Thursday, March 2, 2017



avargal unmaigal
அழகுக்கு பின்னே மறைந்து இருக்கும் ஆபத்து! எச்சரிக்கை

எலனுக்கு  வயது 50 இருக்கும் அவருடைய பொழுதுபோக்கே  நெயில் எக்ஸ்டென்ஷன் ( நீளமான நகங்களை விரும்புவோர் அதை வளர்க்க வேண்டிய அவசியம்கூட இல்லை. இப்போது நகங்களுக்கான எக்ஸ்டென்ஷன்கள் கிடைக்கின்றன. இதை வாங்கி நகங்களில் பொருத்திக்கொள்ளலாம். இவற்றை அழகுபடுத்திக் கொள்வதற்கு, அக்லிரிக் பவுடர்களும் பேஸ்ட்களும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நீளமான நகங்களை இவற்றால் அழகுபடுத்திக் கொள்ளும்போது, அவை உண்மையான நகங்களைப் போலவே தோற்றம் தந்து, பிறரின் கவனத்தை உங்கள் நகத்தின் மீதே குவிக்கும்)  செய்து அதில் வித விதமான டிசைன்கள் கற்கள் என பொருத்தி அழகு செய்வது ..நான் சில வருடங்கள் முன்பு சின்ன மணிகளால் அணிகலன் செய்யும்  வகுப்புகளுக்கு சென்றேன் இவரை அங்கே தான் சந்தித்தேன் ..பிறகு அந்த கோர்ஸ் முடிந்ததும் அவரை சந்திக்கவில்லை .. 3 வருடங்கள் முன்பு ஒரு கண்காட்சியில் அனைவருக்கும் நெயில் டிசைனிங் செய்து கொண்டிருந்தார் ..பிறகு வேறு எங்கும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை போன வாரம் ஒருபல்பொருள் அங்காடியில் உதவிக்கு ஒரு பெண்மணியுடன் கைத்தாங்கலாக நடந்து சென்றார் ..அருகில் சென்று நலம் விசாரித்த எனக்கு அதிர்ச்சி ..விழிகள் dilated தலையில் கூந்தல் உதிர்ந்து கைகள் நடுங்கிக்கொண்டே என பார்க்கவே கொடுமையாக இருந்தது ..நலம் விசாரித்துவிட்டு அவர் விரல்களை கவனித்தேன் நகங்கள் ஓட்ட வெட்டி மொட்டையாக காட்சியளித்தது ..உன்னுடைய நெயில் ஆர்ட் பிசினஸ் எப்படி செல்கிறது என்று வினவினேன்...அதற்கு அவர் இன்று நான் நடை பிணமாக திரிய காரணமே அந்த நெயில் பாலிஷ்களில் இருந்த இரசாயனங்கள்  ,ஒரு வருடம் semi paralysis வந்து அவதிப்பட்டு இப்போது பரவாயில்லை என்றார் ..அப்படி என்னதான் இருக்கு அந்த நெயில் பாலிஷில் ஒருவருக்கு பக்க வாதம் வருமளவுக்கு என்று கேட்கிறீர்களா ..


பெண்கள் முகத்திற்கு மட்டுமின்றி கை கால்களுக்கும் அழகு சேர்க்க விரும்புகின்றனர். ஆனால் அழகைத் தரும் பொருட்களால் சில சமயங்களில் ஆபத்தாகிவிடுகிறது. அழகுசாதனப் பொருட்களில் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் நெயில் பாலிஷூம் ஒன்று. முன்பு பல வருடங்களுக்கு முன்னால் பயன்படுத்திய நெயில் பாலிஷை  நாம் ஒவ்வொரு முறையும் குலுக்கி பின்பு பயன்படுத்துவோம் ஏனெனில் திறந்ததும் காற்று பட்டு  விரைவில் கடினமாகிடும் ..இப்போ மாற்றாக பிரபல நக பாலிஷ் நிறுவனங்கள் பயன்படுத்துவது டொலுவீன் ,நக பாலிஷை கடினமாக்காமல் நீர்தன்மையுடன் வைக்கும் டொலுவீன்.இதை நம்ம வீட்டுசுவருக்கு அடிக்கும் பெயிண்டிலும் கலக்கறாங்க

நகத்தில் இப்பூச்சுக்கள் CUTICLE வழியே ஊடுருவி இரத்த ஓட்டத்தில் கலக்குமாம் ,

.TOLUENE  இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மயக்கம் தலை வலி மற்றும் சிலகுறைபாடுகளை உருவாக்குகிறதாம் சில வருடங்கள்; முன்பு வரை ..கர்ப்பிணி பெண்களை சிகரட் மற்றும் மதுபான வகைகள் தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள் ..ஆனால் இப்போ நிலைமையே வேறு ..

பெர்சனல் கேர் ப்ரொடக்ட்ஸ் அதாவது மேக்கப் /நெயில் பாலிஷ் /பெர்பியூம் போன்றவற்றில் காணப்படும் அதிகளவு இரசாயன பொருட்களால் அவற்றை தவிர்க்க சொல்கின்றார்கள்


அடுத்தது இதில் உள்ள formaldehyde, toluene or dibutyl phthalate..இவை மூன்றும் Toxic trio ...பார்மால்டிஹைட் ...புற்றுநோய் காரணி
மற்ற இரண்டும் REPRODUCTIVE TOXIN .....Formaldehyde...இது பிளைவுட் //GLUE Adhesive/ பல வீட்டு உபயோக பொருட்களில் காணப்படும் ஒரு வித கடும் மணம் வீசும்இரசாயனப்பொருள் ..இதைதான் நெயில் பாலிஷிலும் பயன்படுத்துகின்றனர்

நெயில் பாலிஷ் பாட்டில்களில் உள்ள லேபிளில் //inflammable ///காற்று வரும் வென்டிலேஷன் உள்ள ஜன்னல்கள் திறந்து வைத்துள்ள இடங்களில் பயன்படுத்தவும் // என்று குறிப்பிட்டிருப்பார்கள் .எத்தனை பேர்கள் இதனை விரலில் போடுமுன் வாசித்திருப்பார்கள் ??
//as of June 10, 2011, the U.S. Department of Health and Human Services updated its National Toxicology Program Report on Carcinogens (RoC) to state that formaldehyde is “known to be a human carcinogen,” //கூடுமானவரை இரசாயன பொருட்கள் மேலே குறிப்பிட்ட TOXIC TRIO
மற்றும் ..DMDM Hydantoin ,Butylparaben, Isobutylparaben Propylparabenகலந்திருந்தால் தவிர்க்கவும் ..


இந்த பதிவை எழுதி வெளியிட்டவர் மேலை நாட்டில் வசிக்கும் தமிழ் பெண்மணி ஏஞ்சலின். அவர்களின் அனுமதி பெற்று இங்கு அது மறுபதிவாக வெளியிடப்பட்டுள்ளது. அவரின் வலைத்தள முகவரி http://kaagidhapookal.blogspot.com


அன்புடன்
மதுரைத்தமிழன்

நெயில் பாலிஷ் ரிமூவரின் பயன்பாடுகள் :

நெயில் பாலிஷ் ரிமூவர், நெயில் பாலிஷ்ஷை அகற்றம் செய்வதற்கு மட்டும் பயன்படவில்லை பல பொருட்களையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது. இதை கொண்டு சாதாரண கறைகளை மட்டுமின்றி  கடினமான கறைகளை அகற்றப் பயன்படுகிறது. அப்படிப்பட்ட இந்த நெயில் பாலிஷ் ரிமூவரை கொண்டு வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்

1. பள்ளிக் கூட பாராஜெக்ட் செய்யும் போது  நாம் கம்மை superglue பயன்படுத்துவோம் அப்போது நம் கைவிரல்களில் அந்த கம்பட்டு ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு அந்த சமயத்தில் நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, பசையை நீக்கப் பயன்படுத்தலாம் காட்டனில் சிறிது நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி  ஒட்டிக் கொண்ட இடத்தில் தேய்த்தால் கைவிரல் எளிதாக பிரிந்துவிடும்

2. டைல்ஸ் மிகவும் அழுக்காக பளபளப்பின்றி காணப்பட்டால் நெயில் பாலிஷ் ரிமூவரின் உதவியால் அந்த அழுக்கு உள்ள இடத்தை சுத்தம் செய்தால் டைல்ஸ் சுத்தமாக பளிச்சென்று காணப்படும்.

3. மை கறைகளை நீரில் அலசினால் முழுவது போகாமல் இருக்கும். மேலும் அவ்வாறு நீரில் அலசும் போது அந்த இடமே ஒரு வித்தியாசமான நிறத்தில் காணப்படும்.  அத்தகைய கறைகளைப் போக்க நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி அலசினால், கறைகள் சுத்தமாக நீங்கிவிடும்.


4, பாட்டில்கள் அல்லது கடைகளில் வாங்கும் சில்வர் பாத்திரங்களில் கடையின் அல்லது அந்த ப்ராண்டின் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பார்கள் அதை எளிதாக எடுத்துவிட முடியாது அந்த சமயத்தில் நெயில் பாலிஷ் ரிமூவரின் உதவியால் மிக எளிதாக எடுத்துவிடலாம்

5, ஷுவை புத்தம் புதிதாக பளிச் என்று வைத்து கொள்ள இது மிகவும் உதவுகிறது.

6. மார்க்கரைப் பயன்படுத்தி எழுதும் போது அழிக்க முடியவில்லை என்றாலும் அல்லது பெயிண்டிங் செய்யும் போது தவறாக வரைந்தவற்றை சரிசெய்ய முடியவில்லை என்றாலும்  நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி அழித்தால் சரி செய்துவிடலாம்


7. இரத்தத்தை குடிக்கும் அட்டை நம் உடலில் ஒட்டிக் கொண்டால் அதன் மீது. நெயில் பாலிஷ் ரிமூவரை ஊற்றுவதன் மூலம் அதை எளிதாக பிரித்து எடுத்துவிடலாம்

11 comments:

  1. ஆஆஆஆவ்வ்வ்வ் அஞ்சூ இதனை ட் ருத் அமெரிக்காவுக்கு காவி வந்திட்டாரா??? ச்ச்ச்ச்ச்சும்மாவா குடுத்தீங்க அஞ்சு????, பறவாயில்லை என் எக்கவுண்ட்டில போட்டு விடுங்கோ ட் ருத் டொலரா போட்டாலும் ஓகே, நான் கொன்வேட் பண்ணுடுறேன்ன்ன்:)

    ReplyDelete
    Replies
    1. @ அவர்கள் உண்மைகள் அதிரா அக்கவுண்டுக்கு ரவுண்டா வெள்ளையா இருக்குமே முட்டைகள் அதை போட்டு விடுங்க

      நான் சொன்னது Boa Constrictor முட்டைகளை

      தாராளமா கொன்வேர்ட் பண்ணிக்கோங்க அதிராவ்

      Delete
    2. அதிராவிற்காக சைனாவில் ஸ்பெஷலாக முட்டைக்கு சொல்லி இருக்கிறேன் அது வந்ததும் அவருக்கு கண்டிப்பாக அனுப்பிவைக்கப்படும்... நான் இப்படிதான் எனக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும் இப்படி சைனா முட்டைகளை பரிசாக தருவது வழக்கம்

      Delete
    3. http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

      Delete
  2. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றிக்கு உரியவர் ஏஞ்சலின் அவ்ர்கள்தாம்

      Delete
    2. அவர்களுக்கும் நன்றி

      Delete
  3. பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ..
    நெயில் பாலிஷ் ரிமூவர் பற்றிய கூடுதல் தகவலும் மிக அருமை ..நான் யோசிப்பதுண்டு அதை யாரவது திறந்தால் எனக்கு நெஞ்சு எரிவது போல உணர்வேன் ..
    இங்கே கென்ட் பகுதில body ஸ்ப்ரே அடிக்கடி அடித்த ஒரு சிறுவன் butane inhalation காரணமா (வாரம் ஒரு can பயன்படுத்தியிருக்கான் )
    மரணமடைந்திருக்கான் ..எதுவும் அளவுக்கு மீறும்போது நஞ்சுதான் ..
    இந்த நெயில் எக்ஸ்டென்சன் வேலை செய்யும் இனொரு பெண் இருக்காங்க அவங்க முகமெல்லாம் சிறு பருக்கள் திடீரென தோன்றியபோது மருத்துவர் சொன்னது முகத்தில் மாஸ்க் Ear Loop Mouth Face Mask..அணிந்து வேலை செய்ய..

    இந்த கெமிக்கல்ஸ் எல்லாமே எண்டோக்ரைன் டிஸ்ட்ரப்ட்டர்ஸ் மற்றும் they mess with our hormones

    ReplyDelete
    Replies
    1. என் மகள் மேக்கப் போடுவதில்லை நெயில் பாலிஷ் மட்டும் அவ்வப்போது போடுவாள் நேற்று இந்த பதிவிற்காக படத்தை ரெடி பண்ணும் போது இந்த படம் எதற்கு என்று கேட்டாள் நீங்கள் எழுதியதை விளக்கி சொன்னதும் முடிந்த வரையில் அதை தவிர்க்க முயற்சி செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறாள்

      Delete
    2. Bless her ..நல்லது நாம் சொல்லாமலே இக்கால பிள்ளைங்களுக்கு இப்போ புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இருக்கு..

      Delete
  4. ஏஞ்சல் தளத்திலும் வாசித்தோம்...உங்கள் பகிர்வும் வித் கூடுதல் இன்ஃபோ நெயில் பாலிஷ் ரிமூவர் பற்றியதும் மிக்க நன்றி...

    கீதா: நோ மேக்கப், நோ ஸ்ப்ரே/டியோடரென்ட் ...உடலுக்கு எதுவுமே பயன்படுத்துவதில்லை....மிகவும் தேவை என்றால் துணியில் நாச்சுரல் டியோடரென்ட் அல்லது ஸ்ப்ரே போடுவதுண்டு...பெருமபலும் துணிகளுக்கு நல்ல சோப்பவுடரில், மணமுள்ள(சோடா கம்மியான) ஊறவைத்துத் தோய்ப்பதால் அல்லது ஷாம்பூவில் ஊறவைத்துத் தோய்ப்பதும் உண்டு...இப்படித்தான் கோடையைச் சமாளிப்பது...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.