Monday, December 18, 2017

மதுரையானந்தாவின் வாழ்க்கை அறிவுரை

கடந்த December 15, 2014 ல் மதுரையானந்த பேஸ்புக் அன்பர்களுக்கு வழங்கிய வாழ்க்கை அறிவுறை

மற்றவர்களிடம் இருப்பது எல்லாம் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்களிடம் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தால், நம்மிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவோம்! திருப்தி என்பது வெளியில் இல்லை! நமக்குள்தான்! இருக்கிறது. நாம் வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறோம் என உணர வேண்டும் என்பதில்லை. அதை இப்போதே அறிந்து கொள்வோம். இறுதியில் நாம் கொண்டு போவது எதுவுமில்லைதானே # என்ன நான் சொல்லுறது

உனக்கு பின்னால் நிற்பவர்களை பாதுகாத்தும் உனக்கு அருகில் இருப்பவர்களை மதித்தும் உனக்கு எதிராக இருப்பவர்களை அழித்தும் செல்வதுதான் வாழ்க்கை . ஆனால் உனக்கு முன்னால் உன் மனைவி நின்றால் மட்டும் ஒதுங்கி சென்றுவிடு . அப்படி இல்லையென்றால் உன் வாழ்க்கை அதோ கதிதான் # என்ன நான் சொல்லுறது


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : ம்துரையானந்தா என்பது வேறு யாருமல்ல அது நாந்தான் ஹீஹீ

19 comments:

  1. Replies
    1. கடைபிடிச்சு பாருங்க தம்பி

      Delete
  2. அருமை. அருகாமை உயரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

    ReplyDelete
  3. நல்ல போ(தை)தனை'கள்' தமிழரே இதை அனைவரும் ஏற்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் ஏற்றால் பிரச்சனையே இல்லை

      Delete
  4. அனுபவம் பேசுது

    ReplyDelete
    Replies
    1. உண்மை....அனுபவம் நம்முடையதாகவும் இருக்கலாம் அல்லது மற்ற்வர்களின் அனுபவத்தை பார்த்தும் அறிந்து கொள்ளலாம்

      Delete
  5. வாழ்க்கை போதனைகள் 2014 ல சொன்னதா !! சூப்பர் .
    ஹாஹா :) நீங்க ஒதுங்கி போறீங்க கண்டுபுடிச்சிட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. உங்க கண்டுபிடிப்பு தப்பு நான் மனைவியின் எதிரில்தான் ஆனால் காலுக்கு முன்னால் படுத்திருப்பேன்... ஒதுங்க எல்லாம் வழி இல்லை ஹீஹீ

      Delete
  6. ஹா ஹா ஹா.. முதலாவதும் ரெண்டாவதும் தத்துவமாகச் சொன்ன மதுவானந்தா:)) ஹையோ வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆகுதே... மதுரையானந்தா:).. மூன்றாவது தத்துவத்தில் அனைத்தும் மனைவிதான் என முடிச்சிட்டாரே:)).. ஹா ஹா ஹா அதாவது மனித வாழ்க்கையே ஒரு பெண்ணுக்குள் அடங்கி விடுகிறது எனத் தத்துவத்தில் ஜொள்ளிட்டார்ர்:)).. ஹையோ என்னைப் பெண்ணினவாதீஈஈஈஈஈஈஈ எனச் சொல்லிடப்போகினமேஎ:))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு டங்கு சிலிப்பாக காரணம் மதுவா? ஹீஹீ

      Delete
  7. நல்ல அறிவுரை! மதுரையானந்தா :)))

    ReplyDelete
    Replies
    1. நல்ல அறிவுரை என்று சொன்னதால் உங்களுக்கு மதுரையானந்தாவின் ஆசி எப்போதும் உண்டு

      Delete
  8. இப்பதான் பூரிக்கட்டையின் மகத்துவம் புரிகின்றது))) இன்னும் திருந்தினால் மகிழ்ச்சி)))

    ReplyDelete
    Replies
    1. என்னதான் அடி வாங்கினாலும் குரங்கு அதௌ புத்தியை மாற்றிக் கொள்ளாது என்பது உங்களுக்கு தெரியுமா?

      Delete
  9. உலக தத்துவம் தான்

    ReplyDelete
  10. அருமையான தத்துவம் சகோ தத்துவம் இல்லை வாழ்க்கை அறிவுரை!!! முற்றத்து முல்லையின் மணம் தெரியாது என்று சொல்வார்களே அப்படித்தான்...அருமை மதுரையானந்தா!!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.