Saturday, December 23, 2017

@avargalunmaigal
சனிபகவான் என்ன இவ்வளவு மோசமானவரா என்ன?  

சனி பெயர்ச்சி பலன் யாருக்கு எப்படியோ ஆனால் என்னுடைய வாழ்வில் இப்படி மோசமாக வந்து இருக்கிறார். நிச்சயம் சனிபகவான் வேறு யாருடைய வாழ்க்கையிலும் இவ்வளவு மோசமா வந்து இருக்கமாட்டார்.

அப்படி என்னய்யா மோசம் என்று கேட்கிறீங்களா? அதை எப்படி சொல்லுவது...

வெள்ளிக்கிழமை நாளும் அதுவா.....அதுவும் 13 ம் தேதி.........அதுமட்டுமல்ல அமாவசை அன்று......என்னுடைய மாமனார் மாமியார் என் வீட்டிற்கு வருகிறார்களாம்....


சரி அதை விடுங்க அஜித் படம் என்றால் நல்லா இருக்கும் என்று சொல்லி விவேகம் படத்தை கடந்த இரண்டு நாட்களாக பார்த்து இன்று முன்றாவது நாளாக படத்தை பார்த்து முடித்தோம்... இதைவிட கொடுமை வேற எதுவும் எனக்கு வரப் போவதில்லை


இப்ப சொல்லுங்கய்யா இது போல மோசமாக யாருடைய வாழ்விலும் சனிபகவான் புகுந்து விளையாடி இருப்பாரா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

நேற்று முகநூலில் பதிந்தது 
விவேகம் படத்தை கடந்த இரண்டு நாட்களாக பார்த்து கொண்டிருக்கிறேன் இன்னும் பார்த்து முடிக்கவில்லை.. ஒன்று மட்டும் புரிகிறது. அஜித் நடிப்பிற்கு  இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று ரத்தநாளிங்களில் வெறிபிடித்த ஒருவரால்தான் இப்படி எடுத்து இருக்க முடியும்

5 comments:

  1. வாழ்த்துகள். குடும்பம்... குதூகலம்.

    ReplyDelete
  2. ட்றுத், சனி பகவான் உங்களுக்குள் புகுந்திருக்கிறார் என்பது சத்தியமான உண்மை:)... ஏன் தெரியுமோ?.. நீங்க இதில் என்ன சொல்றீங்க/ சொல்ல வாறீங்க என சத்தியமாப் பிரியவில்லை:) நேக்கு:).

    ReplyDelete
  3. ஓவராக் கதை அடிக்கிறீங்களே .2018 ல் வெள்ளிக்கிழமை யும் 13 ம் தேதியும் சேர்ந்து வருவது ஏப்ரலில் ஜூலையிலும்தான்
    .அமாவாசையும் வெள்ளிக்கிழமை யும் 13 ம் தேதியும் சேர்ந்து வருவது ஜூலை 2018 ல் தான் .அதுக்கா இப்பலேருந்தே.........ஓவர்

    ReplyDelete
  4. பாவம் சனி பகவான் அவரை பிடித்தது நீங்கள் :-)))))))))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.