ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஆரம்பத்திலே திமுக சறுக்கிறதா?
ஆர்.கே நகர் இடைத்தேர்தல், தமிழகத்தில் முக்கிய தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதா களத்தில் இல்லாத நிலையில் வரும் தேர்தல் ஆகும். இந்த தேர்தல் அடுத்த கட்ட தலைவர்களை அடையாளம் காணப்போகும் தேர்தலாகத்தான் இருக்கும், இந்த தேர்தலில் பல கட்சிகள் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்து களத்தில் இறங்கி இருந்தாலும் அங்கு முக்கிய அணியாக காணப்படுவது முன்று அணிகள் தாம் ஒன்று சசி அணி ( அதிமுக) பன்னீர் அணி ( அதிமுக ) அடுத்தாக ஸ்டாலின் அணி (திமுக
அதிமுக முன்று அணிகளாக பிரிந்து இருக்கிறது என்று சொன்னாலும் தீபா அணி காமடி பீஸ் அணிதான் அதனால் பிரச்சனை ஏதும் இல்லை ஆனால் பன்னீர் அணி, சசி அணி என்ற அணியை கவனித்தோமானால் சசி அணிக்கு அதன் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கட்சியின் செயலாளர்கள் என்று பலர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில் அதிமுகவின் தொண்டர்கள் பன்னீரை ஆதரிக்கிறார்கள் என்று சமுக ஊடகங்களில் பேசப்பட்டாலும் உண்மையில் அவர்கள் பன்னிரைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை சமுக தளங்களில் பேசப்படும் பல விஷயங்கள் பல சமயங்களில் உண்மையாக ஆவதில்லை என்பது பலதடவை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் பன்னீருக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளிக்கிறார்களா அல்லது சசி அணிக்கு ஆதரவு அளிக்கிறார்களா என்பது தேர்தலின் முடிவுக்கு அப்புறமே உறுதியாகும் .அதுமட்டுமல்ல இரட்டை இலை முடக்கபடுமா அல்லது யாரவது ஒரு அணிக்கு போகும் என்பதை பொறுத்தும் முடிவுகள் மாறும். அதுமட்டுமல்ல ஆட்சியை பிடிக்க கூவத்தூரில் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்தவர்கள் ஆட்சி நிலை கொள்ள இன்னும் அதிகமாகவே வாரி இறைப்பார்கள். ஆனால் பன்னீரோக்கோ பணத்தை வாரி இறைக்க மனதே வருவதில்லை
ஒருவேளை அதிமுக தொண்டர்கள் பிரிந்தால் அடுத்தாக நிற்கும் ஸ்டாலினுக்கு வாய்ப்பு வரும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள் ஆனால் ஒன்று மட்டும் பலருக்கும் புரியவில்லை எந்த கட்சி ஜெயிக்க வேண்டுமானாலும் அதற்கு அந்த கட்சியின் தொண்டர்களை விட நடுநிலையாக நிற்க்கும் பொது மக்களின் வோட்டு எந்த திசையை நோக்கி போகிறது என்பதை பொறுத்துதான் அமையும் .இப்படி பொது நிலையில் இருக்கும் பொதுமக்களின் மனதை மாற்றுவதில் இன்றைய ஊடகங்கள் மற்றும் சமுகதளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றது..
அப்படி இந்த இரண்டுகாரணிகளை எடுத்து பார்க்கும் போது திமுக ஆரம்பத்தில் சறுக்கி வீழ்ந்து இருக்கிறது என்றுதான் சொல்ல முடிகிறது அதற்கு காரணமாக சொல்லவது ஸ்டாலின் அவர் தன் மீது நம்பிக்கை இல்லாமல் மாற்று கட்சிகளை தமக்கு ஆதரவு தருமாறு கேட்டு இருக்கிறார் ஆனால் அவருக்கு எந்த ஒரு சிறு கட்சிகளும் ஆதரவு தரவில்லை இப்படி அவர் பகிரங்கமாக கேட்டு இருப்பதற்கு பதிலாக தமக்கு அடுத்த நிலையில் திமுகவில் நம்பிக்கை உரியவர்களை கொண்டு இந்தசிறு தலைவர்களை மறைமுக தொடர்பு கொண்டு அவர்களை எளிதில் வளைத்து இருக்கலாம் அப்படி செய்யாமல் கோட்டைவிட்டு இருக்கிறார் என்றே கருதப்படுகிறது அடுத்தாக அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர் அதிக பிரபலமில்லாத நபராகவே இருக்கிறார் கொஞ்சம் பிரபலமாக இருக்கும் நபரை அறிவித்து இருந்தால் வெற்றி வாய்ப்பு திமுகவிற்கு சற்று அதிகம் இருந்திருக்கும். இந்த தேர்வை பல ஊடகங்களும் சமுக வலைதளங்களும் மிகவும் விமர்சனம் செய்வதை பலரும் பார்த்திருப்பீர்கள் .ஸ்டாலின் இப்படி ஆரம்பத்திலே சருக்கலாக தன் போட்டியை ஆரம்பித்து இருப்பது நல்ல அல்ல என்றுதான் படுகிறது
ஆனால் சமுக வலைதளங்களில் உள்ள உடன்பிறப்புகள் இந்த தேர்வை சப்பக்கட்டி, இங்கு நிற்பது இந்த வேட்பாளர் அல்ல நிற்பது ஸ்டாலின்.தான் உதய சூரியன் சின்னம்தான் என்று பேசுகிறாகள் இவர்கள் பேசுவதே இந்த வேட்பாளருக்கு நெகடிவ் இம்பெக்டைதான் தருகிறது என்பதை புரியாமல் அவர்கள் அதிகம் பேசுகிறார்கள்
ஒரு வேளை திமுக இங்கு தோற்றுவிட்டால் அது திமுகவின் வேட்பாளரின் தோல்வியாக பார்க்கபடாமல் அது ஸ்டாலினின் தோல்வியாக பார்க்கப்படும் என்பதை அறியாமல் உடன்பிறப்புகள் கம்பு எடுத்தும் சுற்றுகிறார்கள் இது எதிர்கால ஸ்டாலினின் நிலையை பாதிக்கும்...
என்னைப் பொறுத்தவரை ஒட்டப் பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கும் போது ஸ்டாலின் சற்று வழுக்கி விழுந்து ஒட ஆரம்பித்து இருக்கிறார் அவர் கிழே விழுந்தாலும் சினிமா ஹீரோவை போல இறுதியில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
வணக்கம்
ReplyDeleteவழுக்கி விழுபவர்கள் வெல்வது என்றால் எல்லாவற்றுக்கும் பணம் காரணம்...பார்க்கலாம் காலம் பதில் சொல்லும்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பொறுத்து இருந்து பார்ப்போம்
Deleteஅருமையாக அலசி உள்ளீர்கள் நண்பரே
ReplyDelete
Deleteஎன் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் அது சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் போகலாம்,, பொறுத்து இருந்து பார்ப்போம்
பாஜக கங்கை அமரனை நிறுத்தியிருக்கிறது.
ReplyDeleteகடைசியில் தைரியம் வந்து இறக்கி இருக்கிறார்கள் நிச்சயம் பாராட்ட வேண்டும் ஜெயலலிதா இல்லாத போது தங்களுக்கு எந்த அள்விற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் காரணம் பாஜகவிற்கு கிடைக்க வேண்டிய வாக்குக்கள் ஜெயலலிதாவிற்கு ஆட்டோமேடிக்காக விழும் ஆனால் ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் அது இவரக்ளுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு நிச்சயம் இவர்களுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கலாம்
Delete