Wednesday, March 8, 2017

இந்தியர்கள் உண்மையிலே அறிவாளிகள்தானா எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்


உலகத்திலே நாம்தான் மிக சிறந்த அறிவாளிகள் என்று இந்தியர்களுக்குள் ஒரு எண்ணம் உண்டு .அப்படிபட்ட எண்ணத்தை கொண்டு உள்ள இந்தியர்கள், அமெரிக்கா மற்றும் மேலை நாட்டை சார்ந்தவர்கள் முழு  சோம்பேறி மட்டுமல்ல  ஒன்றும் தெரியாதவன் என்றும், அரபு நாட்டவர்கள் வடிகட்டின முட்டாள்கள், என்றும் சைனாக் காரன் ஒன்றுக்கும் உதவாத பொருட்களை தாயாரிப்பவர்கள் என்றும், தாங்கள்தான் உலகின் சிறந்த அறிவாளிகள் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்


நாம் முட்டாள் சோம்பேறி என்று சொல்லப்படும் அமெரிக்கர்களால்தான் கம்பியூட்டர் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதன் யன்பாடு பல்வேறு துறைகளிலும்   செயல்படுத்தப்பட்டது. அதன் பின்தான் அதன் பயன்பாடு உலகமெங்கும் பரவியது..இப்போது வேண்டுமானால் அமெரிக்காவில் இந்தியர்கள் அந்த துறையில் அதிகம் இருப்பதினால் நாம் ரொம்ப ஸ்மார்ட் அமெரிக்கர்கள் முட்டாள் என என்ன வேண்டாம். இப்படி அமெரிக்காவில் இந்தியர்கள் இந்த துறையில் அதிகமாக இருக்க காரணம் என்ன என்று பாருங்கள்.


இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வரும் முன் பலதுறைகளிலும் கம்பீயூட்டர் பயன்படுத்தப்பட்டு அதனை நிர்வாகித்து வந்தவர்களும் அமெரிக்கர்கள்தான் அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல இப்படி அவர்கள் ஸ்மார்ட்டாக இருந்த சமயத்தில் Year 2000 சமயத்தில் தாங்கள் வடிவமைத்த புரோகிராம்களில் பிரச்சனை வரும் என்று கருதினர்...அப்படி பிரச்சனைகள் வந்தால் அந்த சமயத்தில் எல்லா துறைகளும் பாதிக்கப்படும் என்று நம்பியதால் அதனை சரி செய்ய அவர்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டது அதுவும் ஆங்கில அறிவு உள்ளவர்கள் தேவைப்பட்டது பிரிட்டீஷ் காரர்கள் நம்மை ஆண்டாதால் நம் மக்களுக்கு மற்ற நாட்டவர்களை விட ஆங்கில அறிவும் ,சிறந்த அடிமையாக இருப்பதும் என்கின்ற காரணத்தினாலும் இரண்டு நாடுகளுக்கிடையான நேரம் மாறுபாடுகளும் ஒரு சிறந்த காரணமாக இருந்ததால் அவர்களுக்கு நல்ல கம்பியூட்டர் ட்ரெய்னிஙகை கொடுத்து தங்கள் வேலைகளை செய்ய அமர்த்தப்பட்டனர்.


இந்த இந்தியர்கள்தான் இங்கு வந்து சிறந்த அடிமைகளாக இருந்து மணிக்கணக்கில் வேலை செய்தனர். அவர்களுக்கு இங்கு வந்த போது வேலைகளை சொல்லி கற்று தந்தவர்கள் அமெரிக்க மூட்டாள்களே. இப்படி வந்தவர்கள் மிக குறைந்த சம்பளத்திலும் நீண்ட நேரம் வேலை பார்க்ககூடியவர்களாகவும் இருந்ததால் அமெரிக்க கார்பரேட் அதிபர்கள் இவர்களை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொண்டனர். அதனால் தங்கள் தேசத்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் இருந்து நீக்கினர். அதன் காரணமாகவே அமெரிக்கர்கள் பலர் வேலை இழந்து தவிக்கின்றார்களே தவிர திறமை இல்லாததினால் மட்டுமல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவில் புற்று ஈசல் போல எந்த வித வசதிகள் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளில் பட்டம் பெற்று வந்தவர்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பைபெறும் போது அமெரிக்காவில் தரம் வாய்ந்த கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டும் முட்டாள்கள் அவர்களுக்கு திறமை இல்லை என்று நம்புவது எந்த விதத்தில் சரியாக இருக்கும். கொஞ்சம் அறிவு உள்ள இந்தியர்கள் யோசித்துதான் பாருங்களேன்?



கணணி உலகத்தில் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட் அது போல செல்போன் உலகில் அடிவத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆப்பீள் அதிபர் ஸ்டீவ் ஜாப் ............ சர்ச் இஞ்சினில் மாற்றம் ஏற்படுத்தி கூகுல் மூலம் சாதன செய்தவர். பேஸ்புக் மூலம் சோசியல் நெட்வொர்க் தள்த்தில்  மாற்றம் எற்படுத்தி உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றட்திற்கு வழி செய்தவர் மார்க் இப்படி பல முட்டாள்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இப்படி தொழில் தொடங்கி அதில் ஆயிரக்கணக்கில் அறிவாளி இந்தியர்களை வேலையில் இப்போது அமர்த்தி வேலை வாங்குபவர்களும் இப்படிபட்ட அமெரிக்க வாழ் முட்டாள்களே.


சரி அமெரிக்கர்களை விடுங்கள்......அரேபிய முட்டாள்களை எடுத்து கொள்ளுங்கள் அவர்கள் நாட்டில் எண்ணெய் வளம் தவிர்த்து வேறு எந்தவித வளமும் இல்லை. ஆனாள் அறிவாளிகள் நிறைந்த நம் நாட்டில் என்ன வளம்தான் இல்லை. எல்லா வளமும் இருந்து நம் நிலமை என்ன அரபியர்கள் நிலமை என்ன கொஞ்சம் யோசித்துதான் பாருங்களேன். அவர்கள் தங்களிடம் உள்ள ஒரே வளத்தை வைத்து தங்கள் நாட்டை முன்னேற்றியதுடன் அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வெளிநாடுகளில் குவித்து பல் துறைகளிம் மிக மிக அதிக அளவின் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணி இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் இன்வெஸ்ட்மெண்டை விலக்கினாலே மேலை நாட்டின் பொருளாதாரம் குப்புற கவிழ்ந்துவிடும்


அது போல சைனாக்காரார்கள் மோசம் என்று நாம் சொல்லிக் கொண்டே இருந்த போதிலும் உலக பொருளாதாரட்டை தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.


ஆனால் நாம் அறிவாளிகள் என்று கருதி பெருமை பேசி வாழும் இந்தியர்கள் வசிக்கும் இந்தியாவோ, தங்கள் வளங்களை மற்ற நாடுகளுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறது அதுமட்டுமல்ல அறிவாளிகள் நிறைந்த இந்தியாவில் எங்கடா உங்க வளர்ச்சி என்று கேட்டால் உடனே போட்டோஷாப்பில்  பல போலி டேட்டாக்களை வைத்து படம் போட்டு இதுதான் எங்கள் வளர்ச்சி என்று சும்மா போலி ஆதாரங்களை காண்பிக்கிறார்கள்.

இறுதியாக நாம் உண்மையிலே அறிவாளிகளாக இருந்தால் திறமை மிக்கவர்களாக இருந்தால் நம்மால் ஏன் சாம்சங்க். எல்ஜி ஆப்பிள் மற்றும் டயோட்டா, ஹோண்டா ஹுண்டாய் போன்று பொருட்கள் மற்றும் கார்களை தயாரித்து உலக மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி ஒரு உயர்ந்த நிலையை பெறக் கூடாது.


அப்ப்டி செய்தால் அமெரிக்கா ஹெச்1 விசாவை கட்டுபடுத்தும் போது , அரபுநாடுகள் தங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத் வெளிநாட்டவர்களை கட்டுபடுத்தும் போது நாம் அலற வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா?

நம் நாட்டிலோ அனைத்து வளங்களும் உள்ளன. உலகின் மிகப் பெரிய வசதியான தொழில் அதிபர்களும் உள்ளனர். திறமமையான அறிவாளிகளான இந்திய மக்களும் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது  வேலை வாய்ப்பிற்காக இந்திய பொருளாதார்த்திற்காக மேலை நாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய அவசிய இருக்காது அல்லவா?

யோசிங்க அறிவாளி மக்களே

டிஸ்கி :  அமெரிக்க அரசின் 'எச்1 பி' விசா பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார்.

விரைவில் தீர்வு:இதுகுறித்து மத்திய சட்டத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: 'எச்1 பி' விசா நடைமுறையில், அமெரிக்க அரசின் புதிய கெடுபிடிகளால், இந்திய பொறியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில், திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் பணியாற்றுகின்றனர். அமெரிக்க அரசின் திடீர் நடவடிக்கையால், ஐ.டி., ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து, அந்நாட்டு அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம;. விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



அய்யா மோடி அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சரே அமெரிக்கா அந்த நாட்டு மக்களின் நலன் கருதி ஹெச்1 விசாவில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். உங்கள் கூற்றுபடி அமெரிக்க நிறுவனங்களில், திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் பணியாற்றுகின்றனர் என்றால் ஏன் மோடி அரசாங்கம் அவர்களை வரவேற்று இந்தியாவில் பணி அமர்த்தி இந்தியாவை வல்லரசாக்க கூடாது


அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments:

  1. தெளிவான விரிவான அலசல் தமிழரே

    ReplyDelete
    Replies
    1. நான் மேலெழுந்தவாரியாக சொல்லி சென்று இருக்கிறேன்..... அவ்வளவுதான்

      Delete
  2. இங்க அரசியல் புகுந்து விளையாடுவதால் பிந்தங்கியிருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அரசியல் புகுந்து விளையாடுகிறது அதனால்தான் இங்கும் பிரச்சனைகள் வருகின்றது

      Delete
  3. அருமையான தகவல்

    ReplyDelete
  4. நல்ல விவரமான அலசல். இப்போது அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு என்னென்ன மாதிரியான தொல்லைகள் காத்து இருக்கின்றன என்பதையும், வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரே பதிவில் எல்லாம் சொன்னால் பதிவு நீண்டதாகி படிப்பவர்களும் ஒரு வகையான சோர்வு எற்படும் அதனால் முடிந்த வரை சிறியதாக சொல்லி செல்கிறேன் இனி வரும் பதிவுகளில் இன்னும் சில விபரங்கள் நேரம் கிடைக்கும் போது சொல்லுகிறேன் நன்றி

      Delete
  5. Replies
    1. ஆஹா உங்களையும் யோசிக்க வைச்சிடுச்சா இந்த பதிவு

      Delete

  6. இந்தச் சூழலில் பிரச்சனைகளை
    மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியான
    அருமையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

      Delete
  7. சிந்தனையினை தூண்டும் பதிவு. நான் கல்வி துறையில் பணியாற்றி பின்னர் ஒரு பன்னாட்டு கம்பனிக்கு ஆராய்ச்சி துறையில் துறைசார் ரீதியில் செயல்பட்டவன் கூறுகிறேன். அறிவாளிகள் என்று பார்த்தால் எல்லா சமூகத்திலும் நல்ல அறிவாளிகள் இருக்கிறார்கள். இனத்தை வைத்து சிந்தனை முறையில் மாறுபாடு இருக்கலாம் அனால் ஒருசாரார் அறிவாளிகள் இனொரு இனத்தினர் முட்டாள்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    நம்மவர்களுக்கு நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சுதேசியம் சார்ந்த நாட்டு பற்று இல்லை. அந்த விஷயத்தில் நாம் முட்டாள்கள் தான் . நோக்கியா , சாம்சங் , யமஹா என்று எங்கு பார்த்தால் யாரோ செய்ததை பயன்படுத்தும் அடிமைக்கூட்டமே நாம். ஆட்டோமொபைல் துறையில் டாடா இண்டிகா, டாடா நானோ மஹிந்திரா கம்பெனியில் ஸ்யலோ, DRDO , இஸ்ரோ செய்யப்பட்ட ராக்கெட்டுகள் போன்ற சில வற்றை நம்மளுடைய சொந்த தயாரிப்பாக பெருமைப்படலாம்.

    அமெரிக்கர்களை முட்டாள்கள் என்று எப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பொறியியல் துறையில் அணைத்து நூலகளையும் அவர்கள் தான் எழுதுகிறார்கள் , அமெரிக்க பல்கலையில் தான் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. நம்மூரில் கல்வி துறையினை இருந்ததட்கே என்னை அதிகம் நோகடித்தவர்கள் படித்த கூட்டம் தான். ஏன் அமெரிக்கா போக வில்லை என்று என்று என்னிடம் கேட்காதவர்கள் மிகவும் குறைவு. அமரிக்கர்களிடமும் ஜெர்மனி காரர்களிடமும் எல்லாம் நாமே செய்ய வேண்டும் என்ற வெறி இருப்பதை பார்க்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தெளிவான மற்றும் விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி

      Delete
  8. உரிய வேலை வாய்ப்புகள் கிடைத்தால் இந்தியா திரும்பிவிட எவ்வளவோ பேர் ரெடி. இன்னொன்றையும் பார்க்கவேண்டும். அமெரிக்காவில் இருக்கும் சுய வாழ்வுக்கான சுதந்திரம் - குறிப்பாக இந்தியர்களின் இளம் மனைவிகளுக்கு- இந்தியாவில் கிட்டுவதில்லை. மாமியார் நாத்தனார் பிடுங்கல் இல்லாமல், சொந்தக்கரர்களின் திடீர் வரவுகள் இல்லாமல் இங்கே வாழும் வாழ்ககைக்காக்வே பெண்கள் அமெரிக்காவை விரும்புகிறார்கள். அவர்களே, தம் கணவர்களை இந்தியா திரும்பவிடாமல் செய்கிறார்கள். ஆவதும் பெண்ணாலே!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வது சரியென்றும் சொல்லாம் ஆனால் நீண்ட காலங்கள் இங்கு இருந்தவன் முறையில் பார்க்கும் போது அந்த மாதிரி பிடுங்கல் இல்லாமல் இருப்பதும் வாழ்வை மிக வெறுமையாக்குவது போலத்தான் இருக்கிறது

      Delete
  9. அமெரிக்கர்கள் முட்டாள் அல்ல.. பேராசைக்காரர்கள்.. இந்தியன் அறிவாளி அல்ல.. குறைந்த கூளியில் அதிகம் வேலை செய்யும் அடிமை..

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கர்களில் அறிவாளிகளும் முட்டாள்களும் உண்டு அது போல எல்லா நாட்டவர்களிடத்து இப்படி அறிவாளிகளும் மூட்டாள்களும் உன்டு இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கு அல்ல ஆனால் அமெரிக்கர்கள் சுயநலக்காரார்கள் அவர்களின் சுய நலத்தில் அமெரிக்கர்களின் பொதுநலமும் சேர்ந்து இருக்கும் ஆனால் இந்தியர்களின் சுயநலம் என்பது பொது நலத்தை சாராமல் தனிப்பட்ட ஒருவரின் தன்நலத்தை மட்டுமே சார்ந்த்ஹு இருக்கிறது

      Delete
  10. சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு. அமெரிக்கர்களை முட்டாள்கள் என்பதும் / பேராசைக்காரர்கள் என்பதும் மிகத் தட்டையான பார்வை. எங்கு செலவு குறைவோ அங்கு அந்த செயலை செய்கிறார்கள். இப்போதைக்கு இந்தியா நல்ல சாய்ஸ். அவ்வளவுதான். கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதே ரொமேனியா / ஆர்மீனியா / உக்ரைன் போன்ற ஈஸ்ட் ஐரோப்பிய நாடுகள் மென்பொருள் வேலைகளை எடுத்துக் கொள்வதில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். செலவும் குறைவு.

    ReplyDelete
  11. ஐரோப்பிய, அமேரிக்கர்களுடன் ஒப்பிடும் போது இந்தியர்களும் இலங்கையர்களும் பொறுமை, விட்டுக்கொடுத்தல்,புரித்துணர்வு,வெள்ளைத்தோல் காரன் என்றாலே அவன் படித்தவன் எனும் எண்ணம், அடுத்தவனை விடவும் தான் மேம் பட்டவன் என தலைமைக்கு நிருபிக்க முயற்சி இத்தனையுடன்.... கணக்கு போடுவதிலும் புலியாக இருப்பதும் கூட பிளஸ் தான். ஒரு வேளை நமது கல்வி முறையில் மனனம் வாய்ப்பாடு என நம் கல்வி முறை அவர்கள் ஒன்று இரண்டு என எண்ணி முடிப்பதற்கிடையில் நம்மவர் மனக்கணக்கை ஒரே நொடியில் போட முடிகின்றதோ என்னமோ. அதையும் உடனடியாக கிரகித்து முடிவெடுக்கும் தன்மை நம்மவர்களுக்கு அதிகமே!

    ReplyDelete
  12. உண்மையில் நம் இந்தியர்கள் அதிலும் தென் இந்தியர்கள், இலங்கையர்களுடன் ஏனைய நாட்டு மக்களை ஒப்பிடும் போது நாம் அறிவாளிகள் தான், ஆனால் அதைசரியாக பயன் படுத்த முடியாத நிர்வாகம், நமக்குள் இல்லாத ஒற்றுமை, நான் அழிந்தாலும் நீ நன்றாக வரக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் உடனிருந்தே முதுகில் குத்துவது என பல காரியங்களால் நாம் நம்மை அழித்து கொள்கின்றோம்

    இதையெல்லாம் நீக்கி எங்கள் திறமைகள், ஆற்றல்களுடன் சரியான நேரத்தில் திறமையான நிர்வாகத்தின் கீழ் நம்மை வெளிப்படுத்த ஆரம்பித்தோமானால் நம்மை வெல்ல யாரும் இல்லை என நான் சொல்வேன்.

    ReplyDelete
  13. பல கண்டுபிடிப்புக்களுக்கு அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் சொந்தக்காரராக இருக்கலாம், ஆனால் அதன் அஸ்திபாரம் நம்மிடமிருந்தே இருக்கும், அதிலும் காப்புரிமை எனும் பெயரில் தன்னுடையதாக உரிமை கொண்டாடும் பல கண்டுபிடிப்புக்களுக்கும்,பொருட்களுக்கும் நாம் உரிமைக்காரராகவும் இருந்திருப்போம். நம் சமுகத்தில் இருக்கும் மெத்தனம்,பொறாமை, சோம்பேறித்தனம் நம்மை நிர்மூலமாக்குகின்றது.இந்தியர் என்பதை தாண்டி உலகத்தமிழினம் என நாம் இணையும் போது யூதர்களுக்கு நிகரான ஆற்றல், அறிவு கொண்டவர்களாகுவதும் சாத்தியம்.

    ReplyDelete
  14. நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு...சொல்ல நினைத்த பதில்கள் திரு ராமஸ்வாமி அவர்களிடமிருந்தும் உங்களின் அனைத்துப் பதில் கருத்துகளிலுமே வந்துவிட்டது!!

    கீதா

    ReplyDelete
  15. நாம் அறிவாளிகள்தான்...
    ஆனால் நம் அரசியல்வாதிகள் அறிவாளிகள் அல்லவே...
    அரசியல் மட்டுமே ஆளும் நாட்டில் அறிவாளிகள் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே..

    ReplyDelete
  16. அது என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள் ?
    உலகத்தில் உள்ள அறிவுக்கெல்லாம் ஏக போக உரிமை ( Monopolistic rights )எடுத்துள்ள என்னை மாதிரி நிறையப் பேர் இருக்கிறோமாக்கும் ......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.