிழக முதல்வராக ஆகி இருக்கலாம்....மிஸ் பண்ணிட்டீங்களே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிரித்து விட்டேன். வடிவேலு சலூன் காமெடி நினைவுக்கு வந்தது.
ReplyDeleteரசித்து மகிழ்ந்தற்கு நன்றி
Deleteஎனக்கு வயிறு எரியுது...
ReplyDeleteசிரிச்சுத்தான்...
பார்துங்க ரொம்ப சிரிச்சு தேவகோட்டையை எரித்துவிடாதீங்க அப்புறம் பழி என்மேல்தான் விழும்
Deleteசிரிக்க வைக்கிறார்கள். மந்திரிகளுக்கு சற்றும் குறைந்தவர் அல்லவே முதல் மந்திரி!
ReplyDeleteமந்திரிதானே முதல்மந்திரியாக ஆகி இருக்கிறார் அதனால்தான் என்னவோ அவர்கள் நம்மை தொடர்ந்து சிரிக்க வைக்கிறார்கள்
Deleteதமிழகத்தில் முதலமைச்சருக்கும் பொது அறிவு இல்லை
ReplyDeleteஎதிர் கட்சி தலைவருக்கும் பொது அறிவு இல்லை
தமிழகம் இந்த 2 முட்டாள்களிடம் சிக்கிதான் சீரழிய போகின்றது
Deleteதமிழக மக்களுக்கும் பொது அறிவுஇல்லை அதனால்தான் இப்படி பட்ட தலைவர்கள் உருவாகிறார்கள் என்று சொல்லாமே...
ஹாஹா...
ReplyDeleteடெல்லிவாசியான உங்களையும் இந்த பதிவு சிரிக்க வைத்துவிட்டது போல இருக்கே
Deleteஅவர் சொன்னது போல் கேள்விகள் மிகவும் சாதாரணம் அதனால் பதில்கள் இப்படி
ReplyDeleteஉண்மைதான் சாதாரண மனிதரிடம் சாதாராண கேள்விகள் கேட்டால் இப்படி சாதாரணமாகத்தான் பதில் சொல்லுவார்கள்
Deleteமுந்தி காலத்தில் அரசியலுக்கு வர படிக்கணும்னு அவசியமில்லை ஏனென்ன்றால் அவங்க எல்லாம் நேர்மையா வாழ்க்கை பாடத்தை கற்று கஷ்டப்பட்டு முன்னேறினவங்க ..இனிமே MLA போஸ்டுக்கும் கட்டாயம் ஏதாவது டிகிரீ முதல் வகுப்பில் பாசானதன் எலெக்ஷனில் நிற்க அடிப்படை தகுதி கட்டாயமாக்கப்படணும் .இல்லேன்னா வரலாற்றையே மாத்தி எழுதிடுவாங்க .
ReplyDeleteபடிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை.... படிச்சவங்க இவரைவிட கேலமாகத்தான் பதில் சொல்லுவாங்க உதாரணமாக ஆர்ஜே பாலாஜி சில படித்த இளைஞர்களிடம் சில பொது அறிவுகேள்விகளை கேட்டார் அதற்கு பதில் சொன்ன பட்டதாரி ஆண்கள் பெண்கள் எல்லோரும் எடப்பாடியைவிட மிக கேவலமாக பதில் சொன்னார்கள் அதுதான் உண்மை... என்ன ஒரு முதல்வர் இப்படி பேசிட்டாரே என்றுதான் அவரை கிண்டல் செய்து பதிவு இட்டு இருக்கிறேன். இப்படி எடப்பாடி பதில் சொன்னதால் அவர் ஒன்றும் முட்டாள் அல்ல. அவர் முட்டாளாக இருந்தால் இன்னும் காலில் விழுந்துதான் கிடப்பார் ஆனால் அவருக்கும் அறிவு இருப்பதால் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி இப்ப முதல்வராக ஆகிவிட்டார். அதுதான் உண்மை
Deleteஹா ஹா ஹா ஹா
ReplyDeleteஆனா, மதுரை உங்களை ரொம்ப வன்மையாக மென்மையாகக் கண்டிக்கிறேன்....,அதி முக்கியமான கேள்வியை விட்டுவிட்டீர்கள்...தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் யார்னு பட்டியல் போட சொல்லிட்டு....உங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தவர் யார்னு கேட்டிருக்கணும்...ஹிஹிஹிஹி
கீதா
அப்படி கேட்டு இருந்தால் புரட்சி தலைவி ஜெயலலிதா என்பதற்கு பதிலாக புரட்சி தலைவி நயன்தாரா என்று சொல்லி இருப்பார் அதானல்தான் கஷ்டாமான கேள்வியை கேட்கவில்லை
Deleteரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteசிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது இப்பதிவு நண்பரே.நன்றி
ReplyDelete