Saturday, December 30, 2017

@avargalUnmaigal
கடவுள் இவ்வளவு மோசமானவரா என்ன?

நண்பரின் வீட்டிற்கு சென்று இருந்தேன் நண்பரின் தகப்பனாரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கடவுள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அணு அணுவாக பார்த்து கொண்டிருக்கிறார் என்று  சொன்னார். நானும்  அந்த பெரியவர் சொன்னதற்கு ஆமாம் சாமி என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தேன்.... ஆனால் என் மைண்ட் வாய்ஸோ அடேய் கடவுள் எல்லாவாற்றையும் பார்ப்பார் என்று வைத்து கொண்டால் நாம் உறவு கொள்வதையும் பார்த்து கொன்டிருப்பாரோ என்று கேட்டது... அதற்கு பதில் ஆமாம் என்றிருந்தால் கடவுள் இவ்வளவு மோசமானவரா என்ன? அவரையா நாம் வழிபட்டு கொண்டிருக்கிறோம் என்று மைண்ட் நினைத்தது


இந்த பெரியவர்களே  இப்படித்தான் என்னிடம் இது மாதிரி ஏதாவது சொல்லி என்னை கிறுக்குதனமாக சிந்திக்க வைத்துவிடுகிறார்கள்,, அதை அவர்களிடம் கேட்டால் இவன் ரொம்ப திமிரா பேசுகிறான் என்று சொல்லுவார்கள் .ஆமாம் இவர்களுக்கு வேற வேலையே இல்லையா என்ன?சும்மா கடவுள் அது இது என்று பேசுவதற்கு பதிலாக இந்த மோடி( I Love Modi ) ரொம்ப மோசம் என்று சொல்லியாவது சென்று இருக்கலாம் நானும் அதை ஆமாம் என்று ஆமோதித்து சென்று இருப்பேன்,இப்படியும் ஒரு பதிவு வந்து இருக்காது அல்லவா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. சிந்திக்கச் சில வரிகள்
    அருமை

    ReplyDelete
  2. கடைசியில் மொட்டைத் தலையை முழங்காலுக்கு கொண்டு வந்து முடிச்சு போடுகின்றீர்களே,,,,
    த.ம.1

    ReplyDelete
  3. உங்க தளத்தை ஒவ்வொரு முறையும் பண்டிகை, கொண்டாட நாள் வரும் போது மாறி வருவது மிகவும் அழகா சிறப்பாக இருக்கிறது .
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆப் பொங்கப்பா எதைத்தான் கடவுள் செய்வார் ?

    ReplyDelete
  5. முகப்பு ரொம்ப அழகா இருக்கே மதுரை!!!...

    மாமிகிட்ட போட்டுக் கொடுக்கறேன்..மதுரை என்னல்லாமோ சிந்திக்கிறார் என்று...அடி வாங்கி ரொம்ப நாளாச்சில்லையா...!!! ஹா ஹா ஹா ஹா..

    புத்தாண்டு வாழ்த்துகள்! நல்ல நாளும் அதுவுமா எதுக்கு அடிவாங்கணும் நம்ம மதுரை நு விட்டுப்புட்டேன்...

    கீதா

    ReplyDelete
  6. கடவுள் இவ்வளவு மோசமானவரா என்ன?
    உங்களின் இந்த கேள்விக்கு பைபிள் பதில் சொல்லுகிறது. உலகின் முதல் ஜோடியான ஆதாமும் ஏவாளும் நிர்வாணிகளாய் இருந்தும் அந்த உணர்வு அவர்களுக்கு இல்லை. அவர்கள் மனதில் கடவுள் ஒருவரே நிறைந்திருந்தார். எப்பொழுது கடவுள் ஆணையை மீறி பாவ சிந்தனை அவர்கள் மனதில் நுழைந்ததோ அக்கணமே அவர்கள் நிர்வாணிகள் என்கின்ற உணர்வைப் பெற்று தங்களை மறைத்துக்கொண்டனர். எனவே கடவுள் சிந்தனை ஒன்றே நமது மனதில் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கும்போது நிர்வாணம் நமது சிந்தனையில் தோன்றாது. கடவுள் அனுமதித்துள்ள தாம்பத்தியம் ஆபாசமல்ல. பைபிளை ஒரு மதப்புத்தகமாகப் பார்க்காமல் ஒரு ஆன்மீகப் புத்தகமாகப் படியுங்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.