உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 1, 2017

ஸ்டாலின் தமிழக மக்களுக்காக இதை செய்வாரா?avargal unmaigal
ஸ்டாலின் தமிழக மக்களுக்காக இதை செய்வாரா?


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை மக்கள் நெடுவாசலில் நடத்தி வருகிறார்கள்.இதற்கு பல கட்சிகளும் ஆதரவு தருகின்றனர். திமுகவும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.இந்த சமயத்தில் ஸ்டாலின் போராட்டத்திற்கு ஆதரவு அதற்காக குடியரசு தலைவருக்கு கடிதம் என்ரு எழுதி நேரத்தை வேஸ்ட் செய்யாமல் போராட்ட களத்திற்கே சென்று அந்த பகுதிமக்களுக்கு ஆதரவு தருவதோடு அந்த திட்டத்தை மத்திய அரசு விலக்க்கும் வரை அந்த போராட்ட களத்திலே தொடர்ந்து இருந்து போராட வேண்டும்..  ஒரு நாள் அடையாள் போராட்டம் அல்லது உண்ணாவிரத போராட்டம் என்று  இருக்காமல் திட்டம் விலக்கப்படும் வரை களத்திலே மக்களோடு மக்களாக உட்கார்ந்து  சாப்பிட்டு போராடலாமே அப்படி போராடினால்  அனைத்து மக்களின் தலைவராக  ஆகும் வாய்ப்பு உண்டே


திமுக கட்சியில் அவர் செயல் தலைவராக இருக்கலாம் ஆனால் இப்படி செய்தால் மக்கள் மனதில் செயல்படும் தலைவாரகவே ஆகிவிடுவார்


அதை செய்ய அவரால் முடியுமா ?

டிஸ்கி : இன்று பிறந்தநாளை கொண்டாடும் தலைவர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கடந்த காலங்களில் நீங்கள் எப்படியோ ஆனால் இன்றைய நாளில் இருந்து நீங்கள் மாறுபட்டு மக்கள் தலைவனாக மாறி மக்களுக்காக மக்கம் மனதில் நீங்கா இடம் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் முடியுமா உங்களால்???

4 comments :

 1. தமிழகத்திற்கான திட்டங்களை பட்டியலிட்டு.. வேலைவாய்ப்புகளை உருவாக்க மற்றும் கல்வியை உயர்த்த போன்ற திட்டங்கள்..

  ReplyDelete
 2. செய்ய மாட்டார். மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டு ஆரம்பிச்சதே இவங்கதானே

  ReplyDelete
 3. யப்பா தமிழா! யேம்? உமக்கு இந்த கொல வெறி. அவர் பாட்டுக்கு அவர் இருக்கும் போது எம்ம(க்கள்) கூட அவர கூட சொல்லி எம்ம(க்களை) வதைப்பது ம் நோக், , ,மா

  ReplyDelete
 4. நீங்கள் சொல்வது போல் செய்தால் அவர் சிறந்த தலைவர் ஆகலாம்....ஆனால் செய்வாரா?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog