Saturday, December 16, 2017

கழிவறை ஆய்வாளார் என்பது இழி சொல்லா ?


நேற்று ஒரு போட்டோடூன் பதிவு போட்டு இருந்தேன். அதில் கவர்னரா கழிவறை ஆய்வாளாரா? என்று கேட்டு ஒரு போஸ்டர் படம் க்ரீயேட் பண்ணி பதிவு இட்டு இருந்தேன்.. அதன் இங்கே மட்டுமல்லாமல் பல குருப்புகளிலும் பதிவு இட்டு இருந்தேன். அதில் ஒரு குருப்புதான் துக்ளக் குருப் அதில் மாடரேட்டர்களாகவும் அட்மின்களாகவும் இருப்பவர்கள் டவுசர் பாய்ஸ் ஆட்களும் தங்களை உயர்சாதிகளாக கருதி கொள்பவர்களும்தான். அவர்கள் சோவின் படத்தையும் துக்களக்கின் பெயரையும் பயன்படுத்தி தங்களை நடுநிலையாட்களாக காண்பித்து வேஷம் போட்டு கொண்டிருக்கிறார்கள்.




அந்த குருப்பில் இடப்படும் என் பதிவுகள் அந்த குருப்பில் இருக்கும் மாடரேட்டர் மற்றும் அட்மின் பார்வைகளுக்கு பட்டு அவர்கள் அனுமதி அளித்தபின்தான் அங்கு வெளிவரும்...அப்படிதான் என் பதிவும் வெளிவந்தது.. அப்படி வந்த பதிவை படித்த பல டவுசர் பாய்களின் எதிர்ப்பால் அந்த பதிவு டெலீட் செய்யப்பட்டு இருக்கிறது...நடுநிலையோடு பதிவைவிடுபவர்கள் என்றால் அந்த குருப்பின் அட்மின்களால் அங்கரீக்கப்பட்ட பதிவை யாரோ சிலரின் எதிர்ப்புகளுக்காக அதை டெலீட் செய்வது ஏன்?
அவர்கள் அந்த பதிவை டெலீட் செய்தற்கு சொல்லும் காரணம் பலரும் அதை நாகரிகமற்ற பதிவு என்று இழி சொல் என்றும் பல "நல்ல" குடும்ப பெண்கள் வரும் க்ருப் என்றும் என் பதிவில் சேற்றை வாறி இறைத்துள்ளார் என்றும் அதனால் இது போன்ற பதிவுகளுக்கு இடமில்லை என்றும் மேலும் இது போல பதிவுகள் வந்தால் நான் ப்ளாக் செய்யப்படுவேன் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

படித்த உயர்சாதியினர் என்று கருதும் அந்த டவுசர் பாய்களிடம் ஒரு கேள்வி... கழிவறை ஆய்வாளர் என்பது ஒரு இழி சொல்லா என்ன? அதை ஆமாம் என்று நீங்கள் சொல்வதின்மூலம் உங்கள் மேல் சாதியினரின் உள்மனம் அம்மணமாக வெளியே தெரிகின்றதே.. ஒரு வேளை கழிவறை ஆய்வாளர் என்று சொலவதற்கு பதிலாக உங்கள் பாஷையில்  ஹெல்த் இன்ஸ்பெக்டர் என்று சொல்லி இருந்தால் ஒரு வேளை அது உங்கள் கண்களுக்கு தவறாக பட்டிருக்காதோ என்னவோ?

அட டவுசர் பாய்ஸ்களா ஆளுநருக்கு முட்டுகட்டை கொடுக்கும் உங்களுக்கு புரியவில்லையா ஆளுநரின் வேலை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஒழுங்காக செயல்படுகிறதா இல்லையா என்று பார்த்து மத்திய அரசிற்கு ரிப்போர்ட் செய்வதுதான் என்பது. அப்படி தனக்குரிய வேலையை செய்யாமல் கழிவறையை ஆய்வு செய்யப்போனால் அசிங்கப்படாமல் என்ன வேற என்ன செய்வார்.

உங்களின் கூற்றுப்படி மக்களின் நலனிற்காக ஆய்வு செய்யப் போகிறார் என்றால் கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வெள்ள நிவாரணப்பணிகள் சரியாக செய்படுகிறதா என்று அந்த பதிவில் நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.. அதுமட்டுமல்லாமல் ஆர்கே நகர் தேர்தலில் ம்ற்ற கட்சிகளோடு சேர்ந்து ஆளும் கட்சியும் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்கிறது என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது அதை ஆய்வு செய்து மத்திய அரசிற்கு ரிப்போர்ட் பண்ணலாமே அந்த் ஒரு காரணம் போதுமே கவர்னர் ஆட்சி வருவதற்கு.. அதை செய்யாமல் இப்படி செய்வது சரிதானா இந்த சிறிய விஷயம் கூட படித்த உயர் சாதியினரை சார்ந்த டவுசர் பாய்ஸ்களுக்கு தோண்றாதது ஏன்?
@avargalUnmaigal
ஆளுநரை கழிவறை ஆய்வாளர் என்று சொல்லுவது இழிவான சொல் .நாலு  நல்ல குடும்பத்திற்கு வந்து போகும் இடம் என்று சொல்லுபவர்கள் தலைவர் சுப.வீ அவர்களை இந்த குருப்பில் மிக அசிங்கமாக திட்டி ஒருத்தர் கருத்து இட்டு இருந்தாரே அதை நீக்காதது ஏன்? அது போல மோடி மற்றும் பாஜக தலைவர்கள் தவிர கலைஞர் மற்றும் பல தலைவர்களை இந்த குழுவில் இழிவாக பேசி பதிவிடும் போது அப்போது உங்கள் கண்கள் என்ன செய்து கொண்டிருந்தது ..அது போல சில தினங்களுக்கு முன் நான் இட்ட பதிவிற்கு பதில் கருத்தாக உங்கள் குருப்பை சேர்ந்த ஒருவர் பெண்ணின் அந்தரங்க உறுப்பை சொல்லி தீட்டி இருந்தாரே அதுமட்டுமல்ல அவரின் கருத்துக்கு கிழேயே பதில் கருத்து சொல்லிய உங்கள் அட்மினனை சேர்ந்த பெண் ஒருவர் பதில் கருத்து சொல்லி இருந்தாரே அவருக்கு அந்த அசிங்கமான கருத்து கண்ணில் தென்படவில்லையோ அதுமட்டும்  நல்ல கருத்தோ  நல்ல குடும்ப பெண்கள் வந்து போகும் இந்த குருப்பிற்கு அது எல்லாம் ஒகேதானோ..


மேலும் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் அவர்களை பற்றி ஒருவர் போட்ட பதிவிற்கு ஒருத்தர் அசிங்கமாக இட்ட பதில் கருத்தை இன்றைய தேதி வரை நீக்காத பண்பாண நல்ல குடும்த்தை சேர்ந்த மாடரேட்டர்களே உங்கள் குடுமி வெளியே தெரிகிறது முடிந்தால் அதை மறையுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : இந்த க்ருப்பில் உள்ள அட்மின்களில் உள்ள ஒருவர் எனக்கு இன்பாக்ஸில் சொன்னது இது. சார் எனக்கு உங்களின் பதிவுகள் பிடிக்கும் நீங்கள் சொல்வதை செவிட்டில் அறையும்படியாக சொல்கீறீர்கள் . நீங்கள் பல பதிவுகளில் நீங்கள் கேட்பது மிகவும் நியாயமாகவே படுகிறது என்று சொல்லி இருக்கிறார். அவர் மேலும் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் ப்ரைவேசி காரணமாக அதை இங்கு சொல்ல விரும்பவில்லை.


இப்படி சிலபேர் எனது இன்பாக்ஸில் வந்து சொல்லும் தகவல்கள்தான் என்னை இப்படி எழுத ஊக்குவிக்கிறது.. அந்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
16 Dec 2017

11 comments:

  1. I'm a silent reader of your blog for long time Mr.Madurai. You have all rights to comment & condemn whenever required. I encourage your sir..do your own way!!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் திரு.ரவி அவர்களுக்கு...
      இப்படி சைலண்ட் ரீடராக இருப்பது சரியா ? தங்களது கருத்தை பகிர்ந்தால்தான் என்ன ?
      (இயன்றவரை)

      Delete
    2. தமிழாக்கம் எப்படி இழிவாகும் ?

      Delete
    3. கில்லர்ஜி எனக்கு சைலண்ட் ரீடர்கள் அதிகம்...அப்படி இருப்பது தப்பில்லை....நாம் எழுது எல்லாவற்றிற்கும் கருத்துகளை சொல்ல அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.....சில ரீடர்கள் நமக்கு இமெயிலில் அல்லது இன்பாக்ஸில் தங்களது கருத்துகளை சொல்லுவார்கள்

      Delete

    4. நம்ம தமிழர்களிடம் ஒரு பழக்கம் உண்டு தமிழில் சொன்னால் அசிங்கம் என்றும் அதையே ஆங்கிலத்தில் சொன்னால் அது தப்பு இல்லை என்று.........உதாரணமாக யாராவது தமிழில் கெட்டவார்த்தைகளை உபயோகித்தால் இண்டீசண்ட் ஆள் என்றும் அதேயே ஆங்கிலத்தில் சொன்னால் நாகரிமான ஆள் என்றும் நினைக்கிறார்கள்

      Delete
    5. சரியான விளக்கம் நன்றி.

      Delete
    6. Thanks Killergee sir..I will do.

      Delete
  2. your comments should be neat and justice ,,,donot blame others

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எல்லாம் எவ்வளவு விளக்கம் சொன்னாலும் புரியாதுங்க.......நீங்க என்ன பண்ணுறீங்க இனிமே இங்கே இப்படி எழுதுவதை எல்லாம் வந்து படித்து கருத்து சொல்ல வேண்டாம் வேற வேலை ஏதும் இருந்தால் பாருங்க..

      Delete
  3. அச்சிலேற்ற முடியாத ஆபாச பின்னூட்டங்களை எனக்கு அனுப்புவதே டவுஸர் பாய்ஸ்தான்.
    நாகரீகத்தைப் பற்றி அவர்கள் வகுப்பெடுக்கிறார்களா?
    என்ன கொடுமை மதுரைத்தமிழன் சார் இது?

    ReplyDelete
    Replies
    1. டவுசர் பாய்ஸ் சொன்னா வேதம் சார் மற்றவர்கள் அதையே திருப்பி சொன்னால் ஆபாசம் சார் நான் இந்தியாவை விட்டு வந்த பின் இந்த பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்களின் மூலம்தான் மீண்டும் கெட்ட வார்த்தைகளை கேட்கிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.