Sunday, December 31, 2017

@avargalUnmaigal
ரஜினியின் அறிவிப்பும் தமிழக நெட்டிசன்களின் கருத்துக்களும்

ரஜினிகாந்தின் அறிவிப்பிற்கு பின்   நான் சமுக வலைத்தளங்களில் இட்ட  நையாண்டி கருத்துகளும்  தமிழக  நெட்டிசன்களின் கருத்துக்களும்

முதலில் என் கருத்துக்கள் :



ரஜினிகாந்த அவர்களே யார் அரசியலுக்கு வந்தாலும் அதை வரவேற்பது என்பது ஜனநாயகம் ஆனால் அப்படி வருபவர்களின் டவுசரை அவிழ்த்துவிடுவதுதான் நெட்டிசன்களின் ஜனநாயகம் !

பன்னிதான் கூட்டமா வரும் ஆனால் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் இது சினிமா வசனம், ஆனால் சிங்கங்கள்(கலைஞர்,ஜெயலலிதா ) இல்லாத நேரத்தில் அசிங்கம்  களம் இறங்கி இருக்கிறது


மதுரைத்தமிழன் : ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதற்காக?
லதா ரஜினிகாந்த் : அவர் முதல்வராக வர முக்கிய காரணம் அவருக்கு வயது ஆகிவிட்டது நோயும் வந்து விட்டது முதல்வாரானல் ஹாஸ்பிடல் செலவு இலவசம் என்று சொன்னாங்க.அதனாலதான் அவர் அரசியலில் இறங்க முடிவு பண்ணி இருக்கிறார்

நேற்று பெரியார் வழின்னு சொன்ன ரஜினிகாந்த்  இன்று ஆன்மீக வழின்னு சொல்லுறார். ஒருவேளை மாமா மப்புல உளறிட்டாரா என்ன?.

#ரஜினிகாந்த் 10 காசு கூட ரசிகர்களுக்காக செலவிடதா #ரஜினிகாந்தா கட்சி ஆரம்பிக்க போகிறார்....அவர் இயக்கம் ஆரம்பிப்பார் அது நன்றாக போணி ஆனால் அதை கட்சியாக மாற்றுவர் இல்லையென்றால்  அப்படியே இயக்கத்தை நடத்திவிட்டு போய்விடுவார்

என்னை வாழ வைத்த ரசிகர்களுக்கு என்ன கைமாறு செய்வது என்பதுகூட எனக்கு தெரியவில்லை-ரஜினி
இவரை முதலமைச்சராக தேர்தெடுத்தால் ஆட்சி முடியும் போது என்னை முதலமைச்சாராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை என்று சொன்னாலும் சொல்வார்

தான் இனிமேல் நடிக்க போவதில்லை என்று #ரஜினிகாந்த அறிவித்தால் நல்லா இருக்குமே

உள்ளாட்சி தேர்தலின் போது தான் நடித்த மூவி வெளிவருவது என்பதால்தான் #ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை போல இருக்கிறது... இப்படி தாண்டா  ரஜினி தமிழக மக்களுக்கு  நல்லது செய்வார்

அரசியலுக்கு வருவது உறுதி #ரஜினி  அறிவிப்பு... அவர் டவுசரை உருவிவிட நாங்க ரெடி-தமிழகமக்கள்

பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை-#ரஜினிகாந்த
உண்மைதானுங்க நீங்க வருவது பணத்திற்காக இது கூட எங்களுக்கு புரியாதா என்ன?



அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி தான் செத்த பிறகு அந்த கட்சியின் தலைவர் யாராக இருப்பார் என்று அறிவிப்பாரா? இல்லையென்றால் நாட்டின் பல பகுதியில் இருக்கும் பெண்கள் ரஜினிகாந்த்தான் என் அப்பா என்று அறிவிக்க கூடும்,


அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ரஜினிகாந்த அவரின் கட்சியில் உள்ள பொறுப்புள்ள பதவிகளுக்கு எந்த கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கவுன்சிலர்கள் போன்றவர்களுக்கு இடம் இல்லை என்று அறிவிக்கத்தயாரா?

உள்ளாட்சி தேர்தலில் நின்று ஜெயித்தால் கவுன்சிலர்களும் மேயர்களும்தான் பணம் சம்பாதிக்க முடியும் ..ஆனால் சட்டசபை தேர்தலில் நின்று ஜெயித்தால் முதலமைச்சாராகி நாமும் சம்பாதிக்க முடியும் என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று ரஜினிகாந்த அறிவித்து இருக்கிறார் போல.....

ரஜினி முதல்வராக வேண்டுமானல் ரஜினி + பாஜக + அதிமுக கூட்டணி இருந்தால் மட்டுமே வரமுடியும்


===========

சமுக வலைதளங்களில் ரஜினியின் அறிவிப்பிற்கு பின் வந்த   தமிழக நெட்டிசன்களின் கருத்தும் குவியல்கள்

James Vasanthan
ஒரு மண்டபத்திற்குள் கூச்சலிடுகிற 2,000 வெறித்தனமான ரசிகர்களை வைத்து எதையும்
கணித்து விடக்கூடாது!

Ezhumalai Venkatesan

இன்னைக்கு தேதிக்கு நீங்க அரசியல்ல இருக்கீங்களா?

இல்லை.. வரப்போறோம்...

இன்னைக்கு இல்லைல்லே..கௌம்பி போய்க்கிட்டே இரு..



ஆல்தோட்டபூபதி

'என் ஆட்சியில்'னே பேச ஆரம்பிச்சுட்டாரு ரஜினி. முதல்ல அன்புமணி கூட இப்படித்தான் இருந்தாரு, அப்புறம் குணமாகிட்டாரு

 SKP Karuna‏

என் முன்னே மைக்கை நீட்டி ‘உங்க கொள்கைகள் என்ன?’ என்று கேட்கிறார்கள்.
எனக்கு திக்கென ஆயிடுச்சு! என்கிட்டே போய் கொள்கைகள் என்ன என்று கேட்கிறார்களேன்னு...
-சூப்பர் ஸ்டார்
.

SN
டேய் மீடியாஸ், ஒரு நிமிசம். ரஜினி அரசியலுக்கு இன்னும் வரல. வரேன்னு சொல்லி இருக்கார். எப்ப எப்படி வருவார்ன்னு அவருக்கே தெரியாது. பாத்து  தலைப்பு செய்தி போடுங்க :)

Stephen

உண்மை, உழைப்பு, உயர்வு
சரவணா ஸ்டோர்ஸ் தாரக மந்திரமாமே ???


#RajiniInPolitics

Amutha Krishna

அடுத்த முதல்வர் ரஜினி. அடுத்த சட்டசபை தேர்தலில் பிஜேபி பெரும்பான்மை இடத்தை பிடிக்கும்.
கூட்டி கழிச்சு பார்த்துக்கோங்க!!!

ரஹீம் கஸாலி

ரசிகர்-1: தலைவர் அரசியலுக்கு வந்துட்டாரு. ஸ்வீட் எடுத்துக்கங்க.
ரசிகர்-2: அம்பது வயசை தாண்டிருச்சுங்க எனக்கு. சுகர் இருக்கு. டாக்டர் ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு.


#Rajinikanth
#ரஜினிகாந்த்


சுப்பிரமணியன் சுவாமி
 ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 'இது வெறும் அரசியல் அறிவிப்பு தான். வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை. ஏன் என்றால் அவர் படிப்பறிவில்லாதவர். ஊடகம் தான் இவற்றை பெரிதாக காட்டுக்கிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். புரிந்து கொள்வார்கள்’ என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.


நாகசோதி நாகமணி

ரஜினி தமிழ்நாட்டுல கட்சி ஆரம்பிக்கிறேன் அப்படினு சொன்னதுக்கு பெங்களூரு பூராம் வெடி வெடிச்சி கொண்டாடுறான் பாரு அங்கதான்யா நிக்குது இனப்பற்று,,,

எவன் நாசமா போனா நமக்கென்ன நேத்து ஊற வைச்ச துணிய துவைப்போம்
,,



Stephen

ரஜினிக்கு தான் சிஸ்டம் சரியில்லையினு நினைக்கிறேன்!

உயிருக்கு போராடும் நோயாளிக்கு உடனே மருத்துவம் செஞ்சாத்தான அவன் பிழைப்பான்.

அதவிட்டுட்டு ஹாஸ்பிட்டல் கட்டுண பிறகு அவன் உயிர காப்பாத்தலாம்னு நினைச்சா காப்பாத்த முடியுமா?

இப்பையும் எனக்கு ரஜினி ஒரு சுயநலவாதியாகவே தெரிகிறார்.


மௌலி வண்ண களஞ்சியம்


காவேரி கர்நாடகாவில் இருந்து வராது...ஆனால் தலைவர் மட்டும் வருவார்.. தமிழனின் சாபம்.. #Rajinikanthpoliticalentry

Nimalan Kumar

தமிழ்நாடு முழுக்க தினகரன் பற்றி பேச்சை அடக்க ஒரே வழி ரஜினி தான் என பாஜக நம்புகிறது. அவனுக்கு தெரியல ரஜினி ஒரு பாடிசோடா என....


Sathish Sangkavi

65 வயசில் அரசியலுக்கு வந்து, தொகுதி தொகுதியா சுத்தி, மக்களுக்கு எதுனா செய்வாருன்னு நம்பறீங்க !!

 G e N i u $‏

இந்த மக்கள் ரஜினி வந்தா மாறிடும் கமல் வந்தா மாறிடும்னு நம்பிட்டு இருக்காங்க..
யாரு வந்தாலும் நாம மாறுனாதான் எல்லாமே மாறும்னு புரிஞ்சுகிறதுக்கு நூறு வருசம் ஆகும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. முதல்ல இவன் பொண்டாட்டியை மாநகராட்சி கட்டிட வாடகையை கொடுக்கச் சொல்லுங்க....

    கர்ணனாக நடித்த சிவாஜி கணேசன் ஒரு கஞ்சன் மக்களுக்காக பத்து பைசா செலவு செய்ததில்லை ஆகவேதான் திருவையாறு தொகுதியில் ராஜசேகரன் வெற்றி பெற்றார்.

    இவனும் சிவாஜி கணேசன் போலவே அட்ரஸ் தொலைக்கப் போறான்.

    நாலு கிறுக்குப்பயல்களை நம்பி இறங்குவது தவறே....
    பதவி ஆசை இல்லையாமுல ஏண்டா டோய்.... வாய்ல வந்துடும் எனக்கு....

    ReplyDelete
  2. "ஒரு வேளை மாமா"
    இது என்ன ய்யா புதுசா ஒறவுமுறை எல்லாம் சொல்லி கூப்புட ஆரம்பிச்சிருக்கே.
    தனுசு குடும்பத்த செதைச்ச பாவத்துக்கு ஆளாயிருராத ய்யா.

    ReplyDelete
  3. கடைசியா ஒருத்தர் சொல்லியிருக்கார் பாருங்க அதுதான் சரி நாமதான் மாறனும்

    ReplyDelete
  4. இன்னும் அவர் உறுதியா சொல்லவே இல்லையாமே!!!

    கீதா

    ReplyDelete
  5. அம்மாடியோவ் !!இதென்ன சேர்ந்தாப்ல 13 மணிநேரம் ஆன்லைன் வரலை அதுக்குள்ளே இவ்ளோ நடந்திருக்கா ..இருங்க நியூஸ் எல்லாம் தெளிவா படிச்சிட்டு வந்து கமெண்டறேன் :)

    ReplyDelete
  6. கடைசியா சொன்ன ஜீனியசோட கருத்து மிக சரி

    ReplyDelete
  7. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. அஞ்சுட சித்தப்பா பற்றி உப்பூடி எல்லாம் ஜொள்ளக்கூடா ட்றுத்...

    ஹப்பி நியூ இயர்...

    ReplyDelete
  9. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துக்கள் .
    நீங்கள் ஏன் முதல்வர் ஆக முயற்சிக்கக் கூடாது ? நாங்க எல்லாம் தீயா வேல பாத்து ஜெயிக்கவைப்போமே?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.