கமான் மோடி சாப் கமான் / பயப்படுகிறாயா குமாரு ? (அரசியல் கொத்துபுரோட்டா) அனைத்து கட்சிகளும் இங்கே கொத்தப்படு
உத்திர பிரதேசத்தில் 324 சீட்டுகளை கைப்பற்றிய்ய பாஜகவிற்கு தமிழகத்தில் ஆர்கே நகர் தொகுதியில் களம் இறங்க பயமாக இருக்கிறதா என்ன? நாட்டுக்கு நன்மைகள் பல செய்ததினால்தான் நீங்கள் இப்படி அமோக வெற்றி பெற்று இருக்கிறீர்கள் என்று உங்கள் கட்சிகாரார்கள் கூறுகிறார்கள் அப்படி சொல்லும் உங்கள் கட்சிகாரர்கள் தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்று உங்களுக்கு சொல்லவில்லையா?..
உத்திர பிரதேசத்தில் 324 சீட்டுகளை பெற்ற நீங்கள் நிச்சயம் இந்த தொகுதியில் மற்ற வேட்பாளர்களைவிட உங்கள் கட்சி வேட்பாளர் 324 வோட்டுகளை பெற்று நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உங்களுக்கு நம்பிக்கை இல்லையா
தமிழர்கள் வைச்சு செய்வாங்க ஆனால் நல்லவர்களுக்கு நிச்சயம் கைகொடுப்பாங்க அதனால் நீங்க நல்லவராக இருந்தால் தைரியமாக வாங்க
.கமான் மோடி சாப் கமான்
==================================================
ஆர்கே நகர் இடைதேர்தலுக்கு மற்ற கட்சியிடம் ஆதரவு கேட்கிறார் என்ற செய்தியை படித்தேன்... அப்போது என் மனதில் எழுந்தது இதுதான் அதிமுக மூன்றாக உடைந்திருக்கிறது திமுகவின் பொது மற்றும் வானாளவிய அதிகாரம் படைத்த எதிரியான ஜெயலலிதாவும் களத்தில் இல்லை. போன தேர்தலில் அடித்து சுக்கு நூறாகக்கப்பட்ட தேமுதிக கூட தனித்து போட்டி என்று களம் இறங்கி இருக்கிறது ஏன் நேற்று பெய்த மழையில் முளைத்த தீபா கூட தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டார். ஸ்டாலினுக்கு இணையாக போட்டி போடு அன்புமணியும் களத்தில் இல்லை... இப்படிபட்ட சூழ்நிலை இருந்த போதிலும் சின்ன பையன் ஸ்கூலுக்கு போக பயந்த மாதிரி இந்த தேர்தலில் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவை என்று அறிவிப்பது இவர் மீது இவருக்கே நம்பிக்கை இல்லாத மாதிரி அல்லவா இருக்கிறது.
ஸ்டானினோ இப்படி பேச அவர் கட்சியினரோ சமுக வலைதளங்களில் அடுத்த ஆட்சி எங்கள் தளபதியின் ஆட்சிதான் என்று கம்பெடுத்து சுத்தாத குறையாக வாய்சவுடாவில் இறங்கி இருக்கிறார்கள்
=================================
தமிழகத்தில் நிம்மதி இல்லாத ஆட்சி நடைபெற்று வருவதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
வேறொன்னும் இல்லை.. நேற்று பெஞ்ச மழையில் முளைத்த எடப்பாடி கூட முதல்வராகிவிட்டதால, அண்ணன் இப்படித்தான் தூக்கத்துல பொலம்புறாப்புல..
sta
---------------------------------------------------------
நல்லவேளை தமிழக மக்களுக்கு ஹிந்தி பயன்பாடு அதிகம் இல்லை அப்படி இருக்குமேயானால் தமிழக மக்களும் உத்திரபிரதேசமக்கள் போல மிக அறிவாளிகளாக இருந்து இருப்பார்கள்.
திராவிடகட்சிகளால் கடந்த 50 ஆண்டுகளாக என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு உத்திரபிரதேசத்தை பாருங்கள் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் என்று ஏற்படாது என்பதுதான் அதன் பயன்... அதனால என்ன் சீண்டுனாலும் தமிழகத்தில் பாஜக பருப்பு வேகாது
திராவிட கட்சிகள் தமிழக மக்களை மூட்டாள்களாக ஆக்கி இருப்பதால்தான் உத்திர பிரதேச மக்கள் போல தெளிவாக சிந்திக்க முடியாமல் இருக்கிறார்கள்.
---------------------------------------
உபி தேர்தல் முடிவு
ஒரு மாநிலத்தில் மக்கள் பாஜகவை முழுமையாக ஆதரித்து இருக்கிறார்கள் என்பதை வைத்து மோடியின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் அனைவரும் அங்கிகரித்து இருக்கிறார்கள் என்பது முட்டாள்தனமான எண்ணம். காரணம் ஒரு மாநில மக்களின் எண்ணம் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் எண்ணம் இல்லை...மேலும் மோடியின் அந்த உபி வெற்றி அவரது செயல்பாடுகளால் கிடைத்த வெற்றி என்பதைவிட அந்த மாநிலத்தை ஆண்ட அப்பா மகனின் செயல்பாடுகளால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவும் இருக்கலாம் என்பது கவனிக்க தக்கது ,,இல்லை இல்லை மோடியின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் அங்கிகரித்ததினால் இந்த் வெற்றி என்றால் மற்ற மூன்று மாநிலங்களும் இந்தியாவில் இல்லாமல் பாகிஸ்தானிலா இருக்கிறது என்றால் அதற்கு பதில் பாஜகவினரிடம் இல்லை
மத்திய ஆட்சியின் கொள்கை முடிவுகளுக்கு இது கிடைத்த வரவேற்பல்ல. அப்படி நினைத்து மக்கள் வாக்கு அளித்து இருந்தால் அவர்கள் மோசமான முடிவுகளை ஆதரித்து வாக்கு அளித்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள் அப்படி இருக்கும் என்றால் இதன் பின்விளைவுகளுக்கு மக்களே பொறுப்பாவார்களே தவிர மத்திய அரசு அதற்கு பொறுப்பு அல்ல
என்ன மக்களே கொத்து புரோட்டா உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
என் பதிவுகளை தொடர்ந்து படிக்க
Follow அவர்கள்...உண்மைகள் on Google Plus
Follow அவர்கள்...உண்மைகள் on Twitter
If you love அவர்கள்...உண்மைகள் like it on Facebook
Follow அவர்கள்...உண்மைகள் on Google Plus
Follow அவர்கள்...உண்மைகள் on Twitter
If you love அவர்கள்...உண்மைகள் like it on Facebook
நம்பிக்கையே வாழ்க்கை
ReplyDeleteஆமாம்
Deleteஆர்கே நகர் இடைத்தேர்தல் நிறைய பதிவுகளுக்கு இடமளிக்கும் என்று தெரிகிறது! தீபா கூட யார் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்? எனவேதான் தனித்துப் போட்டி! விஜயகாந்த் தனித்துப்போட்டி என்று முதலில் முடிவெடுத்து விட்டார். எல்லோருமே தனித்தனியாக நின்றுதான் பலத்தை நிரூபிக்கட்டுமே...
ReplyDeleteஇடைத்தேர்தல்கள் என்னை போல உள்ள பதிவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம் ஹீஹி
Deleteகொத்து அரசியல் அருமையானசாடல்! ஆனாலும் பாஜாக்காவுக்கு தமிழகத்தில் மலர்ச்சி இல்லை என்பதே நிதர்சனம்.
ReplyDelete
Deleteபாஜக இப்படியே பல தமிழக தலைவர்களை வைத்திருந்தால் அதற்கு மலர வாய்ப்பில்லை தமிழக பாஜகவீற்கு புதிய தலைவர்கள் தேவை
விஜய்காந்துக்கு மக்கள் ஆதரவு மீண்டும் கிடைக்கும் என நம்புவோமாக)))
ReplyDeleteவிஜயகாந்த் நேரடியாக அவரே போட்டில் இறங்கி இருந்தால் அதற்கு வாய்ப்புக்கள் அதிகம் ஆனால் அப்படி இல்லையே
Delete1)அவரு நம்ம மாதிரி காமன் மேனா என்ன? பயப்பட. அவர் படா'சூப்பர்மேன்' மேன். (பய மொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயப் படாது.)
ReplyDelete2)எப்டியாவது! கெலிக்கனும்? இல்லாட்டி ஜனங்க நம்மளையும் பூட்ட கேஸுன்னு நெனச்சிடுவாங்க.
3)தமிழ் நாட்டுக்கு அடுத்த அபாய அறிவிப்பு?
கடைசியா தமிழனுக்கு ஒரு எச்சரிக்கை!. இப்டியே செஞ்சிட்டிருந்தா! சூனா சாமி கிட்ட புடிச்சி குடுத்துடுவோம்.
யோப் ஏனாய்ய்யா என்னை இப்படி மிரட்டுற
Deleteயாரு என்ன கம்பு சுத்தினாலும் சசிகலா அதிமுகதான் ஜெயிக்கும்
ReplyDeleteஇப்படி தாய்குலமே சொன்ன பிறகு அதில் எப்படி மாற்றம் ஏற்படும்
Delete:) :)
ReplyDeleteவழக்கம்போல சரவெடி
ReplyDelete