என் பதிவுகளை தொடர்ந்து படிக்க
Follow அவர்கள்...உண்மைகள் on Google Plus
Follow அவர்கள்...உண்மைகள் on Twitter
If you love அவர்கள்...உண்மைகள் like it on Facebook
இன்றைய சமுகம் விஷ விதைகளை விதைத்துவிட்டு நல்ல பலனை எதிர்பார்கலாமா?https://youtu.be/hB2cjVGkEM...Read more
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும் பாலியல் பலாத்காரம் என்பது திரைத்துறை துறையில் மட...Read more
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இது டாம் & ஜெர்ரி கதையல்ல ,உங்களின் கதைமுதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது , இதனுள்...Read more
எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன் செய்வது சரிதானா? உயர்ந்த குடியில் பிறந்த ஒருவர்( உயர்ந்த குடியில...Read more
தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர யாருக்கு வாக்களிக்கலாம் ? தமிழகத்தின் அடுத்த முதல்வர் போ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
மச்சான் நடிப்பவர்கள் சோடை போவதில்லை அரசியலில் ...
ReplyDeleteஇரோம் அப்படியல்ல
யாராக இருந்தாலும் மார்கெட்டிங் வேண்டும்
பேசவைக்க வேண்டும்
மற்றபடி சனாயகம் தற்போதிய வாக்களர்களுக்கு தேவையில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் சொல்கின்றன
மாப்பிள்ளை நீங்கள் சொல்வது உண்மையே.
Deleteஇறுதியில் உண்மையான வார்த்தை.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஃபாஸ்ட் ஃபுட் போல மக்களுக்கு எல்லாமே ஷார்ட் டெர்ம்தான் இருக்க வேண்டும். ஷார்ட் டைம் மெமரி லாஸ் போல. கவர்ச்சி அரசியலை விரும்பும் மக்கள். மாறும் இனி நிலை. மாறவேண்டும்.
ReplyDeleteபல விஷயங்களில் புத்திசாலியாக செயல்படும் நம் இந்திய மக்கள் சில முக்கியமான விஷயங்களில் இப்படிதான் கோட்ட்டைவிட்டுவிடுகிறார்கள்
Deleteஅருமையாக கூரினிர் நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteடிஸ்கி -1 : அதானே....
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஉண்மையான போராளியின் நிலையை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.
ReplyDeleteஆமாம் சார் நல்லது செய்பவர்களை நம் மக்கள் தட்டிக் கொடுக்காமல் பின் தலைவர்கள் மோஷம் வேஷம் என்று கூப்பாடு போடுகிறார்கள் வாய்ப்பை பயன்படுத்த தெரியவில்லை இவர்களுக்கு
Deleteஐஸ்வர்யாவை ஐநா சபைக்கு நாட்டியமாட அனுப்பி வச்சதும் மாபெரும் பெண்மணி இரோம் சர்மிளாவை மிதித்து போட்டதும் இந்த பாழாப்போன ஜனங்கள்தானே ..ஜிகினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது யார் நாம் தானே :( திறமைக்கும் உழைப்புக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் நியாயத்துக்கும்
ReplyDeleteமதிப்பு கொடுக்கும் நாள் என்று வருமோ அன்று இரோம் ஷர்மிளா போன்றோர் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கும்
இவரது தோல்வியை கண்டு இனிமே பொது வாழ்க்கைக்கு வரவும் அநீதிக்கெதிரா போராடவும் யாருக்கு துணிவு வரும் :(
இரோம் ஷர்மிளா இந்த கேடு கேட்ட மாந்தர்களுக்காய் இத்தன காலம் கஷ்டப்பட்டாயே உன் வாழ்க்கையை வீணடித்தாயே என்று மனம் வெதும்புகிறது ..
கருப்பு சட்டத்திற்கு எதிராக போராட முன்வந்தவருக்கு மனித மனங்களில் இருக்கும் கறுப்பை இனம்கொள்ள முடியாமல் போனதே .
அவரின் 16 வருட கனவை போராட்டத்தை ஆசிட் ஊற்றி அழித்த தவிடுபொடியாகிய பாவிகள் நம் மக்கள் இந்த காட்டிக்கொடுக்கும் யூதாஸ்காரியோத்களை பற்றி சிறு க்ளூ கிடைத்திருந்தாலும் இவர் அரசியலை தெரிவு செய்திருக்க மாட்டார் :( முதுகில் குத்திய தின்னிகள் என்று சொல்வதில் தவறில்லை
..
நான் இரோம் சர்மிளா சார்ந்த கட்சி வெற்றி பெறனும் என்று கூட நினைக்கலைங்க இப்ப ஜெயிச்ச கட்சிகூட ஜெயிச்சு இருக்கலாம் ஆனால் இரோம் சர்மிளா மட்டுமாவது அவரது தொகுதியில் ஜெயிச்ச வைத்திருக்கலாம் அல்லது தோர்ரு இருந்தால் கூட சில ஆயிரம் வோட்டு வித்தியாசத்தில் தோற்று இருந்தால் கூட மனசு ஆறுதல் அடைந்திருக்கும் ஆனால் இப்படி இவ்வளவு கேவலமாக தோற்க வைத்திருப்பதுதான் என் மனதிற்கு வேதனையை தருகிறது
Deleteஅச்சச்சோ எனக்கு இங்கின கால் வைக்கவே நடுங்குது... இவ்ளோ விசயம் நடக்குதோ தமிழ்நாட்டில்.....
ReplyDeleteஅய்யோ இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல இந்தியவில் உள்ள மாநிலமான மணிப்பூரில்தானுங்க....
Deleteமணிப்பூர் மக்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் குறைகூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதுபோன்ற நிலைமை தமிழ்நாட்டில் நடக்க விடமாட்டார்கள். ஐரோம் ஷர்மிளா போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகச் செய்தி வந்தால் போதும், இரண்டு திராவிடக் கட்சிகளும் அவர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி அவரை சரிக்கட்டிவிடுவார்கள், அல்லது அச்சுறுத்தி அவரை மேலெழ முடியாமல் செய்துவிடுவார்கள். பிறகு அவரால் எப்படி 9௦ வோட்டுக்கள் பெறமுடியும்?
ReplyDelete- இராய செல்லப்பா தற்போது நியூஜெர்சி
ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் என்று கூறுவதால்தான் இந்த பதிவு அட்ல்லீஸ்ட் மணிப்பூரில் 90 நல்லெண்ணம் கொண்ட மக்கள் இருக்கிறார்களே என்று வியக்கிறேன்.....தமிழகத்தில் இப்படி நல்லெண்னம் கொண்டவர்கள் சற்று அதிகமே ஆனால் என்ன அவர்கள் வாக்கு அளிக்க செல்ல மாட்டார்கள்
Deleteஉண்மையான ஆதங்கம். சமூக சேவை மனப்பான்மை உள்ளோரையும், சமூகத்துக்கு நல்லது செய்வோரையும் ஓரமாக ஒதுக்கி அல்லது அவர்களே ஒதுங்கி போகும் படி செய்வதென்பது இனி வரும் காலத்தில் யாருக்கு என்ன நடந்தால் என்ன நாம் மட்டும் நம் பாட்டை பார்ப்போம் எனும் சுய நல மன நிலைக்கே தள்ளும், பொது நலம், உதவும் சிந்தனைகள் கொண்டோர் அரிதாகும் சூழலில் இம்மாதிரி சம்பவங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கின்றது.
ReplyDeleteஐஸ்வர்யா நடனம் உண்மையில் கேலிக்கூத்தான ஒன்றாகவே எனக்கும் பட்டாலும், நாம் தாமே எழுதியவரை வைத்து கருத்திடுவோம், எழுத்தை வைத்து மதிப்பிட மாட்டோம், செல்வாக்கை உயர்த்தி சொல்வாக்கை மிதித்து தானே இதுவரை செயல் பட்டிருக்கின்றோம்.
இந்தியாவின் மகளிர் சார்பாக பேச ஐ, நா வில் அங்கம் வகிக்க உண்மையில் சாதித்த சமுதாய சிந்தனை கொண்ட பெண்களை அல்லவோ முதலில் தெரிந்தெடுக்கும் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தி இருக்க வேண்டும், தலையை விட்டு வாலைப்பிடிக்க கூடாது.
தங்களின் ஆதங்கத்தை மிக அழகாக சொல்லியதற்கு நன்றி நல்லடு செய்பவர்களையும் சிறிது யோசிக்க செய்யும் நிகழ்வாகவே இருக்கிறது. எப்படி இருந்தாலும் நல்லது செய்பவர்கள் இதற்காக சோர்ந்து போகாமல் தங்களின் குணத்தை மாற்றிக் கொள்ளாமல் வழக்கம் போல செயல்பட வேண்டும்
Deleteஎப்படிங்க சோர்ந்து போகாமல் இருக்க முடியும், நடக்கும் காரியத்தினை பார்த்தால் இனிமேல் யார் மேலும் இரக்கம் காட்டவும் கூடாது, சமுதாயம், மக்கள் பொது நலன் என சிந்திக்கவும் கூடாது, நாம் சுயனலமிகளாக மாறியே ஆக வேண்டும் என நிர்ப்பந்தம் போல் உள்ளதே. விரும்பா விட்டாலும் திணிக்கப்படுகின்றது
Deleteஉண்மையில் அனுபவங்கள் மிகவும் கசப்பாக இருக்கின்றன.எத்ரிகளை விட உடனிருந்தே முதுகில் குத்தும் துரோகிகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றார்கள். நான் ஒவ்வொருவராக இனம் கண்டு களைந்து கொண்டிருக்கின்றேன். மொத்தமாக தூரமாக... சர்மிளாவும் இனி அப்படித்தான் முடிவெடுத்து விடுவார். தனிப்பாதையில் தனித்தே வாழ்வது நிம்மதி என விரக்தி மனம் தான் கடைசியில் கிடைக்கின்றது. பாவம் அந்தப்பெண்.
இது என்னையும் வேதனைப் படுத்தியது !இத்தனை ஆண்டு போராட்டத்தில் எத்தனைப் பேர் ஆதரவு தெரிவித்து இருப்பார்கள் ,அவர்கள் எங்கே போனார்களோ :(
ReplyDeleteஅவர்கள் சுயநலமிக்க வாதிகளாக ஆகிவிட்டனர்
Deleteஇரோம் சர்மிளா தோற்றதுகூடப் பெரிதாகத் தெரியவில்லை
ReplyDeleteஆனால் கிடைத்திருக்கும் வாக்குகள்
கூனிக் குருகத்தான் வைக்கின்றன
இப்படிப்பட்ட மக்களுக்காகவா இத்துனை வருடங்களைத்
தியாகம் செய்தார்,
வேதனை
தமிழ் நாட்டு மக்களும் இப்படித்தானே
காமராசரையேத் தோற்கடித்தவர்கள்தானே
உண்மைதான் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்கும் புரியவில்லை அவர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது
Delete