Sunday, March 5, 2017

avargal unmaigal
தமிழக நீதிபதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களா?

தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்த  நீதிபதிகள் ஏ. செல்வம் & பி.கலையரசன். அவர்கள் ஆனால் தீர்ப்பு அளிக்கும் முன் அவர்களுக்கு இந்த தகவல் தெரியவில்லை போலும் .அல்லது தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு இப்படித்தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அட்வைஸ் பண்ணி இருக்கிறது என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும் அல்லது ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் திறமை இந்த நீதிபதிகளுக்கு இல்லை என்றுதான் நினைக்க தோன்றுகிறது

.இந்தியாவின் நீராதார துறை (Central Water Commission) அறிக்கைப்படி, பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரிநீர் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் இல்லை. தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே(Water guage) கிடையாது. எந்த இடத்தில் ஓடும் நீரை உபரி நீர் என்கிறார்கள். அப்படியே உபரி நீர் இருந்தாலும், அதை எப்படி ஒரு தனியார் நிறுவனத்டிற்கு எடுக்க அனுமதியளிக்க முடியும்?

தண்ணீர் என்பது ஒரு அடிப்படையான பொது வளம். அது விற்பனை பண்டம் அல்ல. அது முதலில் அங்குள்ள பொது மக்களின் பயன்பாட்டுக்கும் அடன் பிறகு  விவசாயத்துக்கும் முன்னுரிமை கொடுத்து  தரப்பட வேண்டும் ஆனால் இப்போடு வறட்சி ஆர்ம்பித்து இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு சாதகமாக இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ( தமிழக் நிறுவனங்களுக்கும் ) சாதகமாக தீர்ப்பு அளித்து இருப்பது மிக தவறான செயல்.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ஏ. செல்வம் & பி.கலையரசன் சமூக பார்வையுடன் நீதி வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் வழங்கவில்லையோ என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு மிக அவசியம் ஆனால் அது இந்திய வளங்களை அழிக்காமல் மக்களுக்கு பயன்படும் விதமாக இருக்க வேண்டும்

தண்ணீர் இல்லை. குடிக் கவே தண்ணீர் இல்லை. அங்கு சாக்கடைதான் ஓடுகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது. தண்ணீர் பிரச்சினையில் சட்டப் பார்வை மட்டு மின்றி, சமூக பார்வையுடன் நீதி மன்றம் அணுகியிருக்க வேண்டும்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

#thamirabarani River  #justice A Selvam and justice P Kalaiyarasan
05 Mar 2017

2 comments:

  1. 'மண்ணை'யும், நண்'நீரை' யும், 'காற்றை' யும், காசுக் காக மாசுபடுத்தும் கொடியோர் நிறைந்த நாடாகி விட்டது.

    ReplyDelete
  2. மதுரைத் தமிழன் நம்மூர் தாமிரபரணி கொஞ்சம் உறுப்படியா இருந்துச்சு அதையும் அழிக்கப்பாக்குறாங்க....ஏற்கனவே பாலாறை அழிச்சாச்சே!!! லெதர் டான்னரி கழிவு போய் நிலத்தை நாசமடித்து மணல் கொள்ளை அது இது என்று.பாலம் மட்டும்தான் இருக்கு..தண்ணி??????..நம்ம ஊருல எந்த ஆறுதான் உருப்படியா இருக்கு சொல்லுங்க..சும்மா நாலும் பாரத பூமி பழம் பெரும் பூமி....ஞானிகள் வாழ்ந்த ஆறு அது இது என்று கதைகள் உலாவும் அளவு அதைப் போற்றிப் பாதுகாப்போர் இல்லை.

    கீதா

    தலைமையகத்தில் இணையம் வேலை செய்ய மாட்டேங்குது..வரும் ஆனா வராது என்ற நிலை. அதான்தளங்களுக்கு வர முடியலை...இடையிடையில் இணையம் வரும் போது வர முயற்சி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.