ஒரு பெண்ணின் மனதை பெண் அறிவாள் ஆனால் ஜெயலலிதா அதை அறியவில்லையே
ஜெயலலிதா பற்றி சமுக வலைதளங்களில் எழுதிய பல பதிவுகள் என் கண்ணில்பட்டன. பல பதிவுகள் புகழ்ந்து இகழ்ந்தும் வந்தன. அப்படி புகழ்ந்து வந்த பதிவுகளில் ஜெயலலிதா ஏதோ பெரிய சாதனையாளர் என்றும் தைரியமிக்கவர் என்றும் யாருக்கும் அஞ்சாதவர் என்றும் பெண்கள் மீது இரக்கம் கொண்டவர் என்று எழுதி இருந்ததை படிக்கும் போது ஆத்திரமே வந்தது..
ஜெயலலிதா பற்றி சமுக வலைதளங்களில் எழுதிய பல பதிவுகள் என் கண்ணில்பட்டன. பல பதிவுகள் புகழ்ந்து இகழ்ந்தும் வந்தன. அப்படி புகழ்ந்து வந்த பதிவுகளில் ஜெயலலிதா ஏதோ பெரிய சாதனையாளர் என்றும் தைரியமிக்கவர் என்றும் யாருக்கும் அஞ்சாதவர் என்றும் பெண்கள் மீது இரக்கம் கொண்டவர் என்று எழுதி இருந்ததை படிக்கும் போது ஆத்திரமே வந்தது..
பவர் என்று ஒன்று மனிதனுக்கு கிடைத்துவிட்டால் அது குப்பனாக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி அவனுக்கு தைரியம் வந்துவிடும் அது போலத்தான் ஜெயலலிதாவிற்கும் உள்ள தைரியம்.. ஜெயலலிதா ஆண்களையே தன் காலில் விழ வைத்தவர் என்று இதில் பெருமை வேற..... அட முட்டாள்களா ஜெயலலிதா காலில் விழுந்தவர்கள் வணங்கியவர்கள் எல்லாம் முதுகெலும்பு இல்லாத ஆண்கள். தங்கள் சுயநலத்திற்காக அவரின் காலில் விழுந்தவர்கள். அவர்களை ஆண் இனத்தில் கூட சேர்க்க முடியாது. கலைஞரை கைது செய்து தர தர வென்று இழுத்து வந்தார்கள் அவர் என்ன ஜெயலலிதா காலில் விழுந்தாரா? பல தடவை ஆதரவு கேட்டு வந்த மோடி காலில் விழுந்தாரா? பலரால் கேலி செய்யப்படும் விஜயகாந்த் என்ன காலில் விழ்ந்தாரா அல்லது அழகிரி/ஸ்டாலின்/திருமாவளவன்/அன்புமணி மேலும் இவர்களை போல உள்ள மற்ற்வர்களைத்தான் அவரால் காலில் விழ செய்ய முடிந்ததா என்ன? இவர்களை எல்லாம் காலில் விழ செய்து இருந்தால் அவரின் தைரியத்தை புகழலாம்.
அட முட்டாள்களே பண்டைய கால வரலாறில் இருந்து இந்த கால வரலாறு வரை விபசாரிகளின் காலில் கூட ஏன் அவர்களின் காலுக்கு இடையே கூட ஆண்கள் விழ்ந்து கிடைந்ததை நீங்கள் அறியவில்லையா என்ன? அதற்காக விபசாரியை புகழ முடியுமா என்ன?
முட்டாள்களே இது அல்ல சாதனை...ஒரு பெண்ணுக்கு தான் பெண்னின் மனதை அறியமுடியும் என்பார்கள். அது கூட ஜெயலலிதா விஷயத்தில் உண்மையாக வில்லை.. அவர் ஒரு பெண்ணாக இருந்தும் மற்ற பெண்களின் மனதை அவர்கள் தினம் தினம் அனுபவிக்கும் வேதனைகளை அறிந்து அதற்காக எந்தவொரு விஷயத்தையும் செய்யாதவரை எப்படி உங்களால் சாதனையாளர் என்று சொல்ல முடிகிறது.
ஒரு பெண்ண்னிற்குதான் மற்ற பெண்ணின் மனதை அறிய முடியும் என்றால் சாரயத்ததால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிந்தது அவரின் கண்ணிற்கு தெரியவில்லை அவரது ஆட்சியில்தான் டாஸ்மார்க்கிற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் அதற்கு அவரின் பதில் என்னவென்று நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டுமா? பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் கழிப்பறை இல்லாமல் எப்படி வேதனைபடுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் கழிப்பறை இல்லாமல் எத்தனை பெண்கள் தினம் தோறும் கஷ்டப்படுகிறார்கள் இதற்கு எல்லாம் பவரில் இருந்த இவர் என்ன செய்தார் என்று சொல்லமுடியுமா உங்களால் ?அவர் பெரிய சாதனை செய்துவிட்டார் என்கிறீர்களே இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?
ஒரு பெண் தாம்பரத்தில் இருந்து பாரிஸ்வரை டூவிலரிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பயணம் செய்யும் ஒரு அவசரத்திற்கு இந்த பாதையில் எங்காவது ஒதுங்க ஒரு இடம் உண்டா சொல்லுங்கள். ஆண்களுக்கு என்ன தாம்பரத்தில் பாரிஸ்வரை உள்ள பாதைகள் அனைத்தும் கழிவறைதான் ஆனால் பெண்களுக்கு?
இதற்கு பதில் சொல்லிவிட்டு அதன் பின் அவரின் தைரியத்தையும் சாதனையும் புகழுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
சரியான கேள்வி நண்பரே முதுகெலும்பு இல்லாத ஆண்கள் உண்மையான வார்த்தை.
ReplyDeleteஅந்தத் தகிரியம் இருந்தால்தான் புகழ மாட்டேங்களே.... தைரியமும் ஒரு வகையில் சுய மாரியாதையே...
ReplyDeleteமிகச் சரியான.மதிப்பீடு. கூட இந்த விபச்சார ஊடகங்களையும் சாடியிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்
ReplyDeletesuper bro..really good analysis..
ReplyDeleteGood question, but the so called manly MK or his son while he was a mayor didn't construct toilets ( or enough toilets ) - only Modi is doing ( at the girl's schools - more on the northern inida as TN is a developed state for them ) even though you are basing him daily in and out. I believe there are rest rooms in every train station and in some big stand , its another matter it is not maintained - major portion for the same goes to public, because they don't demand such basic facilities from the politicians . We ( means , public , politicians, govt, planners ) should do this basic necessity in a big way and use these waste as resource to plant trees , grass, flowers on the road side and highways, and in wastelands .
ReplyDelete