உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 26, 2017

பெண்களே உங்களவரின் ஆண்மையை மிக எளிதாக சோதிக்க புதிய தொழில் நுட்பம்

avargal unmaigal
பெண்களே உங்களவரின் ஆண்மையை மிக எளிதாக சோதிக்க புதிய  தொழில் நுட்பம்


பெண்கள் எப்படி மிக எளிதாக  தங்களது கருத்தரிப்பு பரிசோதனைகளை (pregnancy test) மேற்கொள்ளகிறார்களோ அந்த அளவிற்கு மிக எளிதாக ஆண்மையை (sperm count) சோதித்து கொள்ள  சிறு உபகரணம் (device) ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த செலவு அமெரிக்க டாலர்க்கு 5 டாலர் மதிப்புதான். இதை நமது ஸ்மார்ட் போன் மூலம் பரிசோதனை செய்யலாம்'

இந்த சோதனை 98 சதவீதம் துல்லியமானது மற்றும்  இதற்கு எந்தவிதமான பயிற்சியும் தேவை இல்லை இந்த டெஸ்டை செய்ய  ஐந்து வினாடிகள் போதும். ArsTechnica  ரிப்போர்டில்  இந்த  சிப்  சாதன உற்பத்திக்கு வெறும் ஐந்து டாலர்தான் ஆகிறது  என்றும், மிகவும் மலிவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பு குழந்தைகள் வேண்டும் என்று முயற்சிக்கும் தம்பதிகளுக்கு மிகவும் உதவும் என்று நம்புகிறார்கள்

avargal unmaigal

GIF showing semen sample evaluated for sperm motility using smartphone attachment.
M.K. Kanakasabapathy et al., Science Translational Medicine (2017)]

உலகம் முழுவதுமாக பார்க்கும் போழுது 30 மில்லியன் ஆண்கள் ஸ்பெர்ம் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அதுமட்டுமல்ல வளந்துவரும் நாடுகளில் தம்பதிகள் பல நேரங்களில் க்ளினிக்கை எளிதில் அடையமுடியாத நிலையிலும் இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் சென்றாலும் இப்படி சோதனை செய்து பார்ப்பதற்கு பல டெஸ்ட்கள் செய்து பணம் பறிக்கும் நிகழ்வுகள் நடை பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியா அதுவும் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் கல்யாணம் ஆனபின் பலர் தங்களிடம் குறைகள் இல்லை. குறைகள் எல்லாம் பெண்களிடத்தே மட்டும் இருக்கிறது என்று கூறி க்ளினிக்கு சென்று சோதித்தால் தங்களுகளின் மதிப்பிற்கு இழுக்கு என்று கூறி செல்லாமல் உலாவருகிறார்கள் அப்படிபட்டவர்கள் கூட மிக எளிதில் வீட்டிலே தங்களை பரிசோதனை செய்து கொள்ளலாம்


இது மட்டுமல்லாமல் குடும்பக்கட்டுபாடு செய்து கொள்ளும் ஆண்கள் வசக்டமி (vasectomies ) செய்து கொண்ட பின்  அவர்களின் விந்து எண்ணிக்கை  அறிந்து ,தாங்கள் செய்து கொண்ட vasectomie சரியான முறையில் செயல்படுகிறதா என்று உறுதி செய்து அதன் பின் உறவு கொள்ள இந்த முறை பரிசோதனை பயன்படும்.

இந்த சாதனம் இப்படி எளிய மொபைல் போன் அடிப்படையிலான சோதனையை செய்ய உதவுகிறது என்று ArsTechnica தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது.

The test is an inexpensive smartphone attachment that quickly and accurately evaluates semensamples for fertility testing.
M.K. Kanakasabapathy et al., Science Translational Medicine (2017)


இந்த சாதனம் இப்போது விற்பனையில் இல்லை. இதற்கு காரணம் இதை தயாரித்தவர்கள் அதை வணிகரிதியாக மாற்ற FDA யின்  ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள், ஒப்புதல் வந்ததும் அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நாம் பெருமைபட கூடிய விஷயம் ஒன்று உண்டு அது என்னவென்றால் இதன் ஆராய்ச்சியில் நமது இந்தியர்களுக்கும் பங்கு உண்டு என்பதுதான் அது. இந்த பாரஜெக்டில் பணிபுரிபவர்களின் பெயர்கள்  Manoj Kumar Kanakasabapathy, Magesh Sadasivam1,*, Anupriya Singh Collin Preston, Prudhvi Thirumalaraju, Maanasa Venkataraman, Charles L. Bormann, Mohamed Shehata Draz, John C. Petrozza and Hadi Shafiee

இவர்களின் இந்த ஆராய்ச்சி கட்டுரையை இந்த லிங்கில் சென்று படிக்கலாம் An automated smartphone-based diagnostic assay for point-of-care semen analysis 

ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த கட்டுரையை எனது பாணியில் இங்கே பதிவாக மாற்றி தந்திருக்கிறேன்
ஆங்கிலத்தில் வெளியிட்டவர் Beth Mole என்பவர். Courtesy Thanks : Beth Mole


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : அரசியல் பதிவே உங்களிடம் இருந்து அதிகம் வருகிறது அதனால் எங்களால் உங்கள் தளத்தில் கருத்துக்கள் இட தயக்கமாக இருக்கிறது என்று சொல்பவர்களுக்காக கடந்த பதிவில் உங்களுக்காக சமையல் பதிவும் இந்த தடவை தொழில்நுட்ப பதிவையும் வெளியிட்டு இருக்கிறேன் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் இது என்னுடைய 1701 வது பதிவு...

உங்களின் தொடர் ஆதரவினால்தான் இவ்வளவு பதிவுகள் என்னால் இட முடிகிறது...  உங்களின் ஆதரவிற்கு எனது மனம்மார்ந்த நன்றிகள்

#semen #analysis using #smartphone

18 comments :

 1. வாழ்த்துகள்!1701 பதிவுகள்!சாதனை!தொடரட்டும்!

  ReplyDelete
  Replies

  1. வாழ்த்திற்கு மிகவும் நன்றிகள் ஐயா

   Delete
 2. 1701 சாதனைதான் தமிழரே விரைவில் 7001 ஆகட்டும்

  ReplyDelete
 3. நல்லதொரு பதிவு ..அசோக மரம் பூப்பூக்கவில்லைன்னு ஒரு கதை இந்த ஆண்கள் குறைகளை மறைத்து திருமணம் செய்வது பற்றின கதை நினைவுக்குவருது ..பெரும்பாலான குழந்தையில்லா பிரச்சினைக்கு காரணம் pcos மற்றும் இந்த sperm நம்பர்ஸ் தான் ..
  ஆனா இப்போ தடுக்கினா டைவர்ஸ் எனும் ஒன்று நம்ம நாட்டிலும் வேகமா வளருதே அதான் கொஞ்சம் இந்த டிவைஸ் பற்றி யோசிக்கும்போது கொஞ்சம் பயமும் வருது ..நல்லது மட்டும் நடந்தால் சரி ..

  1701 !!!!! பதிவுகள் !!!!அம்மாடியோவ் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies

  1. டைவர்ஸ் அதிகமாவதற்கு காரணம் இந்த கால ஜோடிகளிடம் விட்டு கொடுத்து வாழனும் என்ற மனமுதிர்ச்சி இல்லாததுதான் காரணம்

   Delete
 4. புதிய, நல்ல செய்தி.

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசமாக ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தால் வந்த பதிவு இது

   Delete
 5. மிகச் சிறந்த நூல்களை அல்லது ஆராய்ச்சிகளை அந்த ஆசிரியர்களின் SEMINAL WORK என்று கூறுவதுண்டு. மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய உங்களின் இந்தப் பதிவை SEMEN-AL WORK என்று கூறலாமா? சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி.

  ReplyDelete
  Replies

  1. பதிவை போட்ட எனக்கு இந்த அளவு பாராட்டா இப்படி பாராட்ட ஆள் இருந்தால் ஒரு புதிய படைப்பையே படைத்திருக்கலாமே என்று தோன்ருகிறது

   Delete
 6. மிகவும் பயனுள்ள தகவல் மற்றும் செய்தி!

  நம் நாட்டிற்கு இது வொர்கவுட் ஆகுமா தெரியலை...

  அப்புறம் வாழ்த்துகள்!!! இன்னும் நிறைய பதிவுகள் எழுதி எல்லோரையும் கலகலக்க வைக்கும் சாதனை படைத்திட வாழ்த்துகள்!

  --இருவரும்...
  பதிவை அப்போதே வாசித்துவிட்டோம். ஆனால் தலைமையகத்தில் நெட் போயிருச்சு...மொபைலில் கருத்திட முடியலை...ஸோ இப்ப....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த டிவைஸ் நம் நாட்ட்டிற்குதான் மிகவும் பயன்படும் விலையும் மிக குறைவு

   Delete
 7. உங்கள் தலைப்புகள்தாம், கவர்ந்து இழுத்து எல்லாரையும் படிக்க வைத்துவிடுகின்றன! ஜெயகாந்தன் சிறுகதை மற்றும் நாவல் தலைப்புகளே மிகவும் புகழ்பெற்றவை! அவற்றையே எடுத்து ஆய்வுசெய்தோரும் உண்டு! அப்புறம் தொழில்நுட்பம் இருக்கவே இருக்கிறது! அசத்துங்கள்..வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. மாங்கு மாங்கு என்று கஷ்டப்பட்டு எழுதியைத பலரும் படிக்காமல் போவதற்கு காரணம் சரியான தலைப்ப்புகள் இல்லாதததால்தான் அதை புரிந்தால் நல்லது பல பதிவர்கள் இதை கண்டுக்கொள்வதே இல்லை


   இப்போது பலரும் நம்புவது பேஸ்புக்கில் எழுதினால்தான் பலரும் பார்க்கிறார்கள் கவனிக்கிறார்கள் படிக்கிறார்கள் என்று ஆனால் அப்படிபட்ட நம்பிக்கையை நான் உடைத்து மக்களை பேஸ்புக்கில் இருந்து இங்கே வரவழைத்து கொண்டிருக்கிறேன் என்ன அங்கு லைக் பட்டன் இருக்கும் அதில் எத்தனை லைக் விழுந்திருக்கிறது என்று பார்த்து பெருமைப்படலாம் ஆனால் அங்கு வரும் லைக்கை விட எனக்கு கிடைக்கும் ஹிட் என்னை சந்தோஷமாக்க வைக்கிறது

   Delete
 8. //அரசியல் பதிவே உங்களிடம் இருந்து அதிகம் வருகிறது//// இப்பூடி ஆரு சொன்னாங்கோ:) சொன்னவர்களைக் கொஞ்சம் கூட்டியாங்கோ:)..

  சரி சரி அதை விடுங்கோ... 1701... அம்மம்மா.. என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியவில்லை.. அதுசரி.. 1700 இல சொல்லியிருக்கலாம்.. அதென்ன இப்பபோய்ச் சொல்றீங்க.. சரி அதையும் விடுங்கோ.. வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்..

  ReplyDelete
  Replies

  1. 1701 வது பதிவு எழுதுபோதுதான் 1700 போஸ்டுக்கள் போட்டு இருக்கிறேன் என்று கண்ணில்பட்டது அதனால்தான் அதை இங்கே சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்

   Delete
 9. சுவாரஸ்யமும் இளமைத் துள்ளலும்
  கொஞ்சமும் குறையால் 1700 பதிவுகள்
  பிரமிப்பாகத்தான் இருக்கிறது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies

  1. எல்லாவற்றிற்கும் காரணம் உங்களைப் போல உள்ளவர்கள் தட்டிக் கொடுப்பதினால்தான் நன்றி

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog