Wednesday, December 13, 2017

@avargalUnmaigal
செய்திகளும் நக்கல்களும்


செய்தி :பணமதிப்பு நீக்கம் காரணமாக கடனாளியானேன்: தாய், மனைவி பிள்ளைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் உருக்கமான கடிதம்

அடப்பாவி அமித்ஷா மகனிடம் கேட்டால் லாபம் ஈட்ட் வழி செய்து இருப்பாரே... அப்படி செய்யாமல் மோடி கொண்டு வந்த
பணமதிப்பு நீக்கம் காரணமாகத்தான் இப்படி செய்தேன் என்று சொல்லுவது சரியா?

ஒரு இடைத்தேர்தலை மாநில அரசு தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையால் நேர்மையாக  நடத்த முடியவில்லை. மத்திய அரசு அந்த மாநில அரசை கலைக்க்கவேண்டும் அதுமட்டுமல்லாமல் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகளை அந்த பதவிகளில் இருந்து நிரந்தரமாக தூக்க வேண்டும்.....அப்படி இல்லையென்றால் ஜனநாயகம் என்பது ஒரு கேலிக் கூத்தே


சாதீய படுகொலைக்கு தூக்கு தண்டனை கொடுத்த இந்திய சட்டங்கள் மதப் படுகொலைக்கு காரணமணவர்களை தலைவர்களாக நடமாடவிட்டிற்கிறது


இந்தியாவில் உள்ள  சட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பொதுவானது சமமானது ஆனால் நீதிபகளுக்கு அது பொருந்தாது அதனால்தான் கீழ் கோர்ட்டில் கொடுக்கப்படும் தீர்ப்பு ஹைகோர்ட்டில் மாற்றி  அமைத்து கொடுக்கப்படும்


குஜராத் 2-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

அடேய்  இப்பதானய்யா மெயின் படமே ஆர்ம்பிச்சு எங்க மோடி அழுக ஆரம்பிச்சு இருக்கிறார் ஹும் அவ்வளவு சீக்கிரத்தில் முடிச்சிட்டிங்களேடா



எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
அதுபோல அவர்களுக்கு ஒரு சொகுசு சிறைசாலையையும் கட்டிடலாமே


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இந்திய சட்ட அமைப்புக்குழுவில் இருந்த டாக்டர். அம்பேத்கரே இவைகள் ஒழிக்கப்பட வேண்டியது என்று சொல்லியுள்ளார் நண்பரே
    தம.1

    ReplyDelete
  2. நாட்டு நடப்பு இப்படிதான் இருக்கு

    ReplyDelete
  3. மதுரைத்தமிழனுக்கு வணக்கம். உங்கள் அரட்டையில் இணைய விருப்பம்....

    ReplyDelete
  4. இன்னைக்கு இதுதான் நாட்டு நடப்பு....
    இன்னும் மோசமாகும்... வேடிக்கை பார்ப்பதே நம் வாடிக்கை ஆச்சு...

    ReplyDelete
  5. எனக்கு இன்று வந்த ஒரு வாட்ஸாப் : பேசிக்கொண்டே இருந்த கெஜ்ரிவால் மௌனமாகி விட்டார்.

    பேசாத மன்மோகன் பேசத்தொடங்கி விட்டார்.

    ராகுலகாந்தி தான் ஒரு இந்து, தான் ஒரு பிராமணன், தினமும் கோவில்களுக்குச் செல்கிறேன் என்று சொல்லத் தொடங்கி விட்டார்.

    இவைகளையும் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.