பெரியார் இல்லையென்றால் தமிழகம் இப்படிதான் இன்று காட்சியளிக்குமோ?
பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்து விட்டார்கள்! #ஹெச்.ராஜா
ஆமாங்க அப்படி அறிவை மழுங்கடிக்கவில்லை என்றால் தமிழர்கள் இன்று இப்படிதான் காட்சி அழிப்பார்கள்
பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்து விட்டார்கள்! #ஹெச்.ராஜா
ஆமாங்க அப்படி அறிவை மழுங்கடிக்கவில்லை என்றால் தமிழர்கள் இன்று இப்படிதான் காட்சி அழிப்பார்கள்
கொசுறு :
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களில் இனி யாரையும் துன்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆமாம் அதனால காவல் நிலையத்திற்கு வெளியேவே அவர்களை துன்புறுத்திவிடுங்கள்
-----------------------------------
தலைவர் வரும் 19 ம் தேதி அன்று கன்னியாகுமரியில் புயல் பாதித்த பகுதிகளை சுற்றி பார்க்கிறார்!!!!
தலைவர் இப்பதான் வயசிற்கு வந்தார் அதனால்தான் லேட்டு சரி சரி இதுக்கு அப்புறம் வயசுக்கு வந்தா என்ன வரலனா என்னா என்று கேட்கும் சத்தம் எனக்கு கேட்கிறது ஆனால் அவருக்கு கேட்கவில்லையே
------------------------------------------------------
ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுக்காக்க வேண்டியது போலீஸீன் வேலை ஆனால் அந்த போலீஸின் வேலையை செய்து கொண்டிருப்பது திமுகவினர்.. இதையெல்லாம் தமிழக கவர்னர் ஆய்வு செய்யப் போகமாட்டார் ஏனென்றால் அவருக்கு அதைவிட முக்கியமான வேலைகள் இருக்கிறது..#வெட்ககேடு
---------------------------------------------------------------
பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்க்க மோடி வருகிறார். அவர் வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்.ராதா பார்வையிடுகிறார்..
அந்த பகுதியின் அமைச்சாரான பொன்.ராதா கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கான பாதுகாப்பை தான் அமைச்சாரான மூன்று ஆண்டுகாலத்தில் செய்து இருந்தால் இப்படி ஒரு பெரிய இயற்கை நிகழ்வு நடக்கும் போது மீனவர்களை காப்பாற்றி இருக்கலாம். இதை சொன்னால் இவன் ரொம்ப அதிகம் பேசுறான் என்று சொல்லுவாங்க
கோவாவில் விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருக்க ஆதாரைக் கட்டாயமாக்கிய புரோக்கர்கள்..
பணம் கொடுக்காமல் செல்வதைத் தடுக்க நடவடிக்கை.
ஆதார்கார்ட்டின் உபயோகம் இவ்வளவு கேவலமாக போய்விட்டதே
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆதார் மேட்டரை இரசித்தேன் தமிழரே..
ReplyDeleteஆதார் எதுக்குலாம் யூஸ் ஆகுது?!
ReplyDeleteஆதார் பற்றி அவதூறாகப் பேசக் கூடாது சப் ஜுடிஸ்
ReplyDeleteபடத்தில் இருப்பவர்கள் ஜைன(சமண) சாமியார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஒரு காலத்தில் தமிழகத்திலும் சமணம் கோலோச்சியது என்பது வரலாறு.
ReplyDelete