Thursday, December 7, 2017

அதிரா மற்றும் ஏஞ்சலிடம் வம்பு செய்பவனை தட்டி கேட்க இந்த பதிவுலகில் யாரும் இல்லையா??

தட்டி கேட்க யாரும் இல்லையா என்றுதான் படிக்கணும் வடை தட்டி கேட்க யாரும் இல்லையா என்றுபடிக்க கூடாது ஹீஹீ

அதிரா: மதுரைத்தமிழா நீங்க எப்ப பார்த்தாலும் என்னை தேம்ஸ் நதியில் குதிங்கோ குதிங்கோன்னு சொல்லுறீங்க. எனக்கு அதில் குதிக்க பயமில்லை ஆனால் குதிச்ச பின்  குளிரில் உடல் நடுங்குமோ என்று பயமாக இருக்கிறது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கோ அதன் பின் யான் குதிச்சிடுறேன்



மதுரைத்தமிழன்... அதிரா ரொம்ப ஈஸியான ஒரு ஐடியா  சொல்லுறேன்....இட்லி மாவு பொங்குறதுக்கு சுடு தண்ணி சுட வைச்ச மாதிரி ஒரு பெரிய அண்டாவில் தண்ணியை சுட வைச்சி அதை தேம்ஸ் நதியில் கொட்டிவிட்டு உடனே அதில் குதிச்சுடுங்க அப்படி செஞ்சால் உங்கள் உடல் குளிரில் நடுங்கவே நடுங்காது



ஏஞ்சல் : ஹாஹஹஹா

அதிரா :ஏய் உன்னனாலதான் இவர் என்னை இப்படி கிண்டல் பண்ணுறார். நீ மட்டும் மாவு பொங்குறதுக்கு சுடுதண்ணி வைச்ச கதையை சொல்லாமல் இருந்திருக்கலாமே... பாரு உன்னை இப்ப அவருகிட்ட மாட்டி விடுறேன்... மதுர தமிழா இவ என்ன செஞ்சா தெரியுமா?


மதுரைத்தமிழன்... அதிரா நீங்க என்ன சொல்ல போறீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும் இட்லி சட்டியில் ஊத்தாப்பம பண்ணி ராமசேரி இட்லி சொன்ன ஆளாச்சே ..
அதிரா : ஹாஹாஹஹாஹ்.

ஏஞ்சல் ஏய் ரொம்ப சிரிக்காதே அப்புறம் சகோவிடம் சொல்லி உன்னை தேம்ஸ் நதியில் தூக்கி போட சொல்லிருவேன்

மதுரைத்தமிழன்: அதுமட்டும் என்னால முடியாது..
அதிரா :பார்த்தியாடி அவருக்கு என் மேல் எந்தளவு பாசம் இருந்தால் இப்படி முடியாதுன்னு சொல்லுவாரு

மதுரைத்தமிழன்: அப்படி  பாசம் எல்லாம் கிடையாது.

அதிரா: அப்படின்னா ஏன் என்னை தூக்கி போட மாட்டேன் என்று சொன்னீங்க: அது என் மீது வைத்துள்ள பாசத்தினாலேதானே

மதுரைத்தமிழன்; அதுவா........ நான் அப்படி உங்களை தூக்கி போட்டால் இந்த மீடியாகாரங்க தமிழன் தேம்ஸ்நதியில் குண்டை போட்டான் என்று சொல்லி அதை வரலாற்று செய்தி ஆக்கிவிடுவார்கள்.

ஏஞ்சல் ; ஹாஹஹஹா

அதிரா ஏய் சிரிக்காதடி நீயும் குண்டுதான் அதனாலதானே தினமும் வாக்கிங்க் போகிற...

ஏஞ்சல் நான் குண்டு இல்லடி கொஞ்சம் பூசணப்பல இருக்கிறேன்...

அதிரா.. ஏய் நீ பூசணப்பல இல்லை பூசணிக்காயாக இருக்கிறே அதை எப்படி பூசி மழுப்புற


மதுரைத்தமிழன்; ஏஞ்சல் நீங்கள் தினமும் வாக்கிங்க் போனால் நிச்சயம் குறைஞ்சிருக்குமே

ஏஞ்சல் ; ஆமாம் மதுரை தமிழன் நான் 4 பவுண்டு குறைஞ்ச்சிருக்கேன்..

மதுரைத்தமிழன் : ஏஞ்சல் நான் குறைஞ்சிருக்குமே என்று சொன்னது ரோட்டைதான் நீங்க நடந்து நடந்து அந்த ரோடு தேய்ந்து அதன் ஹைட் குறைஞ்சு பள்ளமாகி இருக்குமே அதை சொன்னேன்.

அதிரா : ஹாஹாஹா ஹீஹீஹீ  ஏஞ்சல் : க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மதுரைத்தமிழன் : ஏஞ்சல் இதுக்கெல்லாம் கோச்சுகாதீங்க நீங்க மட்டுமல்ல எல்லோரும் எடை குறைய வாக்கிங் போக வேண்டியதில்லை. வாயை கட்டினாலே போதும்...எடை தண்ணாலே குறைந்திடும் அப்படி வாயை கட்டாவிட்டால் தட்டில் உள்ள உணவின் எடை குறைந்து நம் உடலின் எடை கூடிவிடும்

அதிரா : மதுரைத்தமிழா எனக்கொரு டவுட் சாப்பிட்டதற்கு அப்புறம்தானே வாயை கட்டணும்

கீதா : என்ன இங்க சாப்பாடு, வாய் ,சுடனும் என்று ஒரே சத்தமாக இருக்கு மதுரைத்தமிழன் போட்டிக்கு ஏதாவது வடை சுட்டுட்டு வந்திருக்கிறாரா என்ன?

அதிரா & ஏஞ்சல் கோரஸாக : வாயிலதான் மதுரைத்தமிழன் வடை சுடுவாரு அவரு சுத்த வேஸ்ட்

கீதா :ஹாஹாஹஹா என்று சிரித்து கொண்டே பாவம் நம்ம மதுரைத்தமிழன் விட்டுங்க...அவர் நல்லா சமைப்பார்.அதிரா நீங்க அரைக்கும் இட்லி மாவு பொங்குறதில்லை என்று சொல்லிறீங்களே நம்ம மதுரைத்தமிழனிடம் கேளுங்க அவர் இட்லிமாவு பொங்க நல்ல டிப்ஸ் சொல்லுவார்

அதிரா: அவர்கிட்ட கேட்டால் இட்லி மாவு கரைக்கும் போது மோடி மோடின்னு சொல்லிகிட்டே இருந்தால் பொங்கிடும் என்று சொல்லுவார் ஆளைவிடுங்க சாமி

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : அதிரா கீதா ஏஞ்சல் யார் என்று தெரியாதவர்களுக்கு..இந்த பதிவில் வரும் அதிரா ,ஏஞ்சல் இருவரும் லண்டன் வாசி தமிழ்பெண்கள்& தமிழ் பதிவர்கள். இரண்டு பேரும் கொஞ்சம் பூணிற்போலதான் இருப்பார்கள் ஆனால் குண்டு அல்ல.. ஆனால் அவர்கள் இருவரும் நயன்தாராவிற்கு அருகில் இருந்தால் பார்ப்பதற்கு குண்டாக தெரிவார்கள்..காரணம் நயன் தாரா கொஞ்சம் உயரமானவர் அதனால்தான். கீதா சென்னைவாசி தமிழ் பதிவர்.

மேலே உள்ள பட ஜோக்கிற்கும் ஏஞ்சலின் ராமசேரி இட்லிக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னால் யாரும் நம்பவா போறீங்க


73 comments:

  1. நகைச்சுவை நன்று

    ReplyDelete
    Replies
    1. அதிரா ஏஞ்சல் கீதா நல்லா கவனிச்சுக்குங்க நம்ம புலவர் ஐய்யாவே நான் உங்களை கலாய்த்தது நன்று என்று சொல்லிட்டார்...ஹீஹீ இனிமே உங்களை விடக் கூடாது அதகளம் பண்ணிட வேண்டியதுதான்... அப்படி பண்ண வேண்டாம் என்றால் அதிரா தன் வைர நெக்லைஸை எனக்கு அனுப்பிவிட வேணுமாக்கும்

      Delete
    2. நெக்லெஸ் ஐ ஆருக்கு கட்டப் போறீங்க???? :) உங்களுக்கு வீட்டில boy friend தானே இருக்கு:).. அடிக்கடி ஐ லவ் யூ வோ என்னவோ சொல்லுவீங்களே அவருக்கு:).. நயந்தாராவுக்கு குடுக்கும் ஐடியாவோ?:)

      Delete
    3. உங்க கனவு காதலன் டிரெம்ப் பொண்ணு இவாங்காவுக்குதான்தான் என் நீயூ கேர்ள் பிரெண்ட் அவங்களுக்குதான் தரலாம் என நினைக்கிறேன்

      Delete
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவர் அங்கிள் எனக்கு:))

      Delete
  2. ஹா ஹா ஹா ஹா ஹா மதுரைத் தமிழா கலக்கிட்டீங்க போங்க...

    ...என்னதான் நான் அதிராவுக்கு மதுரைகிட்ட கேளுங்கனு சொன்னாலும் ... இதோ நான் வந்தாச்சு உங்களைத் தட்டிக் கேட்க...என் தோழிகளை இப்படியா கலாய்ப்பது இருங்க ...

    கீதா

    ReplyDelete
    Replies


    1. தமிழ்நாட்டுல டாஸ்மாக் அதிகமாக இருந்தாலும் இருந்துச்சு அதனாலதான் என்னவோ தமிழர்கள் எல்லோரிடமு இந்த கலக்கிட்டீங்க வார்த்தை ரொம்ப அதிகமாக வருகிறது

      Delete
  3. அதிராவின் டயலாக்கில் "சாமி" என்று சொன்னது பிழை...."ஜாமி" என்று வரணுமாக்கும்....ஹா ஹா ஹா...

    அதிரா சொல்றாங்க...என்ன கீதா நீங்க மதுரையை வடை தட்டற மாதிரி தட்டிப் பொரிப்பீங்கனு பார்த்தா அவருக்கே பொறுக்கி எடுக்கிக் கொடுக்கறீங்க...மீ தேம்ஸில் குதிக்கப் போறேன் என்று சொல்லி என்னை அடிக்க வரார்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதிரா ஸ்டைலில் எழுத ஒசைதான் ஆனால் அதற்கு அதிரா மாதிரி நாம ரொம்ப ஒறிவாளியா இருக்கணும்

      Delete
    2. ஆமாம்மா :) சுடுதண்ணியால் தோசை மாவு கரைச்சவர் ,கிச்சனுள்ளேயே சன்ப்ளவர் செடி வளர்ந்தவர் ஆச்சே

      Delete
    3. ஒன்னொண்ணையும் சேர்த்துக்கோங்க ட்றுத்:)... ரொம்ப ஒல்லியாகவும் சுவீட் 16 ஆகவும் இருக்கோணும் என:)..

      Delete
    4. deuteranomaly and protanomaly மாதிரி நம்ம மியாவுக்கு ம் ட்ரூத்துக்கும் numeronomaly :))
      எப்பவும் 61 ஐ 16 னே :)) சொல்றாங்க

      Delete
  4. ஏஞ்சல், அதிரா மதுரை நல்லா சமைப்பார்ன்றதை அவர் சொல்லிருந்தார் அவர் மாமனார் மாமியாரையே மயக்கிட்டதாக....பாவம் அவங்க...மாப்பிள்ளை இல்லையா....மறு பேச்சு பேச முடியுமா?!! ஹா ஹாஅ ஹா ஹா...நாம மதுரை வீட்டம்மாவிடம் கேட்டுருவோம்..உண்மை தெரிஞ்சுரும்....என்ன சொல்றீங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னது என் வீட்டுகாரம்மாவிடம் கேட்க போறிங்களா? கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.... ஹலோ நான் இதை உதாரணத்திற்கு சொன்னேன் ஆனால் அதை புரியாமல் என் மனைவியை கழுதைன்னு சொன்னதாக புரளியை கிளப்பிவிட்டுடாத்தீங்க... அதற்கு அப்புறம் அவர் உண்மையிலே கழுதை மாதிரி என்னை உதைக்க ஆரம்பித்துவிடுவார். என் மனைவி அதிரா மற்றும் ஏஞ்சல் மாதிரி உடனே அவங்களை மாதிரி குண்டா இருப்பாங்களா என்று எல்லாம் குறுக்கே கேளிவி எல்லாம் கேட்கப்ப்டாது கீதா. அவங்களை மாதிரின்னா கண்டை இலைதழை காய்கறிகளை மிக்ஸியில் போட்டு அரைத்து குடிக்கும் க்ருப்பை சார்ந்தவர் அப்படிபட்டவங்ககிட்ட என் சமையல் பற்றி கேட்டால் நல்லா இருக்கு என்றா சொல்லுப் போறாங்க

      Delete
    2. நாங்கல்லாம் ஹெல்த்தியா இருக்கோம்னு உங்களுக்கு பொர்ர்ராமை ::)

      Delete
  5. Replies
    1. இன்பாக்ஸில் பேசாமல், மனதில்பட்டதை அதுவும் பெண் தோழிகளிடம் களங்கமில்லாமல் பொது வெளியில் பேசி கலாய்த்தால் டூ மச் இல்லை நண்பா....அதாவது தப்பு இல்லேன்னு சொல்லுறேன்

      Delete
    2. அக்கா ..டாம் அன்ட் ஜெரி மாதிரி அப்பப்போ டைம் டேபிள் போட்டு ஆளாளுக்கு காலை வாரி விட்டுப்போம் :)

      Delete
    3. ஆமாம் கார்த்திக் அம்மா நாங்க ஒருத்தரை ஒருத்தர் இப்படிதான் காலை வாரிக் கொள்ள முயற்சி செய்வோம் ஆனால் பாருங்க இவங்க எல்லாம் என்னை ஈஸியாக காலை வாரி விட்டுடுவாங்க ஆனால் இவங்க காலை வார முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நீண்ட காலமாக ஹும் அசைக்கவே முடியவில்லை இவங்களை... இவங்க எல்லாம் ரொம்ப வெயிட்டா ஸ்ராங்காக இருக்காங்க எனக்கு மூச்சு தள்ளது கண்ணு பிதுங்குது ஹும்ம்ம்

      Delete
  6. அதிரா, ஏஞ்சல் மதுரைக்கு வீட்டுல பூரிக்கட்டை அடி வாங்கி ரொம்ப நாளாச்சு போல...போரடிக்குதான் அதான் நம்மகிட்டருந்து வாங்க இப்படி வம்பு...சீக்கிரம் வாங்கப்பா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. யாரை போய் சிக்கிரம் வாங்க என்று கூப்பிடுறீங்க கீதா இரண்டு தேரும் அசைஞ்சு வருவதற்குள்ள நான் அடுத்த பிறவி எடுத்துவிடுவேன் ஹீஹீ

      Delete
    2. அது வயசானாலே அடுத்த பிறவி நினைவு வருவது நோர்மல்தானே ட்றுத்:)..

      Delete
    3. சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க இதற்குதான் ஸ்வீட் 16 ஆகிய நான் வயசானவங்ககூட தோழமையா பழகக்கூடாது பாருங்க...உங்ககூட சேர்ந்ததுனாலதான் இப்படி மறுபிறவி எண்ணம் உங்ககிட்ட இருந்து எங்கிட்ட தொற்றிகிச்சு

      Delete
  7. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சூ கீதா எல்லோரும் ஓடிவாங்கோ.. ஒரு ஸ்பெஷல் கிரைன் க்கு ஓடர் பண்ணி, நயந்தாராவைக் காட்டுறோம் வாங்கோ எண்டால், மேக்கப் போட்டுக்கொண்டு ஓடிவருவார்.. அப்பூடியே நயகராவைக் காட்டிடலாம்:)

    ReplyDelete
    Replies
    1. அதிரா மேலே பாருங்கோ உங்கட வார்த்தையை அவர் தப்பா எழுதிருக்கார்!!!

      கீதா

      Delete
    2. நான் பயன்படுத்தும் மென்பொருளில் ர் என்றுதான் டைப்பண்ண முடிகிறது அதிராவின் ர் டைப்பண்ண வசதியில்லை அதனாலதான் இப்படி

      Delete
  8. நம்மை நாமே புகழ்ந்தால்தான் உண்டு:) அதுபோல தட்டிக் கேய்ப்பதும் எங்களை நாங்களேதான் தட்டிக் கேட்கோணும்:).. அதால எங்க தட்டிட்டுக் கேட்கோணும் எனச் சொல்லுங்கோ ட்றுத்.. நாங்களே தட்டிட்டுக் கேட்கிறோம்ம்:))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ஒரு பேச்சுக்குதான் தட்டி கேளுங்க என்று சொன்னது அதற்காக உண்மையிலே "தட்டி' னால் நான் அப்பளம் மாதிரி நொறுநிடுவேன் ஏனென்றால் நான் அவ்வளவு ஸ்டாராங்காக்கும்

      Delete
  9. டிஸ்கியில் இருப்பதில் பாதிதான் கரீட்டு:).. பொருட்பிழை இருக்கூ:) அதாவது அஞ்சு பூசணி போலவும்.. அதிரா பயற்றங்காய் போலவும் இருப்பா என போடோணும்:).. எடிட் பண்ணிடுங்கோ நா ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்:))..

    ஆமா ஆமா ஜோக்குக்கும்...ராமசேரி இட்லிக்கும் சம்பந்தமே இல்லை:) ஏனெனில் அஞ்சு செய்தது.. ஊஊஊஊத்தப்பமாச்சே:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:)).

    ReplyDelete
    Replies
    1. இது ஏஞ்சலின் ஊத்தாப்பாம் என நான் சொல்லவில்லை அதனால்தான் அதற்கு சம்பந்தமில்லை என்று சொன்னேன். இது ஏஞ்சல் வூட்டுகாரர் ஏஞ்சலின் சமையல் குறிப்பை பின் பற்றி எனக்கு தோசை சுட்டு தரும் காட்சியைத்தான் படத்தில் பார்கிற்ரீங்க

      Delete
    2. தோசை சுட ட்ரெயினிங் கொடுத்ததுக்கே நீங்க எனக்கு பாராட்டு விழா எடுக்கணும் :)

      Delete
  10. கர்ர்ர்ர்:) நீங்க போட்டிருக்கிற படத்தில் ரெண்டு ஆண்கள்தானே இருக்காங்க :) ஒன்னு நீங்க இன்னொருத்தர் யார் ?))

    ReplyDelete
    Replies
    1. அது நம்ம வூட்டு மாப்பிள்ளை அதுதான் உங்கவூட்டுகாரர்ம்மா

      Delete
  11. ஸ்ஸ்ஸ் :) குளிரில் நடுங்கினா தேம்சுக்கு பக்கத்தில் camp fire போட்டு தண்ணில குதிச்சி அப்புறம் இதில் ஜம்ப்ப சொல்லுங்க :) குளிரே தெரியாதது :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் அதை விட தெர்மல் வெயர் போட்டுக் குதிச்சா??!!! ஆ ஆ ஆ வெயிட் கூடிடுமோ?!!!! ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      Delete

    2. அதிரா இவங்களை போய் உங்களின் உண்மை தோழிகள் என நினைக்கிறீங்க பாருங்க அது ரொம்ப தப்பு எனக்கு மேலே போய்ய் ரொம்ப ரரொம்ப நல்ல ஐடியாவா தருகிறாங்க ஹீஹீ சூப்ப்ர ஐடியா

      Delete
  12. கர்ர்ர் :) என் ராமசேரி இட்லிசை யாரும் கிண்டல் செய்ய கூடாது போஸ்ட் போட்ட அன்னிக்கே 1800 வியூஸ் வித்தின் 3 hours தெரியுமோ :))

    ReplyDelete
    Replies


    1. ஜெயலலிதாவிற்கு லண்டன் டாக்டர் கொடுத்த இட்லி பலரும் சர்ச் செய்யும் போது லண்டலில் இருந்து நீங்கள் போட்ட இட்லி சமையல்குறிப்பு பலரின் ரிசல்டாக வந்ததால் உங்களுக்கு அதிக ஹிட் கிடைத்தது என்று கூகுல் நிறுவன செய்தி பிரிவு சொல்லுகிறது

      Delete
    2. அவ்வ்வ் :) ஏர்போர்ட்டில் இறங்கினதுமே என்னை ஹாஸ்பிடல் அனுப்ப பிளான் வச்சிருக்கார் கனம் கோர்ட்டார் அவர்களே :)

      Delete
  13. ஹலோ ட்ரூத் எனக்கு நேற்று ஒரு கனவு வந்தது ப்ளூ ஜீன்ஸ் டிசர்ட் போட்டு ஒருத்தர் ஹான்ட் கிரெனெட் எடுத்து வீசி வீசி அடிக்கிறார் அதிரா வீட்டு பக்கம் :) அது நீங்கதானே :) எனக்கு தெரியும் அந்த கம்பு தோசை effect :))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா நான் அது ஷாட்புட் நு நினைச்சேன் ஏஞ்சல்!!!

      கீதா

      Delete
    2. ஐ மீன் அந்தக் கம்பு தோசை!!!

      கீதா

      Delete

    3. கீதா அது கிரெனெட்டும் அல்ல சாட்பூட்டும் அல்ல தீபவாளிக்கு நீங்க எனக்கு அனுப்பிய மைசூர்பாகுதான் சமயத்திற்கு உதவும் என்பதால் நான் பத்திரமாக வைத்து இருந்தேன். ஏஞ்சல்தான் அதிரா வீட்டு பக்கம் ஆனை ஒன்று சுத்துன்னு அதனால் இந்த மைசூர் பக்கை எடுத்து ஆனை மீது வீசினேன் ஆனை தப்பிவிட்டது உஷ் அந்த ஆனை அதிராவா என்று கேட்டால் நான் சத்தியமாக உண்மையை சொல்ல மாட்டேன் ஹீஹீ

      Delete
  14. இங்கே பாருங்க :) எல்லாருக்கும் சொல்லிட்டேன் நான் என்னோட லேட்டஸ்ட் போட்டோவை போட்டுடுவேன் சொல்லிட்டேன் :)
    அப்புறம் மதுரை தமிழன் அதிராலாம் பொறாமையில் மையக்கம் போட்டு விழுந்தா நானா பொறுப்பில்லை :)

    ReplyDelete
    Replies
    1. போட்டோவை போடுறதுக்கு முன்னால் எனக்கு அனுப்புங்க அதை பார்த்துட்டு சொல்லுறேன். இல்லைனேன்னா இன்னொரு வம்பி பதிவு வெளியிட வேண்டி இருக்கும்

      Delete
  15. கர்ர்ர்ர் :) அந்த டிஸ்கியில் இன்னும் ரெண்டு வரி சேர்க்கணும் ..நானா இரண்டு வருஷத்துக்கு முந்தி கொஞ்சம் பூசினாப்ல தான இருந்தேன் அப்புறம் நடை நடைன்னு நடந்து டயட்டிங்க்லாம் இருந்து எங்க ஏரியா ரோடையும் என் உடம்பில் பாதியையும் குறைச்சிட்டேனே :) ஹெல்த் இஸ் வெல்த் :)
    அப்புறம் உங்க பாசத்தை கண்டு மெய்மறந்து போனேன் ட்ரூத் நண்பா :) இனிமே என்ன புது ரெசிப்பி செஞ்சாலும் உங்களுக்கு டெஸ்டுக்கு டேஸ்ட்டுக்கு முதல் போர்ஷன் DHL இல் அனுப்பிட்டுதான் மாரு வேலை :) இது அதிரா விழாத அந்த தேம்ஸ் நதி மீது யானை நோ :) ஆனை :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா சரி சரி மதுரைய இனி நம்ம கினி பிக் னு சொல்ல வரீங்க அதானே!! ரைட்டோ!!!!

      கீதா

      Delete
    2. ஏங்க ஒரு நகைச்சுவைக்காகதானே இப்படி ஒரு கீண்டல் பதிவு போட்டேன் அதற்காக நீங்க சமைச்சதை எனக்கு டெஸ்டுக்காக கொடுத்து என்ன சாக அடிக்க முயற்சி பண்ணுவீங்க என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.. என்னை நம்பி ஒரு வாயில்லா ஜீவன் அதுனானுங்க என் நாய்குட்டி இருக்கிறது அதற்காகவிட்டுங்க,,,

      Delete
    3. ஹலோ அப்படிலாம் சீரியஸா யோசிக்க கூடாது :) என் வீட்டு கினி பிக்ஸ் லேப் எலிகள் சந்தோஷமா ஹெல்தியா உலவிக்கிட்டிருக்காங்க :)
      ஒன்னும் ஆகாது டோன்ட் worry :)

      Delete
    4. ஸ்ஸ்ஸ் நீங்க எங்க வேணுமெண்டாலும் டச்சு பண்ணுங்கோ ஆனா என் தேம்ஸ்ல மட்டும் டச்டு பண்ணக்குடா கர்ர்ர்ர்:).. ஆனையாம் ஆனை:)..

      Delete
    5. நான் இந்த பூனைகள் கிட்ட மாட்டி முழிக்கிறதுமாதிரி ஏதோ எலியும் இந்த பூனைகள் கிட்ட மாட்டி இருக்கிறது போல அனிமல் கண்ரோலுக்கு போன் பண்ணி சொல்லவிட வேண்டியதுதான்

      Delete
  16. ம்ம்.... எப்படி எல்லாம் வண்டி ஓடுது...... ரசித்தேன் தமிழரே...

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு அப்புறம் வண்டியை ஒரு மாற்று பாதையில் ஓட்டிபார்த்தேன் ஹீஹீ

      Delete
  17. சந்தானம் பாஷையில் சொல்லணும்னா "செம கலாய்... செம கலாய்...."

    ReplyDelete
    Replies
    1. அதிரா பாஷையில் எப்படி இருக்குன்னு நேரம் இருந்தா சொல்லுங்க

      Delete
    2. அதிரா எங்க சிங்கம்(ஸ்ரீராம்) உறங்கப் போயிடுத்துன்னு நினைக்கிறேன்...அதனால நீங்க தப்பிச்சீங்க

      Delete
    3. மதுரை என்னைக் கேட்ட கேள்விக்கு நான் சொல்லும் முன் அதிராவே வந்து விடையை வெளியிட்டமைக்கு என் வன்மையான மகிழ்ச்சிகள்!

      Delete
  18. Replies

    1. ஏஞ்சல் அதிரா கீதா உங்களை கலாய்த்து எழுதிய பதிவை வெங்க்ட் மட்டுமல்ல ஸ்ரீராம் கில்லர்ஜி புலவர் மீரா செல்வக்குமார் எல்லோரும் ரசிச்சு இருக்காங்க இப்படியே தொடர்ந்து கலாய்த்தால் எனக்கு ஆதரவு அதிகமாகிவிடும் போல அதற்கு அப்புறம் நானும் தமிழ் நாட்டு தேர்தல நிக்கலாம் போல இருக்கே

      Delete
    2. உங்க ஆசை நிறைவேறணும்னா நான் டெய்லி ஒரு சமையல் குறிப்பு போட்டே ஆகணும் :)
      டீல் :)

      Delete
    3. நான் ஆட்சிக்கு வந்தால் நீங்கதான் உணவுதுறை அமைச்சர்

      Delete
  19. அது ஒன்றுமில்லை கீதா, அஞ்சு...
    ட்றுத்துக்கு புகையை அடக்க முடியல்ல:)...
    அதாவது அன்று 4 பூஸ்குட்டிப் படங்கள் போட்டு நாங்க கேள்ஸ் ஒன்றாயிருக்கிறோம் என சொன்னதிலிருந்து ட்றுத்தின் நித்திரை போச்ச்ச்ச்ச்ச்:)...
    அதுதான் கிட்னியை ஊஸ் பண்ணி நம்மைப் பிறி:)ப்பதற்கு முயற்சிக்கிறார்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்:)... நயகராவில் தள்ளும்வரை அடங்கவே மாட்டார் போலிருக்கே:)...

    ReplyDelete
    Replies
    1. Grandma வை Girls என்று அழைக்கும் வழக்கம் தேம்ஸ்நதிக்கரை வழக்கமா என்ன?

      ஒருத்தன் ஸ்வீட் 16 ஆக இணையத்தில் வலம் வந்தால் நாலு பாட்டிம்மாக்கள் இங்கே Girls என்று சொல்லி மயக்கப்பார்க்கிறாங்க ஹும்ம் என்னதை சொல்ல காலம் மாறி போயிடுச்சு....நல்லபையானக இருந்தால் ஆபத்துதான் போலிருக்கு

      Delete
  20. ஏதோ நானும் ரெளடிதான் ரேஞ் க்கு ஹெடிங் போட்டிருக்கிறாரே:).... அஞ்சூஊ கீதாஅ வாங்கோ... அதாரது நம்மோடு வம்பு பண்ணுபவர் என தேடிக் கண் டு பிடிப்போம்ம்ம்:)...

    ReplyDelete
    Replies
    1. அவாளெல்லாம் தூங்கப் போனதற்கு அப்புறம் தனியா சவுண்டு வுட்டுகிட்டு இருக்கிற ரவுடியா நீங்கள்

      Delete
  21. அடக்கடவுளே அஞ்சு, அதிரா நான் எதுவுமே படிக்கலை விடுங்க ஆமாம்

    ReplyDelete
  22. ரொம்ப நாளேச்சேனு காலடி வச்சவுடனே நம்மாளுங்க பேரை பார்க்கவும் படிக்காமல் நகர முடியவில்லை.ஏஞ்சலின் அதிரா இங்கே நடமாடுவதில் கோபப்படுவதா,சந்தோசஷப்படுவதானே தெரியலயே

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் இங்கே வருவதில் கோபம் எத்ற்கு வரணும்?

      Delete
    2. அவர்கள் இங்கே நடமாடவில்லை... நடனமாடி கொண்டிருக்கிறார்கள் அதுவும் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் உலகின் பல பகுதிகளில் நில நடுக்கம் ஏற்படுகிறது என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.