Wednesday, December 27, 2017

@avargalunmaigal
குருமுர்த்தி கருத்தால் தமிழக குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள்

என்ன டாக்டர் எங்களுக்கு குழந்தை இல்லைன்னு  உங்களிடம் சோதனைக்கு வந்தால் துக்ளக் ஆசிரியர் குருமுர்த்தியை போய் பார்க்க என் கணவருக்கு சீட்டு எழுதி தரீங்க?

அதுவாம்மா அவர்தான் இப்ப தமிழகத்தில் யார் ஆண்மை உள்ளவர் இல்லாதவருன்னு துல்லியமாக கணிச்சு சொல்லுகிறார் அதனாலதான் நான் அவரை போய் பார்த்துட்டு வர சொல்லுறேன்


என்னம்மா கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது இன்னும் உன் வயித்தில புழு பூச்சி ஒன்றும் உருவாகல? வேண்டுமென்றால் மாப்பிள்ளையை குருமுர்த்தியிடம் அனுப்பி ஒரு செக்கப் பண்ணிடலாமா?



நீதிபதி : என்னம்மா உங்களுக்கு விவாகரத்து வேணுமா ? எதற்க்கம்மா விவாகரத்து தேவை?
பெண் : சார் என் கணவர் ஆண்மையற்றவர் சார்?
நீதிபதி: குருமுர்த்தியிடம்  இருந்து அதற்காக சர்டிபிகேட் ஏதும் வாங்கி வைச்சிருக்கீங்களாம்மா?


தரகரிடம் பெண் வீட்டார் என்னங்க மாப்பிள்ளை ஜாதகம் மட்டும் கொண்டு வந்திருக்கீங்க? நாங்க எத்தனை தடவை படிச்சு படிச்சு சொல்லுறது ஜாதகத்தோட குருமூர்த்தியிடம் இருந்து சர்டிபிகேட்டும் கொண்டு வாங்க என்று


கொசுறு :
ஆங்கிலம் தெரியாததால் குருமூர்த்தியின் ட்விட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - அன்புமணி ராமதாஸ்

அன்புமணியை குருமுர்த்தி ஆங்கிலத்தில் திட்டினால் தப்பாகவே எடுத்து கொள்ள மாட்டார் ஏனென்றால் அன்புமணிக்கு ஆங்கிலம் நன்றாகவே தெரியுமே


அதிமுக எப்படி ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தரமற்றவர்களின் கையில் போய்விட்டதோ அது போலத்தான் சோ மறைந்ததும் துக்ளக்கின் ஆசிரியர் பதவி தரங்கெட்ட ஆளின் கையில் போய் இருக்கிறது

பன்னியை குளிப்பாட்டி நடுவிட்டுல வைத்தாலும் அது பீயைத்தான் திங்கும் அது போல குருமுர்த்தியை துக்ளக் ஆசிரியராக வைத்திருப்பதும்.

கழகத்தின் போர்வாளாக இருந்து கலைஞருக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்த #வைகோதான் இப்போது பகுத்தறிவாளர்களால் ராசி இல்லாத தலைவர் என்று கேலி பண்ணப்படுகிறார்...#அவாள்களால் பொய்யாக பரப்பபட்ட செய்தியை அப்படியே நம்புவதுதான் இந்த கால பகுத்தறிவாளர்களின் செயலாக இருக்கிறது


தினகரன் ஆர்கே நகர் வெற்றிக்கு பணம் மட்டுமல்ல பாண்டேவும்தான் காரணம்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. கடைசியில் பாண்டேவும் மாட்டிக்கிட்டாரே...

    ReplyDelete
  2. சோவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

    ReplyDelete
  3. இதுதான் ஆங்கிலத்தின் சிக்கல்.

    ReplyDelete
  4. குருமூர்த்தியைவிட்டு வெளியே வரவில்லையா இன்னமும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.