Thursday, December 21, 2017

மனைவியை எப்படி எல்லாம் ஏமாத்துகிறார்கள் இந்த ஆண்கள்

என்னங்க இந்த புடவை அழகாக இருக்கா? சூப்பரா இருக்கும்மா...ஆமாம் என்ன விலை? 20 ஆயிரம்தானுங்க... அப்ப நன்னாவே இல்லை

ஏய் இந்தா உனக்கு புடவை வாங்கி வந்திருக்கிறேன்.... வாவ் ரொம்ப அழகாக இருக்குங்க ஆமாம் என்ன விலை 2000 ருபாய்  அப்ப இது
நன்னாவே இல்லீங்க

சரி சரி உனக்கு பிடிக்கலைன்னா வேலை காரிக்கு கொடுத்துவிடு.. ஒகேங்க

வேலைக்காரியிடம் ஹீஹீ என் மனைவி புது சேலையை உங்கிட்ட தந்து இருப்பாளே நான் உனக்காக 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன் ஆனால் என் மனைவிகிட்டே அதன் விலை 2000 என்ரு சொன்னதும் அது நல்லா இல்லைன்னுட்டா எனக்கு தெரியும் அது கண்டிப்பாக உனக்கு வரும் என்று ஹீஹீ

இப்ப பாரு  2000 ரூபாய்க்கு வாங்கிய சேலையை 20 ஆயிரத்திற்கு வாங்கியது என்று என் மனைவியிடம் சொல்ல போறேன் அவளுக்கு அது மிகவும் பிடிக்கும் என்ன உனக்கு வாங்கிய சேலையின் பில்லை அவளிடம் காண்பிக்கணும் அவ்வளவுதான்



டிஸ்கி : என் வீட்டில் வேலைக்கு ஆள் கிடையாது....

டிஸ்கி 2: இந்த பதிவின் தலைப்பை பார்த்து படிக்க வந்தவர்களை இப்படி பிரிக்கலாம்தானே:

மனைவியை எப்படி ஏமாற்றுகிறார்கள் அதை தெரிந்து நாமும் அதை போல ஏமாற்றலாமே என்று ஆண்கள் நினைத்து  வந்து இருக்கலாம்.
மனைவியை எப்படி ஏமாற்றுகிறார்கள் அதை தெரிந்து நம் கணவரும் அப்படி ஏமாற்றுகிறார்கள் என்று கண்டுபிடிக்க  நினைத்து பெண்கள் வந்து இருக்கலாம்..

மோடி பக்தர்கள் இவன் நிச்சயமாக மோடியை வச்சுதான் கிண்டல் பண்ணி இருப்பான் அதனால இவனை நல்லா திட்டிட்டு போவோம் என்று வந்து இருக்கலாம்


ஆனால் வழக்கமாக வரும் நம் பதிவுலக நண்பர்கள் இந்த கிறுக்குபயபுள்ள என்ன கிறுக்கி இருக்கிறான் என்று நினைத்து வந்து இருக்கலாம்


ஆனால்  அரசியல் பதிவுகளுக்கு சில காலம்  அதாவது ஒரு வாரமோ அல்லது மாதமோ இடைவெளி கொடுத்து வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் என்று  நான் முடிவு செய்ததால் இந்த மாதிரி பதிவுகள் வரலாம் ஹீஹீ எது எப்படியோ அனுபவியுங்கள்




அன்புடன்
மதுரைத்தமிழன்

22 comments:

  1. நான் எதற்கு வந்தேன் என்றால் 'மதுரை என்ன சொல்லி மனைவியை ஏமாற்றி வருகிறாரோ' என்று தெரிந்து கொள்ளலாம் என்கிற ஆவலில்தான்!

    ReplyDelete
    Replies

    1. உஷ்ஷ்ஷ்... ஸ்ரீராம் ஒருத்தர் போதும் என்னை மாட்டிவிட.....முதலில் வந்து கருத்து சொல்லி என் டவுசரை அவிழ்த்து விட்டு போயிட்டாரே

      Delete
    2. ஹா ஹா ஹா சத்தியமா நானும் ஸ்ரீராம் நினைச்சதையே நினைச்சு வந்தேன்ன் ஹையோ ஹையோ:))..

      ஏதோ எல்லோரும் மனைவியை ஏமாத்த வழி தெரியாமல் துடிப்பதுபோலவும்:).. அதை இவர் சொல்லிக்கொடுப்பது போலவும் ஒரு நினைப்பு:) கர்ர்ர்ர்:))..

      Delete
    3. நல்லவேளை முதலில் ஸ்ரீராம் வந்து கருத்து போட்டதற்கு அவருக்கு என் நன்றி ஒருவேளை அவர் போடாமல் அதே கருத்தை நினைத்த அதிரா போட்டு இருந்தால் மானம் போயிருக்கும்....

      Delete
    4. இதற்கு முதல் கமெண்ட் சின்ரோம் என்று பெயர்!

      Delete
    5. நீங்க எல்லாம் என்ன சொல்லி ஏமாத்திருக்கார்னு வந்தீங்க இல்லையா...மதுரையைத் தெரியாதா...ஸோ உடனே செய்தி அனுப்ப வேண்டி படிக்க வந்தேன்.....ஹிஹிஹி அடுத்து என்ன அடி வானப் போறாரோ..

      அதிரா உங்களைக் காப்பாத்த வேண்டாம் (கீழ உங்க கமென்ட் பார்த்து) நாம இப்ப மதுரையைத்தான் காப்பாத்தணும்...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  2. அனுபவிச்சேன் இந்த வேதனையை...

    ReplyDelete
  3. ஏமாத்தோணும் என நினைப்போருக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.. அதே நேரம், ஏமாத்திடக்கூடாது என வாழ்வோருக்கு ஆர் என்ன தேன் போட்டுச் சொல்லிக் குடுத்தாலும் ஏமாத்த மாட்டினம்:)..

    எந்தக் கணவனும்..
    எந்த மனைவியும்
    நல்லவர்கள்தான்
    திருமணமாகையிலே..
    ஆனா அவங்க
    நல்லவராவதும்
    கெட்டவராவதும்..
    ட்றுத்தின் போஸ்ட் படிச்சே...:)
    ஹையோ இன்று எனக்கு 7.5 நடுக்கூறு ஆரம்பமாமே வைரவா என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்:))..

    ReplyDelete
    Replies
    1. என்னாதுதுது......உங்களுக்கு ஏதுவும் சொல்லிதர தேவையில்லையா?

      Delete
  4. நான் வந்தது மதுரை தமிழன் என்ன மொக்கை போட்டிருக்கார்ன்னு பார்க்கதான்

    ReplyDelete
    Replies


    1. சகோவிற்கு சகோவை பற்றி நல்லா தெரிஞ்சிருக்கிறது

      Delete
  5. நான் வந்தது க்றிஸ்மஸுக்கு ஏதாவது ஈஸி ரெசிப்பி போட்டீங்களான்னு பார்க்க ..உனகள்கிட்ட ஒன்னு சொல்லணும் தினமும் பாசிப்பருப்பு புடலங்காய் word சேர்ச் செஞ்சி என் பிளாக்குக்கு உங்க ரெசிபியை பார்க்க நிறைய விசிட்டர்ஸ் வராங்க :)

    நீங்க என்ன ஏமாத்திடப்போறீங்க அதிகபட்சம் மீன்குழம்ப செஞ்சி கராஜில் ஒளிச்சி சாப்பிடுவிங்க :) அதுக்கு மேலெல்லாம் என் ப்ரெண்ட் செய்ய மாட்டார்னு நம்பிக்கை எனக்கு ..
    அப்புறம் மேலே போட்டிருக்கும் Santa Christmas blog header சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நேற்றுதான் சிக்கன் பிரியாணி செய்து ஆபிஸில் உடன் வேலைபார்ப்பவர்களுக்கும் குழந்தைக்கும் கொடுத்துவிட்டு மீதியை மாமிக்கு தெரியாமல் கிச்சன் உள்ளே இருக்கும் ப்ரிஜ்ஜில் வைத்து இருக்கிறேன் ஆனால் அது மாமியின் கண்ணில் இதுவரை படவில்லை ஹீஹீ காராஜ் பரிஜ்ஜிற்கான பவர் வேலை செய்யாததால் அந்த் ப்ரிஜ் காலியாக இருக்கிறது


      சிக்கன் பிரியாணி ரிசிப்பி போடலாம் என்று நினத்து இருந்தேன் ஆனால் படம் எடுக்கவில்லை என்பதால் போடவில்லை அருமையான கோபி மஞ்சுரியன் ரிசிப்பி இருக்கிறது டிராப்டில் சிக்கிரம் வெளியிடுகிறேன்

      Delete
    2. என் ரிசிப்பையை போட்டீங்க அதனால நிறைய பேர் பாக்க வராங்கன்னு அது போல என் அரசியல் நையாண்டி பதிவுகளை மட்டும் போட்டுடாதீங்க அப்புறம் நிறைய ஆட்டோதான் வரும் ஹீஹீ

      Delete
  6. ஆஹா! இப்படித்தானா உங்க வீட்டுல!! இப்படி எலலம் தலைப்பு வைச்சா நிச்சயமா எங்களுக்குத் தெரியும் நம்ம மதுரை பேக் டு ஃபார்ம்னு அதான் வந்துட்டோம்..எப்படியோ முந்தைய ரெண்டு மிஸ் ஆகிப் போச்சு...

    ஹப்பா மதுரை இப்பத்தான் மதுரை பேக் டு ஃபார்ம்!! வி லவ் இட்!!!

    வெல்கம் சொல்லிட்டு கூடவே உங்க வீட்டுக்கும் செய்தி சொல்லியாச்சு...ஹிஹிஹிஹிஹி

    அடுத்து பூரிக்கட்டைப் பதிவுதானே!!??

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டுல வேலைக்காரி கிடையாதுன்னு டிஸ்கியில் போட்டு இருக்கேனே அப்படி இருக்க இப்படித்தானா உங்கவீட்டுலன்னு கேள்வி கேட்குறீங்க... இது பக்கத்துவீட்டுல நடந்தது ஹீஹீ ஒரு வேளை அப்படியே வேலைக்காரி இருக்கிறாள் என்று வைச்சு கொண்டாலும் அவளுக்கு இங்கே சேலை வாங்கி கொடுக்க முடியாது ஏன்னா அவங்கதான் சேலையே கட்டுவத்தில்லையே தப்பா நினைச்சுகாதீங்க அவங்க ஜீன்ஸ்தான் பொடுவாங்கன்னு சொல்ல வந்தேன்

      Delete
  7. இப்பல்லாம் சுடிதார் , லெக்கிங்ஸ் ,ஜீன்ஸ் எல்லாம் வந்தாச்சு. இது என்ன பழைய கால விகடன் ஜோக்கு மாதிரி.....
    அது சரி அமெரிக்காவிலேயும் சேலை காட்டும் வேலைக்காரங்களா........காதிலே ஒரு பூ வைக்கலாம் ஓகே இப்படியா முழம் முழமாக.........சுத்துவது

    ReplyDelete
    Replies
    1. இது இந்தியாவில் நடக்கும் விஷயத்தை பற்றி எழுதியது அமெரிக்காவில் அல்ல அதுவும் என் வீட்டில் அல்ல.....நகைச்சுவை எல்லாம் அந்த கால ஆனந்த விகடனில் உள்ளது மாதிரிதான் இருக்கும் ஏனென்றால் அதுதான் உண்மையான் ஒரிஜனல் நகைச்சுவை இந்த காலத்தில் வருவது எல்லாம் நகைச்சுவையே அல்ல

      Delete
  8. என்ன கொடுமை இது.....................உங்க முதல் டிஸ்கி .எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கே ....:-DDD

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகத்தாங்க இங்க வேலைக்கு ஆள் வைத்து கட்டுபடியாகது நாங்க என்ன இந்தியாவிலா வசிக்கிறோம் ஆள் வைத்து வேலை வாங்குவதற்கு.... எங்களாலும் இங்கு வேலைக்கு வைக்க முடியும் என்றால் வைத்து அவளுக்கு இப்படி ஆசையாக சேலை வாங்கி தர எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஹும்ம் அமெரிக்கா வந்து எல்லாம் ஆசைகளும் போச்சு

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.