காணாமல் போன மீனவர்களை தேடி பொன்.ராதாகிருஷ்ணன் சென்றது எங்கே?
கன்னியாகுமரியில் கன மழை, புயல் ! களத்தில் இருக்க வேண்டாமா? @PonnaarrBJP #CycloneOckhi
தமிழகத்தில் தாமரை மலராது இருப்பதற்கு காரணம் அதன் தமிழக தலைவர்கள் களி மண்ணாக இருப்பதால்தான் களிமண்ணில் தாமரை எப்படி மலரும்?
கன்னியாகுமரியில் கன மழை, புயல் ! களத்தில் இருக்க வேண்டாமா? @PonnaarrBJP #CycloneOckhi
தமிழகத்தில் தாமரை மலராது இருப்பதற்கு காரணம் அதன் தமிழக தலைவர்கள் களி மண்ணாக இருப்பதால்தான் களிமண்ணில் தாமரை எப்படி மலரும்?
சென்னை வெள்ளத்தின் போது ராப்பகலாக முழித்து சமுக சேவை செய்த பேஸ்புக் போராளிகளுக்கு கன்னியாகுமரியும் தமிழகத்தில் இருப்பது தெரியாமல் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறார்களா?#SaveKanyakumari
RJ பாலாஜி மற்றும் பல நடிகர்கள் சென்னை என்றதும் சமுக தொண்டு செய்தவர்கள் இப்ப கன்னியாகுமரி என்றது குப்புற படுத்து தூங்குவது ஏன்? ஒரு வேளை படித்த மேல்தட்டு சமுகத்தை சார்ந்தவர்களுக்கு கன்னியாகுமரி கேரளா மாநிலத்தை சேர்ந்தது என்று நினைத்து கொண்டிருப்பதால் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு உதவ முன்வரவில்லை போல
கொசுறு :தேச துரோக நிகழ்ச்சி ஒன்று நீயூஸ் 18 தமிழ்நாடு சேனலில் ஒடிக் கொண்டிருக்கிறது..(திருப்பூர் பற்றிய நிகழ்ச்சி அதில் எல்லோரும் ஜிஎஸ்டியை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள் ) அப்ப அது தேச துரோக நிகழ்ச்சிதானே
அன்புடன்
மதுரைத்தமிழன்
செய்தி இந்திய அரசின் உதவியுடன் ஈரான் நாட்டில் கட்டபட்டுள்ள சபகார் துறைமுக திறப்பு விழாவுக்காக. புதுடில்லியிருந்து கப்பல் துறை இனை அமைச்சர் பொன்னார் அவர்கள் புறப்பட்டு சென்றார்
கோட்டு சூட்டு போட்டு போன கோமான் வாழ்க!
ReplyDeleteபொன் ராதா கன்னியாகுமரியில் நிண்றதுக்கு புகைப்பட ஆதாரம் கூட உண்டு ... தங்கள் பார்க்கவில்லையா ?
ReplyDeleteஇணையத்தில் கூட உண்டு
கன்னியாகுமரி பாதிப்பு பற்றி ஊடகங்களில் கூட சரியாகச் சொல்வதில்லை. சென்னை வெள்ளத்தின்போது வடநாட்டு ஊடகங்கள் புறக்கணித்ததைக் குறை சொன்னோம்.
ReplyDeleteமதுர..
ReplyDeleteபேர் சொல்ல கூட தைரியம் இல்லாத ஒருத்தர் பொன்னார் ப்ரோக்ராம் பத்தி சொல்லி இருக்காரு.. நீ வேற அதை இங்கே போட்டு இருக்கியே..